நெடுஞ்சாலை கானமே - 8

கானம் - 8
நிழற்குடையின் கீழ் பள்ளிச் சீருடை அணிந்த மாணவர்களுடன் மாணவிகளாக நின்ற காலம் மாறி ஆசிரியர்களாக நின்று கொண்டிருந்தனர் தென்றலும் விழியும்.
பொடிசுகளிலிருந்து பெரிசுகள் வரைக்கும் அந்த ஒற்றைப் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்திருந்த நல்லக்கண்ணுவோ ஆடி அசைந்து அவர்கள் முன் வந்து நின்றது.
இனிப்பு பண்டங்களை, சாரை சாரையாக மொய்க்கும் எறும்புகளாக நிழற்குடையின் கீழ் நின்ற மக்கள் கூட்டம் நல்லக்கண்ணுவை சூழ்ந்து, அடித்துப் பிடித்துப் பேருந்தில் ஏறிக் கிடைத்த இடத்தில் அமர்ந்து விட்டனர்.
மொத்தக் கூட்டமும் ஏறி முடித்ததும் பொறுமையாகத் தோழிகள் இருவரும் ஏறினார்கள். அவள் ஏறவும் அவளுக்கென ஒலித்தது போலிருந்தது அப்பாடலும். கம்பியில் சாய்ந்து அவள் ஏறி வருவதைப் பார்த்தபடி நின்றிருந்தான் சேத்தன். உதடுகளின் இடுக்கே சிக்கிய விசிலும் பாவம் போல இருந்தது.
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
படிகளைக் கடந்து உள்ளே கூட்டத்தினுள் நுழைய, முன்னே இருந்தவனை இடிக்காமல் இன்ச் இடைவெளியில் நின்றிருந்தாள் அவள். அவன்பின் நகரவும் அவனை உரசாமல் முதல் சீட்டின் பக்கவாட்டில் கம்பியைப் பிடித்து நின்று கொண்டாள்.
உரசியும் உரசாமலும் போன தென்றலால் மயங்கிப் போனவன் இரண்டு படி இறங்கி நின்றான். விசில் சத்தம் கேட்காததால் வண்டியும் கிளம்பாமல் இருந்தது.
படியில் சாய்ந்து நின்ற சேத்தனின் முதுகில் தட்டி அவனை நினைவுலகிற்கு அழைத்து வந்தாள் அந்தச் சிறுமி.
"அண்ணே! ஸ்கூலுக்கு நேரமாச்சு விசிலடிண்ணே." என்றதும் அவன் 'விசில்' என நெஞ்சைத் தட்டி தேட, "வாயில தான் இருக்கு." என்றதும் இளித்து விட்டு விசிலை ஊதினான்.
வண்டியும் புறப்பட, விழியும் தென்றலும் நமட்டுச்சிரிப்புடன் நின்றிருந்தனர்.
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓஉள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓநெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓசொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
எனப் பாடலொலிக்க, அவனோ படிகளில் நின்று கம்பியைப் பிடித்து அவளைப் பார்த்தபடி தொங்கிக் கொண்டே வந்தான்.
படிகளில் தொங்கிக் கொண்டு நிற்பவனைக் கண்டு உள்ளம் பதைபதைக்க, கண்ணசைவில் மேலே வரச் சொன்னாள். முறுவலை அடக்கிக் கொண்டு அவனும் மேலே ஏறினான்.
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்குபறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...
விருந்துகொடு...
ம்ம்ம்ம்ம்மனசுக்குள்ள சடுகுடு சடுகுடுமயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடுஓஓஓ..
முன்னே நின்றவர்களிடம் பணத்தை வாங்கி பயணச் சீட்டை கொடுக்க ஆரம்பித்தான். அவளும் முன்னிருக்க அவளிடமும் பணத்தை வாங்கி பயணிச் சீட்டை கொடுக்க விரல் நான்கும் உரசின.
உரசலில் இருவருக்குள்ளும் மின்சாரம் பாய, அதன் பாதிப்பு இருவருக்குள்ளும் முரணாக இருந்தது.
அவளது தீண்டலில் அவன் முகமோ சூரியனின் பிரகாசத்தை கொண்டிருக்க, அவளது முகமோ சலனமற்று இருந்தது. பெரிதாக அவள் காட்டிக் கொள்ளவில்லை. அவனுக்கும் அது தெரிந்தது தான்.
காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...
ஓஓஓஉள்ள திக்கு திக்கு திக்குங்குது...
ஓஓஓநெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...
ஓஓஓசொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
தென்றலை கடந்து சென்றவனுக்கு அவள் சேலை தரும் வாசத்தையும் அவள் இயற்கை நறுமணத்தையும் நுரையீரல் வங்கிக்குள் சேமித்துக் கொண்டவன், சேலையின் தீண்டலைப் பொறாமையுடன் பார்த்துக் கடந்து சென்றான்.
அனைவரிடமும் வேகமாக பணத்தை வாங்கி பயணச்சீட்டை தந்து முடித்தவன், பேருந்து நிறுத்தத்தில் இறங்கி முன் வாயில் வழியாக ஏறிக் கொண்டான்.
அவள் இறங்கும் நிறுத்தம் வர மீண்டுமொரு மின்சார பாய்ச்சலுக்காக அவனது மனமும் உடலும் காத்துக் கொண்டிருந்தன.
அவளும் அவனை நெருங்கி வந்து நிற்க, அவள் நெருக்கத்தை அனுபவித்தவாறு விசிலடிக்க, பேருந்து நின்றது.
இந்த முறையும் அவனை உரசாமல் இறங்கினாலும் விழிகளால் அவனை உரசி விட்டுத் தான் இறங்கினாள்.
அவனைக் கடந்த சென்றவளைக் கொடுத்துச் சென்ற உணர்வுகளை அப்பாடல் வரிகளுக்குப் பொருத்தமாகிப் போனது.
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்..
குடியிருக்கேன்...ம்ம்ம்ம்
ஒடம்ப விட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ
ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சுதாப்பா தெரிச்சிடுச்சு---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓஉள்ள திக்கு திக்கு திக்குங்குது... ஓஓஓநெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...
ஓஓஓசொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது..
அவர்கள் இருவரும் இறங்கிட மீண்டும் விசிலடிக்க, வண்டி புறப்பட்டது. விழி வெறும் தலையசைவை மட்டும் கொடுத்தாள் மாறனுக்கு. வண்டி புறப்பட, இவர்கள் இருவரும் பள்ளியை நோக்கி நடந்தனர்.
"காதலிக்கலையாம், ஆனா காதல் படத்தை மட்டும் நல்லா ஓட்டு வாய்ங்கலாம். இவிங்க பூ சுத்த என்காது ஒன்னும் நாரு இல்லடீமா." என அலுத்துக் கொண்டாள் விழி.
"யாரு இங்க காதல் படத்தை ஓட்டுனது?" தன்னை தான் சொல்கிறாள் எனத் தெரிந்தும், எதுவும் தெரியாதது போல எதிர்க் கேள்வி கேட்டாள் தென்றல்.
அவளோ, "ஓட்டுனவங்க யாருனு அவங்க அவங்க மனசாட்சி சொல்லி இடிக்கும். நான் சொல்லித் தான் தெரியணும் எந்த அவசியமும் இல்ல!" எனச் சிலிர்த்துக் கொண்டாள்.
"என்னடி ஆச்சி ஒனக்கு? காலையிலே ஏன் இப்படி சிடுசிடுனு இருக்க?"
"பின்ன நீங்க பண்றதெல்லாம் பார்த்து வேற எப்படி இருக்கறதாம்? காதலிக்கிற நாங்களே அமைதியாகத் தான் வர்றோம். ஒரு தலைக் காதல்னு அவனும், காதலிக்கவே இல்லனு நீயும் பண்றதெல்லாம் பார்த்தா முட்டிக்கலாம் போல இருக்கு." என்றாள் கடுப்புடன்.
"அப்ப ஒன்னு பண்ணு உன் ஆள விசிலடிக்க சொல்லிட்டு, இவன வண்டியோட்டச் சொல்லி லவ்ஸ் பண்ணிட்டு வாங்க. இப்போ ஸ்கூல் வந்திருச்சு வர்றியா?" எனவும் அவளும் உதட்டைச் சுழித்துக் கொண்டு முன்னே நடக்க, தென்றலோ தலையில் அடித்துக் கொண்டு பின்னே சென்றாள்.
****
பேருந்து நிலையத்தில் நல்லக்கண்ணுவை நிறுத்தி விட்டு இருவருமாக வழக்கமாக சாப்பிடும் கையேந்தி பவனில் இரண்டு தோசையும் ஒரு வடையும் வாங்கி விழுங்கி விட்டு, நல்லக்கண்ணு அருகே வந்து நின்றனர்.
சேத்தன் அதன் மேல் சாய்ந்து நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
பயணிகள் பேருந்துகளில் இறங்கவும் ஏறவுமாக இருந்தனர். அதனைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குப் பின்னால் தன்னை பாவம் போலப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜீவனைக் கவனிக்கவில்லை.
அவனும் பார்வையை மாற்றவில்லை. யாரோ தன்னை குறுகுறுவென பார்ப்பது போலிருக்க, திரும்பியவனுக்கு அது நெடுமாறனாகத் தெரிந்தது.
அவனது பார்வையை உள் வாங்கியவனுக்கு அதன் பின்னிருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல், "என்ன?" எனப் புருவத்தை ஏற்றி இறக்கி வினவினான்.
கடுப்புடன் பின் நின்ற நல்ல கண்ணுக்கு இரண்டு முறை முஷ்டியால் முத்தம் கொடுக்க, அவனது ஆத்திரம் புரிந்து நக்கல் சிரிப்புடன்,
"நீ தான் என் ஸ்டேஜ் கடந்து வந்துட்டீயே. அப்போ ஒனக்கு என் நிலமை புரியும் தான மாறா."
"டேய் அதுக்குனு இப்படியா? நான் என் ஆளு முகத்தைக் கூட கடைசியாக தான்டா பார்த்தேன். ஆனா நீ முடியலடா. பாட்டுப் போடறதும் அவளைத் தாண்டி போறதும், அதுலையும் ஒரசாம போறதும், மேலே வா இவுக கண் ஜாடைக் காட்றதும் நீயும் ஏறி வரதும். டிக்கெட் கொடுக்கறதும் விரலு ஒரசுறதும், போங்கடா காதலிக்கிற நாங்க கூட இவ்வளவு சீன் போடல டா!" என வராத கண்ணீரை துடைத்தான்.
சேத்தனோ வாய்விட்டே சிரிக்க, "சிரிக்காத மச்சி. சீரியஸா கேக்குறேன் இரண்டு பேரும் லவ் பண்றீங்க தான? ஊர் உலகத்து தெரியக் கூடாதுனு மறைக்கறீங்க? அப்படி தானே."
"ஒன் கிட்ட ஏன் மாறா மறைக்கப் போறேன்? என் மேலே அவளுக்குக் காதல் இருக்கு. ஆனா அத சொல்ல எங்கிட்ட தயங்கறா மாறா. என்ன காரணமுண்டு தான் எனக்கு புரியல. அவ மட்டும் என்னை லவ் பண்றேன் சொல்லட்டும் என் ஆத்தாவா இருந்தாலும் பரவாயில்லண்டு அவளுக்குத் தாலிய கட்டி என் பொண்டாட்டியா ஆகிடுவேன். என் மேலே காதலையும் தாண்டி அவ மனசுல கோபம் இருக்கு, அது எதுக்குனு தான் விளங்கல்ல. கண்டு பிடிக்கணும் மாறா. ஒரு பக்கம் என் அம்மாக்கு அவ குடும்பத்து மேலே ஏன் வெறுப்புண்டு கண்டுபிடிக்கணும். இவளுக்கு என் மேலே என்ன கடுப்புண்டு கண்டுபிடிக்கணும். அது தெரிஞ்சதுனா போதும், இந்த சேத்தன் தீயா வேலை செஞ்சாவது பிரச்சினை தீர்த்து வச்சு என் அம்மா வாயலே கட்றா தாலிய சொல்ல வச்சி, நான் அவ கழுத்தில தாலி கட்டு வேண்டா." என்று நல்லக்கண்ணுவை அடித்து சபதம் போட்டான்.
அவனோ கொட்டாவி விட்டபடி, "உன் அறுவதாங் கல்யாணத்துக்கு எனது வாழ்த்துகள் சேத்தா." என்றதும் முதலில் அது புரியாமல் சிரித்தவனுக்கு தாமதமாக தான் புரிய,
"கொய்யால! எங்களுக்கு அறுவதாங் கல்யாணம் தான் நடக்கும் கிண்டல் பண்றீயா? ஓடாம நில்லுடா வெண்ண மவனே." என அவனைத் துரத்த,
"பின்ன இதெல்லாம் எப்ப கண்டுபிடிச்சி எப்ப நீ அந்தப்புள்ள கழுத்துல தாலிய கட்டுவீயோ? எப்படியும் அது அறுவதாங் கல்யாணமா தான் இருக்கும்னு வாழ்த்துகள் சொன்னேன்." எனக் கையில் சிக்காமல் அவன் ஓட, இவனும் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். இருவரும் நல்ல கண்ணுவை சுற்றி வரும் பட்டாம் பூச்சியாகச் சுற்றினர்.
*****
"என்னடி புதுசா காலையில மீட்டிங் எல்லாம் வைக்கிறாய்ங்க. எதுக்கு இந்த மீட்டிங்? எவ என்னத்த கிழிச்சு மாட்டிக் கிட்டாளோ அவள மட்டும் தனியா கூப்ட்டு திட்டாம, அவளோட சேர்த்து நம்மலையும் வறுத்தெடுக்கறதைத் தான் வேலையா வச்சிருக்கானுங்க இவனுங்க. கூப்ட்டு வச்சி திட்றதுக்கு பேரு மீட்டிங்னு கர்வமா வேற சொல்லிக்கிறாய்ங்க. நாம ஒன்னு நினைச்சிட்டு வந்தா அது ஒன்னு நடக்குது." எனப் புலம்பி தள்ளினாள் விழி.
"என்னடி ஓவரா புலம்புற? அவனுங்களுக்கு கேட்டுச்சி, அவய்ங்க மறந்து போற அளவுக்கு உன்னை வச்சி செய்வாய்ங்க. என்ன விஷயம் தெரிஞ்சுக்கற வரைக்கும் ஒன் திருவாய மூடிட்டு நில்லு." என அவளை அடக்க, அவளும் சலித்துக் கொண்டு நின்றாள்.
*******
"சோ அவங்க கிளாஸ் பெயிலியர் கம்மி, உங்களது அதிகம்? இட்ஸ் ஓகே, ஆனா ரிசல்ட் எப்படி பெயில்யர்ஸ் வர்றாங்க? அதுவும் சாவித்ரி மிஸ் கிளாஸ்ல இருந்து? இங்க பாஸ் பண்ற ஸ்டூடண்ட்டால, ஏன் பப்ளிக்ல முடியல? ஏன் செண்டம் ரிசல்ட் இந்த ஸ்கூலால கொடுக்க முடியல?" என அவன் கேட்ட கேள்விக்கு மீண்டும் அமைதி தான்.
"சொல்லுங்க மிஸ்...?" என இழுக்க, "தென்றல்" என்றாள்.
"ஓகே சொல்லுங்க மிஸ் தென்றல், எதனால இங்க டென்த்ல செண்டம் ரிசல்ட் காட்ட முடியல?"
"ஹான்ஸ்ட்டா சொல்றேன் சார். ஸ்டார்டிங்கல இருந்து எண்டு வரைக்கும் அவங்க எடுக்கற மார்க் தான் ரிப்போர்ட்ஸ் காட்டுவேன். தொடக்கத்தில் எனக்கு நிறைய ஃபெயிலியர்ஸ் இருப்பாங்க. பப்ளிக் நான் எடுக்கற கிளாஸ்ல செண்டம் ரிசல்ட் கொடுப்பேன் சார். பட் அவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது சார்." என்று முடித்துக் கொண்டாள்.
"இப்படிப் பொறுப்பு இல்லாமல் ஒரு டீச்சர் சொல்லலாமா?" என்று சிரித்துக் கொண்டே வினவினான் தனிஷ்.
அடுத்த பாகம்
கானம் - 9
What's Your Reaction?






