நெடுஞ்சாலை கானமே -11

Jun 30, 2025 - 03:28
Jun 30, 2025 - 04:25
 0  6
நெடுஞ்சாலை கானமே -11

கானம் - 11

இரவு நேரம் ஒன்பதரை ஆகியது நந்தனாவிற்கு சொல்லிக் கொடுத்து  முடிக்க, கடைசியாக ஒரு கணக்கில் அவளுக்கு சந்தேகமெழ, தென்றலை இன்னும் பதினைந்து நிமிடம் அமர வைத்து விட்டாள். அவளும் நந்தனாவிற்குப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தாள்.

அதே நேரம் ஊர் தலைவர் வீட்டுக்கு பக்கத்தில் வீட்டில் தான் அவரது தம்பி மூர்த்தி இருக்க, அவர் தான் நல்லக்கண்ணு டிராவல்ஸை வைத்திருக்கிறார்.

இவரது மினிப் பேருந்துகளும் ஆம்னி பேருந்துகளும் மதுரையில் நிறைய இடத்தில் ஓடுகின்றன. தன் தந்தையின் பெயரில் டிராவல்ஸ் தொடங்கி வெற்றியுடன் நடத்திக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் காலையிலிருந்து இரவு வரையிலும் பேருந்தில் கிடைத்த வசூலையும் பேருந்தின் சாவியையும்  ஒப்படைக்க வந்திருந்தனர் மாறனும், சேத்தனும்.

ஒரு நாளைக்கு மட்டும் ஐந்து, இலக்கில் பணம் ஈட்டித் தந்தது நல்லக்கண்ணு பேருந்து. 

ஒரு பக்கம் மதுப் பொத்தலை வைத்து கொஞ்சம் கொஞ்சமா பருகிய படி கணக்கு வழக்கைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார் மூர்த்தி. இருவரும் அமைதியாக அவரை பார்த்தபடி நின்றிருந்தனர்.

கணக்கு வழக்குச் சரியாக இருந்தாலும் அவருக்கு அதிருப்தி தான். அவருக்குப் பத்தவில்லை போலும்... கணக்குச் சீட்டைக் கோபமாகத் தூக்கிப் போட்டார் மேசையில், 

"இந்த பிஸ்கோத் பணத்துக்கு தான், நான் வண்டிய மாசம் மாசம் கழுவி மொழுவி, எஃப்சிக்கு அனுப்பி அதுக்குத் தண்டம் அழறேனா? என்னடா பண்றீங்க பஸ்ல? இதெல்லாம் ஒரு பணம் என்கிட்ட கொண்டு வேற வர்றீங்க?" எனக் கத்தினார்.

"ஐயா! இது ஒரு நாள் வசூலுங்க. இது கூட இல்லாம தான் நல்லமணி ஓடிட்டு  இருக்கு. மக்களுக்கு நல்லக்கண்ணு தான்யா பேவரைட்டு. எல்லாரும் நம்ம வண்டியில தான்யா அதிகம் வர்றாய்ங்க. இதுக்கு மேலே என்னய்யா வேணும்?" என அடக்கமாகப் பதில் தந்தான் சேத்தன்.

"இதுக்கு மேலே பணம் வேணும், இன்னும் வேணும். இது பத்தல. ஒரு ரவுண்ட்டுக்கு இத்தனை ஆட்களைத் தான் ஏத்தனும் கணக்கு வச்சி ஓட்டிருங்களா டா? கவர்மென்டு பஸ்காரன் எப்படி கூட்டத்தை சேர்த்துட்டு போறான்? உங்களால ஏண்டா முடியல?"

"ஐயா ஓவர் லோட் ஏத்துனா வண்டி சாய்ஞ்சுடுங்கயா. நம்ம வண்டி சின்ன வண்டிங்கயா. இவ்வளவு தான் கணக்கு இருக்கு. அதுக்கு மேலே ஏத்துனா கஷ்டங்கயா." என மாறனும் எடுத்துச் சொல்ல, 

"ஒனக்கு கஷ்டமா இருக்கா? மாட்டு வண்டி ஓட்டலேல நீயி. உட்காந்த இடத்தில ஓட்ற ஒனக்கு *** வலிக்குதா?" எனக் கேட்க, சேத்தனுக்குக் கோபம் வர, அவனது கையைப் பற்றிக் கொண்டு அடக்கி வைத்தான் மாறன்.

கேட்க முடியாத பேச்சுகளை எல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு தான் வெளியே வந்தனர். அவர் பேசப் பேச, சேத்தனுடைய மூளை சூடானது. அவனை அடக்கி அங்கிருந்து அழைத்து வருவதற்குள் போதுமென்றானது மாறனுக்கு. 

இதெல்லாம் அவளும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். 'இப்படி ஏச்சுப் பேச்சு கேட்டுத் தான் அந்த நாய்கிட்ட இவன் வேலைப் பார்க்கணுமா?' என முனங்கிக் கொண்டவள் அவ்வீட்டிலிருந்து விறுவிறுவென வெளியேறினாள்.

முன்னதாகவே சேத்தனை அடக்கி வெளியே கூட்டி வந்து விட்டான். கோபம் குறையாத சேத்தனோ, மாறனிடம் கெட்ட வார்த்தைகளைப் போட்டு மூர்த்தியைத் திட்டித் தீர்த்தான், அவனை அடக்க வழி  தெரியவில்லை மாறனுக்கு. 

சேத்தன் ஏதோ கெட்ட வார்த்தை பேசவும் அவள் வரவும் சரியாக இருக்க, அவனைத் தீயாக முறைத்து விட்டு முன்னே நடந்தாள். அவனும் அவளைப் பார்த்ததும் தன் (கா)வாயை மூடிக் கொண்டான்.

"டேய்!" என தென்றல் போவதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட மாறன், அவனிடம், "அவன் காதுல விழுந்துச்சி, தோளை உறிச்சித் தொங்கப் போட்டிருவான்டா! மச்சி பெரிய இடம்  கொஞ்சம் பொறுமையா இருடா."

"பெரிய இடம்னா **** பெரிய இதுவா? இவன் கிட்ட வேலைப் பார்த்தா இவன்  பேசற அசிங்கத்த எல்லாம் கேட்டுடு இருக்கணுமா? இவன் கொடுக்கற சம்பளத்தில எனக்கு கஞ்சிக் குடிக்கணும்ண்டு  அவசியம் இல்ல. இந்த வேலையும் வேணா ஒரு மயிரும் வேணாம் போயிட்டே இருக்கப் போறேன்." எனக் கத்தியவன் பின் தணிந்த குரலில்,

"எல்லாம் அவளுக்காக தான். அவள பார்க்கற நேரம் காலையிலும் சாய்ந்திரமும் தான். வேலைக்குப் போனா எங்க அவளைப் பார்க்க முடியாம போயிடுமோனு தான் யோசிக்கிறேன். இல்லனா இந்த நாய் பேச்சை எல்லாம் கேட்கணும்ண்டு எனக்கு தலையெழுத்தா என்ன?" மீண்டும் உரக்கக் கத்தினான். 

"சரி, அவன விடு. முதல்ல அவளைப் போய் பாரு. கோபமா போறா."

"என்னைக்கு தான் அவ கோபமா இல்லாம இருந்திருக்கா? இன்னைக்கி கோபமா இருக்க, எப்ப பாரு மூஞ்சிய உர்ரென வச்சிருக்கா. மாமன் கிட்ட ஆசையா பேசணும்ண்டு எண்ணமே கொஞ்சம்  கூட இல்ல அவளுக்கு." என சலித்துக் கொண்டான்.

"இல்ல சேத்தா கனவு எதுவும் காணுறீயா? இன்னமும் அவ ஒங்கிட்ட காதலச் சொல்லல, அதுக்குள்ள மாமன்ங்கற, ஆசையா பேசணுங்ற, முதல்ல அவ கோபத்தை குறைச்சி உன்னை அவள காதலிக்க வை. அப்புறம் அவளே ஆசையா வந்து பேசுவா. இப்போ போய் சமாதானம் பண்ணு போ." என அனுப்பி வைத்தான்.

இவனும்,  விறுவிறுவென நடந்து செல்பவளை வேக எட்டில் அவளைப் பிடித்திருந்தான்.

"ஏ தென்னு சாரிடி. சாய்ந்திரம் ஏதோ கோபத்துல கேட்டுடேன். நீ அவன் கையப் பிடிச்சதும் எனக்கு கோபம் வந்துருச்சிடி. சாரி டி. நீ எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம். உன்னை யாருக்கும் தரக் கூடாது நினைக்கற அளவுக்கு உன் மேல காதல்டி. பிளீஸ் புருஞ்சுக்கடி." என அவள் கையைப் பிடிக்க, வெடுக்கென தட்டி விட்டாள். 

"தென்னு"

அவனை அழுத்தமாய் பார்த்துவிட்டு மீண்டும் நடந்தாள். அவனும் விடாமல் அவளைத் துரத்திக் கொண்டு நடந்தான். 

"என்ன தாண்டி கோபம் என் மேல? சொல்லித் தான் தொலையேன்டி. ஏன்டி என்னை சாக அடிக்கற? அப்படி என்ன தாண்டி உனக்கு நான் பண்ணிட்டேன்? எந்நேரமும் முகத்தை தூக்கி வச்சிட்டே திரியிற?" பின்னாடியே அவளை விடாமல் கத்திக் கொண்டே வந்தான். 

அவளும் கோபத்தை அடக்கி வேகமாக நடந்தாள். வேகமாக எட்டு வைத்து அவள் கையை பிடித்தவன், தன் பக்கம் திருப்பி,

"இப்போ நீ சொல்லல நான் என்ன பண்ணுவேண்டு எனக்கே தெரியாது? அப்படி என்னடி திமிரு ஒனக்கு? பதில் சொல்லாம போயிட்டே இருக்க? நின்னு பதில் சொல்லுடி. எதுக்குடி என் மேலே ஒனக்கு கோபம்?" விடாது கேட்டு கொண்டு நின்றான்.

"சொன்னா போயிருவீயா?"

அவன் ஆமென்று தலையை அசைக்க, அவளோ கண்ணீரைத் துடைத்து விட்டபடி, "நீ பார்க்கற வேலை எனக்கு சுத்தமா பிடிக்கல. நீ பஸ்ல கண்டக்டர் வேலை பார்க்கறது பார்த்து எனக்கு பத்திட்டு வருது. அது தான் உன் மேலே கோபம் வர காரணம் போதுமா?"

"ஒ! அப்ப மேடத்துக்கு நான் கவர்னர் வேலை பார்த்தா பிடிக்குமாக்கும்?"  கோபத்திலும் நக்கலுடன் கேட்டான்

"நீ கவர்னர் வேலை பார்க்கனும் நான் சொல்லல, கௌரவமான வேலை பார்த்தாலே போதும்."

"ஏன் இந்த வேலைக்கு என்ன குறைச்சல்? என்ன கௌரவம் கெட்டு போச்சி இந்த வேலையில?"

"அந்த ஆள் கிட்ட அசிங்கமா ஏச்சுப் பேச்சி வாங்கித் தான் நீ இந்த வேலை செய்யணுமா? உன்னை அந்தக் காக்கி டிரஸ்ல கண்டாலே எனக்கு கோபம் தான் வருது. ஒழுங்கா படிச்சிருந்தா ஒனக்கு இந்த நிலமை வந்திருக்குமா?"

"ஏ  நிறுத்துடி. ஆமா நான் படிக்கல தான். ஏன் படிச்சவன தான் நீங்க கட்டிப்பீங்களோ? காக்கி டிரேஸ்ல இருக்கிறவன பார்த்தா இளக்காரமா இருக்கா?"

"ஆமா இளக்காரமா தான் இருக்கு. என்ன கிடைக்கிதுனு இதுல வேலை பார்க்கற நீ? அசிங்கமா இருக்கு உன் வேலை நினைச்சாலே."

"அம்மாடியோ அப்படி சகிச்சிட்டு நீ என்னோட கஷ்டப்பட வேண்டாம். நீ நல்லா படிச்சவனா பார்த்து கட்டிக்கடியம்மா?" எனக் கேலியாக சொன்னான்.

"ஆமா, படிச்சவன தான் கட்டிப்பேன். பின்ன உன்னையா கட்டிப்பேன்? உன்னை கட்டிட்டு கஷ்டப்படனும் எனக்கு என்ன தலையெழுத்தா டா?" என அவளும் கோபத்தில்  சொன்னாள்.

தலைக்கு மேல் கையை உயர்த்தி பெரிய கும்பிடாகப் போட்டவன், "போடி மா. இதோ இன்னக்கி ஒருத்தன் கைய பிடிச்சீயே அவன கூட கட்டிட்டு சந்தோஷமா வாழு. போடியம்மா." என்று கைகளை இரண்டையும் வேறு திசையில் காட்டிச் சொல்ல, 

அவனை அழுத்தமாகப் பார்த்து கொண்டு நின்றாள். அவனும் விடாது, "போடி" என்றான். அவளும் விறுவிறுவென நடந்து சென்று விட்டாள். 

"என்னடா இப்படி பேசி அனுப்பி வச்சிட்ட?"

"வேற எப்படி பேசற சொல்ற என்னைய, இந்தக் காக்கிச் சட்டை அவளுக்கு பிடிக்கலையாம். படிச்சவன தான் கல்யாணம் பண்ணிப்பாளாம்.  போகட்டும். போய் பண்ணிக்கட்டும். யார் தடுத்தா?

ஆனா, என்னை போல அவள காதலிக்க எவனால முடியும்? அவள தேவதையா தாங்க எவன் வருவான்? படிச்சவன் வசதியா வச்சிப்பான் தான். ஆனா அன்பு, காதல்ல, பாசம் அக்கறை இதெல்லாம் கொடுப்பானா? ம்... கிழிப்பான். 

பணம் பணம் அது பின்னாடி ஓடுறவன தான் அவளுக்குப் பிடிக்கும். பாசம், அன்பு, காதல்னு பின்னாடி சுத்தற என்னைய பிடிக்குமாக்கும்? போகட்டும்  போடா." என்றவனின் கண்களில் நீர் வழிய  சட்டையில் துடைத்து கொண்டான்.

"சேத்தா! தென்றல் அப்படி இல்ல ஒனக்கு தெரியும். அவ கோபம் நீ கண்டக்டர் வேலைப் பார்க்கறதுனால தான். நீ இப்படி பேச்சு கேட்டு வேலை பார்க்கறது அவளுக்கு பிடிக்கல அது நியாயம் தானே.  இதுவே உன் அம்மா அவ இடத்தில இருந்திருந்தா உன்னைக் கொஞ்சி உன் வேலைய பெருமையா பார்ப்பாங்களா?  

வேலைய விட்டு வாடா தான சொல்லுவாங்க. அவங்க கோபம் சரின்னா, இவ கோபமும் சரி தானே. நமக்கு இந்த வேலை வேணாம் டா வேற தொழில் ஆரம்பிக்கலாம்." என்றான். 

"என்ன தொழில் ஆரம்பிக்கச் சொல்ற, நமக்கு என்ன தெரியும்?" 

"நாம, சைடா பார்க்கிற இந்த ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் மெயினா பார்த்தா என்ன? ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்  பண்ணலாம் டா சேத்தா. உங்க அப்பா அந்தத் தொழில தான பண்ணார். நாமளும் அதே பண்ணலாம் என்ன சொல்ற நீ?" எனவும் அவனும் சட்டென முடிவெடுக்க முடியாமல்,  நிதானத்துடன் அவனிடம், "யோசிப்போம் டா." என்றான். 

முகத்தை துடைத்து விட்டு நடக்க ஆரம்பித்தான் சேத்தன். அவனும் பின்னே அமைதியாக நடந்தான். இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர். வீட்டுக்கு வந்தவன் உண்ணாமலே படுத்து விட்டான். 

அதிகாலையில் வேகமாக எழுந்து அவளிடம் மன்னிப்பு கேட்க வெளியே வந்தான். ஆனால் அவளோ விறுவிறுவென கோலம் போட்டு அவனைப் பாராமல் உள்ளே சென்று விட்டாள். 

பேருந்தில் கூட அவனைப் பாராது கூட்டதின் நடுவே நின்று, நேற்றைய நிகழ்வை எண்ணி கவலைக் கொண்டாள்.

அருகே நிற்கும் யாரையும் கண்டு கொள்ளவில்லை. கம்பியைச் சரியாக பிடிக்காமல் யோசனையிலே இருக்க, சட்டென மாறன் வண்டியை நிறுத்தியதும்,

பக்கவாட்டில் நின்ற தனிஷ்ஷின் மேல் அப்படியே சாய்ந்து விட்டாள் தென்றல். அவனோ அவளை விழாதவாறு அணைத்துக் கொண்டான். இதனைக் கண்ட சேத்தனின் இதயக் கூடு வெடித்து சிதறியது. 

மக்களே

தென்றலோட கோபம் சரியா? இல்ல சேத்தனோட எண்ணம் சரியா? சொல்லிட்டு போங்க மக்களே !

வழக்கமா அமைதியா தான் இருக்க போறீங்க... இமோஜி தட்டிட்டு போங்க

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0