ஆசான் - 4

May 30, 2025 - 05:10
Jul 4, 2025 - 01:43
 0  11
ஆசான் - 4

ஆசான் - 4

கண்ணாடி முன்னே நின்று, தன் அன்னை, பின்னிய சடையை சரி பார்த்தவள், உள்ளங்கையில் கோகுல் சேண்டல் பொடியை கொட்டி முகத்தில் பூசிக் கொண்டு,  சின்னதாக இருந்த ஒரு கோபுர வடிவப் பொட்டை வைத்து கடவுள் முன் நின்று வணங்கி விட்டு, குங்குமத்தை பூசியவள்,  தன் பள்ளிப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட, அவளே பார்த்துக் கொண்டிருந்தார் அவளது தாய்.

"என்னமா புதுசா  பார்க்கறது போல பார்க்கற?" சைக்கிளை வெளியே எடுத்துக் கொண்டு கேட்டாள். " ரொம்ப அழகா இருக்க அருளு..." என சுத்திப் போட்டார் அவளது தாய் வள்ளி, " இதுக்கு தானா போமா" என்றவள் பின்னே தனது பள்ளிப்பையை வைத்து ரோப் மூலம் கட்டினாள்.

"அம்மா, மறுபடியும் சொல்றேன் தப்பா எடுத்துக்காத தாயி. நீ பசங்க படிக்கற பள்ளிக்கோடத்துல படிக்கற, உன்ன தப்பு சொல்லிட முடியாது, எல்லாம் வயசு செய்றது தான். இருந்தாலும் அந்த வலியை நாம தானே அனுபவிக்கனும். அதேன் சொல்றேன், படிப்புல மட்டும் கவனத்த செலுத்து தாயி... வேற வேண்டாத வேலை எல்லாம் வேணா கண்ணு நமக்கு. முதல்ல நமக்கு மானம் தான் ஒசத்தி. அப்றம் தான் சாப்பாடு, படிப்பு எல்லாம் அம்மா சொல்றது புருஞ்சுருக்கும் நினைக்கிறேன் கண்ணு...!"  எங்கே தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்ற எண்ணத்தில் சற்று அச்சத்தோடு கூறினார்.

ஆனாலும் அவருக்கு சொல்ல வேண்டிய கடமையிருக்கு அல்லவா! அதே தெருவில் வசிக்கும் ராணியின் மகள் காதலித்து ஓடிய செய்தியைக் கேட்டு வந்த பயத்தால் இந்த அறிவுரை.

அவள் சிரித்து கொண்டே, " உனக்கு மானம் பெருசா இருக்கலாம். ஆனா, எனக்கு  நீ, அப்பா, அப்றம் படிப்பு தான் முக்கியம்... கண்டிப்பா,  நான் நல்லா படிச்சி உன்னை தலை நிமிர வைப்பேன். தவறான வழியில போக மாட்டேன். நான் டாக்டர் ஆகி இந்த ஊர்ல ஒரு மருத்துவமனை கட்டனும், அதான்மா என் கனவு, அதை மட்டும் நினைச்சு படிப்பேன் மா, நீ கவலைப்படாத...!" தாய்க்கு அவள் தைரியமூட்ட, பெண்ணவளை உச்சி நுகர்ந்தார் கண்ணீரோடு.

"போயிட்டு வரேன் மா...!" சென்றாள் பள்ளிக்கு. பல கனவுகளை சுமந்து செல்லும் பாதையில் மறைந்திருக்கும் இடரை அறியாமல் பறந்து கொண்டிருக்கிறது அப்பட்டாம் பூச்சி.

ஆசிரியர்களுக்கென ஒதுக்கப்பட்ட  அறையில் ,பத்தாம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அமர்ந்து, மாணவர்களின் பரீட்சை தாளை திருத்திக் கொண்டிருந்தனர்.

" உங்க பையன் நல்லா படிக்கிறான், பரீட்சை நல்லா எழுதிருக்கான்... " என்றார் அறிவியல் ஆசிரியர். வெறும் முறுவலை மட்டும் கொடுத்தார் இந்தரா.

"அவனை ஏன் கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்து இருக்கீங்க? ஒரு நல்லா மெட்ரீக் ஸ்கூல்ல படிக்க வச்சிருக்கலாமே... நான் என் பையனை மெட்ரீக்ல தான் படிக்க வைக்கிறேன், அதிக செலவானாலும் பரவாயில்ல அவனுக்கு நல்ல கல்வி கொடுக்கணும் இல்லையா...!"என்றதும் இந்திராவின் முறுவல் கசந்தது.

"நீங்க சொன்ன முதல் விஷயம் கேட்க சந்தோசமா இருந்தது. ஆனால் ரெண்டாவது விஷயம் வேதனையா இருக்கு" என்றதும் பதறி விட்டார்.

"என்னாச்சி...?"

"ஒரு ஆசிரியரா இருந்துட்டு இப்படி சொல்லலாமா?" எனக் கேட்க புரியாமல் பார்த்தார்.

"உங்க பையனுக்கு நல்ல கல்வி கொடுக்கணும் சொல்றீங்க,  அப்போ மெட்ரீக் ஸ்கூலும் அங்க ஒர்க் பண்ற டீச்சர்ஸூம் மட்டும் தான் ஸ்டுடெண்ட்ஸூக்கு  நல்லக் கல்வி கொடுக்கிறாங்களா? அப்போ, நாம ஸ்கூலுக்கு வந்துட்டு என்ன பண்ணிட்டு போறோம்...?" எனக் கேட்க, அவர் தடுமாறினார்.

"பள்ளி கட்டிடமோ, பள்ளியில வசூலிக்கும் கட்டனமோ மாணவர்களுக்கு நல்ல கல்விய கொடுக்கிறது இல்ல... ஆசிரியர்களால தான் நல்ல கல்விய கொடுக்க முடியும்.  குடிசையில

இருந்துகொண்டு பல வித்தைகளை கற்ற வீரர்களும் இருக்காங்க ...குருகுலத்துல எந்த வசதியும் இல்லாமல்  கட்டாந்தரையில தான் பல மன்னர்கள்  அனைத்தையும்  கலையையும் கற்றாங்க, ஒரு தரமான கல்வி கொடுக்கணும்ன்னா அது தரமான ஆசிரியரால தான் முடியும்..

அப்போ நாம தரமான ஆசிரியர் இல்லையா ...? சும்மாவே மக்கள் மத்தியில  கவர்மெண்ட் டீச்சர்ஸ் சும்மா உட்கார்ந்துட்டு சம்பளம் வாங்கிட்டு போறதா சொல்றாங்க. ஆனால் அவங்களுக்கு  தெரியிறது இல்ல, கவர்மெண்ட் டீச்சர்ஸ் மாணவர்களுக்காக மெனக்கெடுறோம்னு.

ஆனா, சில கவர்மெண்ட் டீச்சர்ஸூம் அவங்க பேச்சுப்படி தான் நடந்துக்கறாங்க... நல்ல கல்வி,  உங்க பையனுக்கு கொடுக்கனும் சொன்னீங்களே, அப்போ நம்மள நம்பி வந்த பசங்களுக்கு நீங்க நல்லக் கல்வி கொடுக்கலையா ? 

இங்க இருக்கற வசதிகளை மட்டும் பார்த்து நல்ல கல்வி கிடைக்காது நினைக்காதீங்க, அரசு பள்ளிகள் இப்படி இருக்க ஒரு காரணம்  டீச்சர்ஸூம் தான்...  நாம தான் பள்ளியை மாத்த மெனக்கெடனும், பள்ளிக்கு அடிப்படையான தேவைகள் என்னாவோ அதை அரசாங்கத்து  கிட்ட  முறையா தெரிய படுத்தி எங்களுக்கு வேணும் கேட்கணும்... சம்பள உயர்வு கேட்டு போறாடுற நாம, ஏன் பள்ளிகளை மாத்த போராட மாட்டிக்கிறோம்? பொது மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிய படுத்தனும். அவங்களோடு சேர்ந்து அரசு பள்ளிக்கு தேவையான வசதிகளை  கொண்டு வர முயற்சி பண்ணனும். ஆனால் நாம அதைச் செய்றோமா?" என்று கேட்டு உதட்டை பிதுக்கினார்.

முதல்ல நாம நம்பனும் ஸ்டுடெண்ட்ஸூக்கு நல்ல கல்வி தான் கொடுக்கிறோம். அப்றம், ஸ்டுடெண்ட்ஸையும் அவங்க பேரண்ட்ஸையும் நம்ப வைக்கணும். நல்ல கல்வி அரசு பள்ளியில் கிடைக்கும்னு மத்தவங்க

சொல்ற படி, நாம தான் உழைக்கனும்...  மெட்ரீக் டீச்சர்ஸை பாராட்டுறத விட அவங்களுக்கு நாம சலிச்சிவங்க இல்லைனு சொல்ல வைக்கிறது தான் ஒரு நல்ல கவர்மெண்ட் டீச்சர்ஸோட கடமை" என்று அவருக்கு பாடம் எடுத்து விட்டு வகுப்பிற்கு சென்றார் .அவரோ தலைக் கவிழ்ந்தார்.

மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருக்க, திருத்திய விடைத்தாளை கொடுக்கச் சொன்னார் இந்திரா.  கணிதத்தில் அர்ஜுன் தொண்ணுற்றி ஒன்பது எடுத்திருந்தான். அருள், அந்த வகுப்பில் மட்டுமே நூறு 

எடுத்திருக்க, அனைவரும் கைத் தட்டுமாறு

பணித்தார்.

அனைவரும் கைத்தட்ட, அர்ஜுன் மட்டும் உர்ரென்று அமர்ந்திருந்தான்... அவனை பார்க்க, " அந்த ஒரு மார்க்கை குறைக்காம இருந்திருந்தால் நானும் நூறு வாங்கிருப்பேன்" என்றான் கோபமாக,

"நான் தான் குறைச்சேனா?" நக்கலாக கேட்க, "சின்ன மிஸ்டேக்  தானே அதுக்கு ஏன் மார்க் குறைச்சீங்க ...?"

"இன்னைக்கு நீ விடுற சின்ன மிஸ்டேக்கை நான் பார்க்காம விட்டால், நாளைக்கு அது பெரிய மிஸ்டேக்கா வந்து நிக்கும்... இப்ப உன் தவற சூட்டிக் காட்டத் தான் குறைச்சிருக்கேன்...  பப்ளிக்ல நீ அதே மிஸ்டேக்  நீ விடக் கூடாதுன்னு உனக்கு நான் வைக்கிற குட்டு தான் இது. அடுத்த முறை மிஸ்டேக் இல்லாமல் எழுது உனக்கும் நூறு கிடைக்கும்..." என்றார்.

அருளை முறைத்துவிட்டு, "அடுத்த முறை நூறு வாங்கி காட்டுறேன்" என்றான்.

அர்ஜுனுக்கு அருள் மேல் உள்ள கோபம் போட்டியால் என்று எண்ணிருந்தார், அது பொறாமையும் வெறுப்பும் என்று அந்த சம்பவத்துக்கு பிறகே தெரிய வந்தது அவருக்கு.

சைக்கிளில் வந்தாலும் தன்னோடு தான் காலையும் மாலையும் வர வேண்டும் என்று இந்திரா உத்ரவிட, வேண்டா வெறுப்பாக அவரோடு வந்தான். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் நண்பர்களின் கேலி பேச்சில், அவனுக்கு கோபம் வர, "  இனி நான் தனியா ஸ்கூலுக்கு போய்கிறேன்.  உங்க கூட வரமாட்டேன்..." என்றான்.

"ஏன்?"

"ஏன்ன்னா, உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா ஒழுங்கா வீட்டுக்கு வர மாட்டேனா? என் பிரண்ட்ஸ்  என்னை கேலி பண்றாங்க. என் கூடத்தான் நீங்க வரணும் சொன்னால்,  நான் ஸ்கூலுக்கே போக மாட்டேன்" என்று அடம்பிடித்தான்.

"பிரண்ட்ஸ் ஏன் கேலி பண்ணனும்? அம்மா கூட வரது தப்பா? அவங்க ஆயிரம் சொல்லுவாங்க, அதெல்லாம் கேட்டு நடக்கனுமா என்ன?  நீ, என் பேச்சை கேட்டால் போதும். சைக்கிள் கேட்ட கிடைச்சது இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்..? நீ என் கண் பார்வையில் தான் வரனும்..."அவரும் முடிவாக இருக்க,

"நீங்க ஏன் கூட வரது ஜெயில் கைதியோட போலீஸ் வரது போல இருக்கு.   ப்ளீஸ் என்னை ஃப்ரீயா விடுங்க... நான் நல்ல படிக்கிறேன். ஸ்கூலையும் ஒழுங்கா  தானே இருக்கேன். இன்னமும் என் மேல உங்களுக்கு நம்பிக்கை வரலயா...?" ஆதங்கத்தை  கொட்ட,

"அது நீ என் கண்பார்வையில் இருக்கறனால, அப்படி இருக்க. இட்ஸ் ஓ.கே தனியா போ, ஆனால் டைத்துக்கு நீ இங்க இருக்கணும். இல்லேன்னா,  அப்றம் சைக்கிள் இல்ல என் கூடத்தான்  வரணும்..." என்று எச்சரிக்கை செய்ய, 

"என்னை நீங்க ரொம்ப கெஞ்ச வைக்கிறீங்க, வீட்ல அம்மா போல நடக்க மாட்றீங்க, என் பிரண்ட்ஸோட அம்மா போல நீங்க இல்ல...!"

"கம்பேர் பண்ணாத, கம்பேர் பண்ண, நானும் பண்ண வேண்டியது வரும்...  நீ நல்ல பிள்ளையா இருந்திருந்தால், உனக்கு கண்டிப்பா சலுகைகள் கிடச்சிருக்கும், ஆனால் நீ இன்னமும் மாறல,  உன்னை மாத்த போராடிட்டு இருக்கேன்.. சீக்கிரமா மாறு,  உனக்கு பிடிச்ச தாயா நானும் மாறுவேன். அதுவரைக்கும் இப்படி தான்" தன் கண்டிப்பு ஏன் என்று சொல்லலாம் சொல்லிவிட்டு போனார்.

அடுத்து வந்த நாட்களில், சொன்னது போல அர்ஜுனை தனியாக விட, அவனும் 10 நிமிடத்துக்கு க்குள்ளே  வீடு வந்து சேர்ந்தான்... அவரும் எதுவும் சொல்லவில்லை.  ஆனால் அது கொஞ்ச நாளைக்கு தான். நண்பர்களின் வற்புறுத்தலிணங்க,  தாமாதமாக செல்ல ஆரம்பிக்க, முதலில் மணியைப் பார்த்து அவனை பார்த்தார். பின் சுட்டிக் காட்ட  ஆரம்பிக்க, ஏதோ ஏதோ காரணம் சொன்னான்.

அன்று ஒரு நாள் நண்பனின் பிறந்தநாள் என்று சொல்லிக் கொண்டு, அனைவரும் முள்ளுக் காட்டிற்குகுள் நுழைந்தனர்.  அங்கே, கட்டிகை வெட்டிக் கொண்டாடினார்கள். பிறகு, ஒருவன் தன் அப்பா சட்டையில் இருந்து எடுத்து  வந்த சிகிரெட்டை கையில் எடுக்க, அர்ஜுனோ பயந்தான்... அவனை தவிர மற்றவர்கள்  அடிக்க, அவர்களை சுவாரசியமாக பார்த்தவனுக்கு தன் தந்தையின் ஞாபகம் வந்தது. 

அவரும் அதை ஆறாம் விரலாக பிடித்து, ஊதி விட்டுக்கு கொண்டே புகைப்பிடித்தது கண்ணில் வந்து போனது. 

அவனுக்கும் ஆசைதான், அதே நேரம் அன்னையின் முகமும் வந்து போக, பயத்தில் வேணாம் என்று சொன்னான். 

ஆனால் அவர்களோ விடாப்பிடியாக வாயில் வைத்து விட, ஸ்டைலாக ஊதித் தள்ளினான். 

ஸ்வீபிங் டூட்டி என்று மாணவர்கள் வகுப்பை கூட்டிவிட்டு தான் செல்லவேண்டும் அன்றையை டூட்டி அருளுக்கும் அவளது தோழிக்கும் இருக்க, முடித்து விட்டு,  வரும் பொழுது அதை பார்த்து விட்டாள். வாயில் கைவைத்து அதிர்ச்சியானவள், நாளைக்கு ஆசிரியரிடம் சொல்லவேண்டும் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அதற்கு முன்னமே  அங்கு வேலைப் பார்க்கும் ப்ரைமரி ஆசிரியர் பார்த்து விட, அதுவும் குறிப்பாக அர்ஜுனை பார்த்துவிட, நாளைக்கு இருக்கு இதுங்களுக்கு இருக்கு என்றார். 

மறுநாள் ப்ரின்சிபாலிடம் அவர் சொல்லிவிட, முள்ளுக் காட்டுக்கு சென்ற, பத்தாம் வகுப்பு மாணவர்களை மட்டும் அழைத்து இருந்தார். அதில் அர்ஜுனும்  இருந்தான்.

"படிக்கிற வயசுல என்ன டா பண்ணிட்டு இருக்கீங்க? ஸ்கூல்யூனிபார்ம் போட்டு கண்ட இடத்துக்கு போய் கண்டத்தையும் பண்ணிட்டு வந்துருக்கீங்க, போற வரவங்க பார்த்து கம்பளைண்ட் பண்றாங்க... என்ன சொல்லி என்ன செஞ்சாலும் உங்க புத்தி அங்க தானே போகும்... நீயுமா அர்ஜுன் இவங்க கூட சேர, ச்ச உங்க அம்மா பேரை கெடுத்துடுவ போலையே...!" எனக் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அங்கே இந்திராவும் வர பயந்து போனான்.

அருகே இருந்த ஆசிரியர், "பெத்த புள்ளையே ஒழுங்கா வளர்க்க தெரியலே, இதுல என்னண்டு மத்த புள்ளைகளை பார்த்துப்பாங்க..." எனக் காது பட பேச, கோபம் சுர்ரென்று ஏறியது. அருகே  சாத்தி வைத்த பிரம்பை எடுத்து அவனை சாத்தலானார். 

"அம்மா... அம்மா... " என்று வலியில் கத்த விடாது அடித்தார்... அவனோடு இருந்த மாணவர்கள் அனைவரும் மிரண்டனர். ஆசிரியர்களும் கூட, 

"சார், போன் போடுங்க... இங்க  நிக்கிற எல்லா ஸ்டுடெண்ட்ஸோட பேரெண்ட்ஸ்க்கும் போன் போட்டு வர  சொல்லுங்க, எல்லாருக்கும் டி.சி குடுங்க, என் புள்ளையும் சேர்த்து தான் சொல்றேன். டி.சி குடுங்க சார். இதுங்க படிச்சாலும் திருந்தாதுங்க .வர சொல்லுங்க சார் அவங்களை ...!" என்றவர் மகனிடம் திரும்பி, 

"என் மேல் நம்பிக்கை இல்லையா ? கேட்ட, ஏதோ ஜெயில் கைதி போல இருக்கு நீ கூட வரதுன்னு சொன்ன, இப்போ என்னாச்சு பார்த்தீயா? சொன்னேல என் கண்பார்வையில் இருக்குற வரைக்கும்  தான் நீ நல்லா இருப்பனு... இப்போ புரியுதா நான் ஏன் உன்கிட்ட ஸ்ட்ரிக்ட் இருக்கேன். தம் அடிக்கிற வயசா  டா உனக்கு...?  உன்னை திருத்திடலாம் திருத்திடலாம் நினைச்சி நினைச்சி நான் ஏமாந்து போறேன் டா, போ எப்படி வேணா இரு போ..." என்று கத்தினார். 

ஏற்கெனவே தகவல் அளித்திருந்ததால் அந்த மாணவர்களின் பெற்றோர்களும் வந்திட, ஒருவர் முன் வந்து "என்ன சார் பண்ணினான் என் புள்ள?" என்றதும் இந்திராவிற்கு கோபம் வர, 

"சும்மா சும்மா, என் புள்ள என் புள்ளனு மார்த்தாட்டாதீங்க, உங்க புள்ள என்ன பண்றான்? ஏது பண்றான்? அவனை கூப்டு விசாரிச்சு தெரிஞ்சுக்கங்க, பத்து நிமிஷம் அவன் லேட்டா வந்தால் ஏன் லேட்னு கேளுங்க? செலவு பண்ண காசு கொடுத்தால், செலவு பண்ண காசுக்கு கணக்கை கேளுங்க, பொம்பள பிள்ள லேட்டா வந்தா மட்டும் தைதக்கானு குதிக்கிறீங்க, அப்படியே தப்பு தப்பா கற்பனை பண்ணி, அவகிட்ட கேள்வி கேக்குறீங்கள, அதுவே ஏன் பசங்கலேட்டா வந்தால் மட்டும் கேட்கவே மாட்டிக்கிறீங்க, இது உங்க புள்ள, உங்க சட்டைப் பையில் இருந்த சிகிரெட் எடுத்து வந்து இங்க இருக்கற பசங்களுக்கு கொடுத்து சேர்ந்து சிகிரெட் அடிச்சிருக்கானுங்க இன்னைக்கு தம், நாளைக்கு தண்ணி, நாளைக்கழிச்சு..." என நிறுத்தியவர் "அவன்  நடவடிக்கை வித்யாசமா இருந்தால் பக்கத்துல உட்கார வச்சு கேளுங்க, ஆம்பள புள்ள தானே அலட்சியமா இருக்காதீங்க... " என்றவர் வெளியே வந்து தந்தையை அழைத்து, அர்ஜுனை வந்து அழைத்து போக சொன்னார். 

அந்த மாணவர்களையும் பெற்றோர்களையும் வாரன் செய்து விட்டு அனுப்பி வைத்தனர்.

இந்த அடியால் அவன் திருந்துவான் என எண்ணிருக்க, மாறாக, இதற்கெல்லாம் காரணம் அருள் என்று எண்ணிக் கொண்டவன், அவள் செல்லும் வழியை மறித்து அவளிடம் சண்டை போட்டு, அவள் சைக்கிளை தூர எரிந்தவன், அவளை முள்ளுக் காட்டில் பிடித்து தள்ளிவிட்டுச் சென்றான்.

தன் சைக்கிளைத் தேடிக் கொண்டு  சென்ற அருள் அங்கிருந்த  இரண்டு கால்கள் கொண்ட வெறி நாய்களுக்கு உணவானாள். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0