மயில் - 5

Jul 8, 2025 - 08:03
Jul 8, 2025 - 10:38
 0  3
மயில் - 5

மயில் - 5

மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்   15நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்.

-முல்லைக்கலி கலித்தொகை

மேலே சுற்றும் நூல்கண்டு நிறத்தில் உடம்பும் சிறிய சிவந்த கண்ணும் கொண்ட காளை ஒன்று தன்னை நோக்கி அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை (இடையனை) சாகும் அளவுக்குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக்கொண்டு சுழற்றுவதைப் பாருங்கள்.

*********************************************************

ஆடியில் விதைகளை விதைத்து முதிர்ந்து சாயும்  நெற்பயிரை மார்கழியிலோ தையிலோ அறுவடை செய்து  கிட்டிய  நெல்லை, அரிசியாக்கி அதில் பொங்கல் வைத்து இயற்கைக்கும்  கால்நடைக்கும் நன்றி கூறுவதே தமிழர்கள் திருநாளாம் தைப் பொங்கல்.

நகரங்களை விட கிராமத்திலே மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருநாள் நெருங்கிக் கொண்டிருக்க, வீட்டில் வேலைகள்  பெண்டை கழற்றியது.

இன்னும் நான்கு நாட்களே இருக்க, வீட்டை முழுவதும் சுத்தம் செய்து பெயிண்ட்  அடித்து வீட்டையே மாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையில், மாதவனுக்கு செழியனுக்கும் உணவு அளிக்கும் வேலையை மணி , ரங்கனிடம் கொடுக்கப் பட்டது... அன்றைய நாளிலிருந்து  மயிலினி அங்குச் செல்வதை தவிர்த்தாள்... ரங்கனும் உடனிருப்பாதால் அவர்களிடம் மணியும் அதிகம் பேசிக் கொள்ளவதில்லை... மயிலைப் பார்க்க மனம் துடித்தாலும் அடக்கி கொண்டே வேலைக்குச் சென்றான்.. அவள், அவன் கண்ணீல் படுவதே அரிதாகிப் போச்சு 

சான்றிதழ் வாங்கின நாளன்று,  மகேந்திரன் செய்த காரியம் கார்மேகத்தின் காதுகளுக்கு சென்றிருக்க கொதித்து போயிருந்தார்.

"இவன அடக்க ஒரு வழி இல்லையே !  இவனால நம்ம  மானம் போயிடும்  போலயே...! " கருப்பையா பேச,

"இவன் இப்படி புத்தி கெட்டு செய்ய

காரணம், மயிலுக்காக தானே! அவளயே அவனுக்கு கட்டிவச்சா அடங்கிருவான்டா கார்மேகம்..." பச்சையம்மாள் மகபிள்ளைக்காக பரிந்து பேசினார்.

"என்ன அப்பத்தா பேசற நீயி, செல்லமா வளர்த்த கிளிய குரங்கு கையில் கொடுத்தது கணக்கா இருக்கு நீ சொல்றது. உன் மகப் பிள்ளைக்காக, என் தங்கச்சி வாழ்க்கைய பணய வைக்கணுமா? போத்தா..." திருமலை கோவம் கொண்டு எகிற,

"அவன் சொல்றதும் சரிதேன், பிள்ளைய அவன் கையில் கொடுத்துட்டு எப்போ என்ன செய்வான்னு பயந்தே சாகணுமா நாங்க? சட்டுபுட்டுனு நம்ம பாப்பாக்கு ஒரு வரன பார்த்து கல்யாணத்த முடிச்சி புடுணே...! கண்ணம்மாக்காக யோசிக்காதீக... அத, பேசி சரிக்கட்டிக்கலாம், ஆனா அந்த பரதேசிக்கு பயனுக்கு மட்டும் மயிலினி கொடுக்கவே கூடாது, நீயே சம்மதிச்சாலும் நான் இதுக்கு ஒதுக்க மாட்டேன்..."கருப்பையாவும்  விடாபுடியாக பேச,

"தம்பி, எனக்கு எல்லாம் புரியிதுதேன்... ஆனா மயிலு புள்ள காளை அடகுறவனதேன் கண்ணாலம் கட்டிப்பேன் சொல்லிட்டு கெடக்கு... அதேன் யோசிக்கிறேன்..." தன் மகளின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க எண்ண,  மீனாட்சிகோ கோபம் வந்தது,

"இப்படியே அவ சொல்றத கேட்டுட்டே இருங்க, அப்பனும் சித்தப்பனும். இந்நேரம் அவளுக்கு ஒரு கண்ணாலம் பண்ணிருந்தா, அவன் இந்த மாதிரி பண்ணிட்டு கெடப்பானா?  வந்த நல்ல வரனை எல்லாம் தட்டிக் கழிச்சிபுடுறது,  மாட்டை அடக்கறவன மயிர அடக்கறவனதேன் கட்டிப்பேன்  நிக்கறது நல்லாவா இருக்கு? இது சரியில்ல சொல்லிபுட்டேன். பொங்கல் முடிஞ்சதுக்கு அப்றம் அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கணும்..." என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டார்.

"சரித்தா, ஏன் கோவபடுற? இப்ப என்ன மவளுக்கு கண்ணாலம் பண்ணனும் அதானே பண்ணிப்புடலாம் விடு .. பொங்கல் முடியட்டும்... அவ ஆசைப்படற மாதிரி எவனாவது நம்ம அழகன அடக்கறான-ண்டு பார்ப்போம்... இல்லயா என் மவ கிட்ட பேசி  நானே கண்ணாலத்துக்கு ஒதுக்க வைக்கிறேன் போதுமா..." என்று  மனைவியை சமாதானம் செய்தார்.

"மாமா, என் அண்ணன்  காத்துவாக்குல ஒரு விஷயத்த சொல்லுச்சி, எங்க பங்காளி வீட்டு பக்கம் வேதநாயகம்னு ஒருத்தர் இருக்கார், அவருக்கு ரெண்டு பசங்க, மூத்தவனுக்கு கண்ணாலம் முடிஞ்சுருச்சு,இப்போ ரெண்டாவது மகனுக்கு பொண்ணு பார்க்குறாகளாம், ரொம்ப வருசமா பேசிக்கலே, இப்பதான் பேசிக்கிறாக, அந்தப் பையன வேணா  கேட்டு பார்ப்போமா?.. நான் பையன பார்த்தது இல்ல, ஆனா  டாக்ட்ரா இருக்கான் போல.. மயிலினி பத்தி சொல்லும் போது யோசனை வந்துச்சி,  எதற்கும் ஒரேட்டு அண்ண கிட்ட பேசி புடுங்க..." பார்வதியின் தந்தை வழி சொந்தமான வேதநாயகத்தையும்மாதவனையும் தான் சொன்னார்... ஆனால் அவர்கள் வீட்டிற்கு வந்த மாதவன் தான் அவன் என்று தெரியாமல்.

"சரித்தா, இதுவும் நல்ல யோசனைதேன், நான் மச்சான் கிட்ட பேசி, என்ன ஏதுன்னு கேட்கிறேன்..." என்று முடித்தார் கார்மேகம்..

இவர்கள் இங்க பேசிக் கொள்ள, மெத்தையில் படுத்த வண்ணம், மாதவனை  எண்ணிக் கொண்டடிருந்தாள் மயிலினி ... 

" அப்றம் மயிலு அத்தான் சொன்னதையே நினைச்சிட்டு இருக்க போல..." போட்டு வாங்கினாள் மணி.

"யாரு டீ அத்தான்? " என தெரியாததை  போல  முகத்தை வைத்தே கேட்டாள்.

" யக்கா, உன் நடிப்பு இந்த வுட்டுகாரரங்களுக்கு வேணா சரிவரும், ஆனா எங்கிட்ட செல்லாது... ஒனக்கு அந்த மாட்டு டாக்டரை பிடிக்கும் எனக்கு தெரியும்க்கா..." என்றதும்  அவளை ஒரு கணம் திகைப்புடன் பார்த்தவள், பின் சோர்ந்து அவள் மடியிலே தலைவைத்து  " எனக்கும் பிடிக்கும் தான் டீ... ஆனா இதுல நம்ம குடும்ப மானமும் இருக்குல... நம்ம அப்பா எல்லார் முன்னாடி தலைகுனிஞ்சு நிக்கறத என்னால பார்க்க முடியாது டீ ..."என்று அழுதாள்.

"நீ யென்க்கா அப்படி நெனக்கற, ஒரு வேள பெரியப்பா உன் காதலுக்கு ஒத்துக்கிட்டா...?"

"நடக்கிறத பேசு மணி, அவுக என்ன ஆட்கள் தெரியாது. ..?காதல ஏத்துகிற அளவுக்கு நம்ம கிராமமும் கிராமக்களும் மன தளவுல வளரல, என்னதான் காலம் மாறினாலும். இந்த காதல்ன்ற விஷயத்துல மட்டும் பின் தங்கி தான் இருக்கு... 

விடு மணி, எனக்கு என்ன நடக்கணுமோ அதே நடக்கட்டும்... " என்று வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.. அவனை இனி பார்க்கவே கூடாதென்று எண்ணிக் கொண்டாள்.

பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பா தீர்வுகளும் இருக்கும்... இதற்கும் சிறந்த தீர்வு இருக்கும் என்று நம்பி உறங்கி போனார்கள்.

இருளொன்று இருந்தால் விடியலும் இருக்கும்...  வானம் விடியலை சூட்டிக் கொள்ள, அவரவர் பணியினை செய்ய ஆரம்பித்தனர்.

மாதவனுக்கு இன்று வேலை குறைவு  என்பதால் செழியனை அழைத்துகொண்டு அலங்காநல்லூரில் உள்ள  ஜல்லிக்கட்டு நடத்தும் கமிட்டி அலுவலகத்திற்குச் சென்றான்.

"இங்க எதுக்கு டா வந்திருக்கோம்...?"செழியன் கேட்க, " பெயர் பதிஞ்சு டோக்கன் வாங்க மச்சி..." என்றான் வரிசையில் நின்ற படி

"எதுக்கு டா டோக்கணு...?"  புருவங்களை முடிச்சிட சந்தேகமாக கேட்டான்.

"ஜல்லிக்கட்டுலே கலந்துக்க..." என்று சொல்லி அவனுக்கு நெஞ்சு வலி வரவைத்தான்.

"மச்சி, உண்மையாவா?"

"ஆமா மச்சி, வாழ்கையில் எதையாவது சாதிக்கணும்டா... எங்கப்பா எங்கிட்ட சொல்லி பெருமை படறத போல நானும் என் பிள்ள கிட்ட சொல்லி பெருமை பட வேணாமா?" என்று மீசை முறுக்கி விட்டான்.

" மச்சி இது உனக்கு பழக்கமே இல்லாத விளையாட்டு, உயிர பணையம் வச்சு விளையாடற விளையாட்டு, கொஞ்சம் யோசிமச்சி..." என்றவன் கெஞ்ச, 

" இல்ல மச்சி முடிவு பண்ணிட்டேன்... என் காதலுக்காக இத கூட பண்ணலேன்னா  நான் ஆம்பளே இல்ல...ஜெயிப்பேன் மச்சி நீ கவலைபடாத ..." என்று நண்பனுக்கு ஆறுதல் சொல்ல, அவனோ தன் நண்பனை நினைத்து பெருமை கொண்டான்.

மாதவனின், உடல்நிலையையும், அவனது எடை , உயரம் , உடம்பில் காயங்கள் இருக்கிறதா என்று பார்த்து  பரிசோதித்து விட்டு டோக்கனை வழங்கினார்கள்.

மகிழ்ச்சயில் வந்து கொண்டிருந்தனர் இருவரும்.

அங்கே பொட்ட காட்டில்  அழகனை வைத்து பயிற்சி எடுத்தும் அழகனுக்கு பயிற்சி கொடுத்தும் கொண்டிருந்தனர்.

அதை கண்டவன் வண்டியை ஓரமாக நிறுத்தினான்...

"ஏன் மச்சி இங்க நிப்பாட்னா?"

"சொல்றேன் மச்சி இறங்கு" என்றான். அவனும் இறங்கிட வண்டியை ஓரமாக நிறுத்துவிட்டு, அவர்கள் முன்னே சென்றான். " என்னடா பண்றீங்க?" கருப்பனை பார்த்து கேட்க, அவனை "எப்படி அழைக்க?"ஒரு நிமிடம் யோசித்தவன்,'எதற்கு வம்பு? ' என்று  "டாக்டர் "என்று அழைத்தான்.

"மாட்டுக்கு பயிற்சி கொடுக்கறேன் டாக்டர். அப்டியே  பசங்க அடக்கியும் பழகறாங்க... " என்றான்.

'ஒ... அப்ப நானும் பழகுறேன்..." என்று தன் சட்டையை  கழற்றி செழியனிடம் கொடுத்தவன், மாட்டின் முன் நின்றான்.

முதலில் அதனை எப்படி எதிர்கொள்ளவதென்று அவனுக்கு தெரியவில்லை... அழகேந்திரனின் முன்னே கபடி ஆடிக் கொண்டிருந்தான் மாதவன். அதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

கருப்பனோ, அவனிடம்... " டாக்டரே! மாட்டை அடக்க,  அதோட கொம்பையும் திமிலையும் பிடிக்கிறது தான் ஒரு வீரனுக்கு அழகு... வாலை பிடிச்சா அவன் வீரனே இல்ல, அழகனோட கொம்பையும் திமிலை சேர்த்து பிடிங்க" என்றான்..

இரண்டு மரத்திற்கு நடுவே மாட்டைக் கட்டி போட்டுருந்தனர்... கட்டிய காளையிடம் தான் அடக்கும் பயிற்சியை எடுத்தனர். காளை கட்டிகிடப்பதால் தைரியமாக விளையாண்டனர். 

மாதவனும் அழகனின் கொம்பையும் திமிலை பற்றி எண்ணி விளையாட, அழகனின் கொம்பு அவனது இடது புஜத்தை பதம் பார்த்தது.

கையில் ரெத்தம் வழிய, செழியன் ஓடிச்சென்று கைகுட்டையை வைத்து கட்டிவிட்டான் .

" கண்டிப்பா, இதுல கலந்துக்கணுமா டா நீ?"என்று பயத்தோடு கேட்க, " கண்டிப்பா கலந்துப்பேன்மச்சி. இது  என்னோட முதல் முயற்சி அப்டி தான்டா இருக்கும். என் காதலுக்கு இதை கூட தாங்கிக்க மாட்டேனா? " என்று கூற, கருப்பனுக்கு எல்லாம் புரிந்தது.  மாட்டை, இழுத்து வீட்டிற்குச் சென்றவன், மயிலினியிடம் அனைத்தையும் சொன்னான்..  

அவளோ, அடித்து பிடித்து அவனை பார்க்கச் சென்றாள்.

கட்டிலில்  கைவலியில் முகம் சுணங்க படுத்திருந்தான்... அவனருகில் அமர்ந்து காயம் பட்ட இடத்தில் வருட, அவள் தீண்டலில் கண்விழுத்தவன், தன் முன்னே அழுது வடிந்த முகத்துடன் இருக்கும் மயிலினி கண்டதும்  விழி விரித்து பார்த்து எழுந்தான்..

"இங்கிருந்தது போயிடுங்க டாக்டரே, உங்களுக்கு இதெல்லாம் வேண்டாம்..."  படபடவென்று சொன்னவள், எழுந்து செல்ல எத்தணிக்க, அவள் கையைப்பற்றி எழுந்தவன்,  அவளைப் பின்னின்று அணைத்தான். அவனணைப்பில் கால்கள் நகர மறுக்க, அவனுள் கட்டுண்டு போனாள் பெண்ணவள்.

" யாரோ எனக்கு எந்த குற்றவுணர்வு இருக்காதுன்னு சொன்னாங்க, இப்ப வந்து எதுக்கு அழறாங்க...?" என்றான் அவள் காதுமடலில் இதழை உரசி, அவன் மூச்சுகாற்றும் இதழும் தீண்ட,  காந்தையவளின் அதள்  முழுதும் குருதி சீறிப் பாய்ந்து சிவந்து போனது.மெல்ல அவன் புறம் திரும்பியவள்

" இதெல்லாம் வேணாம் டாக்டரே! எனக்கு பயமா இருக்கு... " என்றவள் அவனிடம் காரணத்தை கூறி, " ப்ளீஸ் போயிடுங்க... இந்த விளாட்டு வேணாம்..."  என்றாள். அவள் கன்னத்தை தீண்டிய நீரை துடைத்த வண்ணம் " உனக்காக உயிரை விடவும் தயார் மயிலு...  உன் ஆசையை நான் கண்டிப்பா நிறைவேத்துவேன்.. உன் காளைய நான் அடக்குவேன், நீ தைரியமா இரு... எனக்கு ஒன்னும் ஆகாது"  என்றான். அவன் கண்களிலும் பேச்சிலும் இருந்த உறுதி அவளையும்  தொற்றி கொள்ள, அவனை

விட்டு அகன்று வெளியே சென்றவள், மீண்டும் ஓடி வந்து அவனை இறுக அணைத்து விட்டுச் சென்றாள்.

"இது போதும் கண்டிப்பா மாட்டை அடக்கி உன்னை கல்யாணம் பண்ணுவேன்ன்ன்ன்..." என்று அவள் காதில் விழுமாறு கத்தினான்... அவளும் தலையை அசைத்துவிட்டு ஓடிவிட்டாள்.

அதன் பின் தன் தந்தையிடம் விஷயத்தை சொல்ல, அவரோ மீசையை முறுக்கி விட்டுப் பெருமை பட்டுக் கொண்டார். காமாட்சி, அதனை முதலில் மறுத்தவர் பிறகு ஒத்துக்கொண்டார் ...வேதநாயகம் மாட்டை அடக்கும் முறையை போனிலே சொன்னார்... யூ டூயூப் வழியே சிலவற்றை தெரிந்தும் கொண்டான்.

நாட்களை இப்படியாக பறக்க, அடிபட்ட பாம்பு விடாது போல அவமானம் பட்ட மகேந்திரன், அவர்களைப் பழிவாங்க, திட்டம் தீட்டினான். பணத்தை வைத்து விலைபேசி, விஷ ஊசியை வாங்கியவன். இரவில் அனைவரும் அசந்த நேரம் வீட்டின் பின் பக்கமாக சுவர் ஏறி குதித்தவன், அழகுவை நோக்கிச் சென்றான்.. 

கீழே அமர்ந்து உறங்கி கொண்டிருந்தது. அதன் மேல  ஊசியை செலுத்த அதனருகில் நெருங்க, சட்டென்று உறங்கி கொண்டிருந்த அழகு,  விழித்து எழுந்து கொண்டது.. அதைக் கண்டு பதறிப் போனவன் ஊசியை  கீழ விட , அதன் காலுக்கடியில் விழுந்தது. 

சத்தமிட்டு அவன் மீது சீறி நிற்க, சத்தம் கேட்டு அனைவரும் கண்விழுத்து ஓடிவர மீண்டும் வந்தவழியே ஓடிச்சென்றான்.

மகேந்திரனால நம்ம அழகு பிரச்சனை வருமா? 

Comment

Like 

Share

Register and login 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0