ஆசான் - 3

May 28, 2025 - 14:12
Jul 4, 2025 - 01:44
 0  11
ஆசான் - 3

ஆசான் - 3

தன்னுடன் பயிலும் மாணவர்கள் சிலர் சைக்கிளில் வருவது போல,  பள்ளிக்கு சைக்கிளில்  செல்ல வேண்டும் என்று ஆசை வந்தது அர்ஜுனுக்கு. ஆனால், அவனுக்கு தான், எங்கிருந்தாலும் பிரச்சனை 

தேடி வந்துவிடும். இல்லையேல் பிரச்சனையை தேடி இவன் செல்வான், என்பதால் தான் சைக்கிள் வேண்டாம் என்று இந்திரா மறுக்க, மறுபடியும் என்ன மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திலே இருந்து கொண்டது.

" இவளுக்கு மட்டும் கேட்காமலே வண்டி வாங்கி குடுத்த, நான் மட்டும் உனக்கு பிள்ளையா தெரியலையா? என்னமோ  பெருசா,  அப்பா பார்ஸாலிட்டி பார்க்கிறார்னு சொன்ன, நீ மட்டும் என்ன பண்ற அதை தானே பண்ற, எனக்கு மட்டும் சைக்கிள் வாங்கி தர மாட்ற? இதுக்கு பேரு என்ன பாசமா?" என்று கண்ணீரை துடைத்த வண்ணம் கேட்க, ஆர்த்தி ஏதோ சொல்ல வாயெடுக்க, அவளை தடுத்தவர்,

"ஆர்த்தி, இங்க இருந்து டவுனுக்கு போய் படிக்கிறா, பஸ்ல தான் போகணும் வரணும், அது அவளுக்கு சிரமம்னு தான் நான் ஸ்கூட்டி வாங்கி குடுத்தேன். இத்தனைக்கும் அவ எங்கிட்ட வாய் விட்டு கேட்கல.  நானா தான் வாங்கி குடுத்தேன். ஆனா, கொஞ்ச தொலைவில இருக்க, ஸ்கூலுக்கு எதுக்கு சைக்கிள் ? அதுவும் அதே  ஸ்கூலுக்கு தான் நானும் போறேன், என் கூட வரதுல உனக்கு என்ன பிரச்சனை ...?" 

" நீ லீவு போட்டால், நான் எப்படி ஸ்கூலுக்கு போக? உன் ஸ்கூட்டிலயா போக ?"

"நான் ஏன் லீவு எடுக்கப் போறேன்...?" 

"ஆமா, நீ லீவே எடுக்க மாட்ட பாரு... அத விடு எனக்கு சைக்கிள் வாங்கி தருவீயா ? மாட்டீயா? " 

"வேலிடா ஒரு ரீசன் சொல்லு... " 

"எனக்கு உன் கூட, சேர்ந்து ஸ்கூலுக்கு வர பிடிக்கல.  ஸ்கூலுக்கு சைக்கிள்ல போறது தான் எனக்கு பிடிச்சிருக்கு..." என்றான் முடிவாக, 

" இங்க பாரு, இப்பதான் ஏதோ பிரச்சனை இல்லாம நல்ல படியா போயிட்டு இருக்கு... இப்படியே போகட்டும். சைக்கிள் வாங்கி குடுத்து, நீ எதாவது பிரச்சனைய இழுத்துட்டு வந்திடாத ...!" என்றவரை மூச்சு முட்ட முறைந்தவன்,

"அவ்வளவு தான் நீ மேல நம்பிக்கை வச்சிருக்கல...? எனக்கு சாப்பாடு வேணாம் ஒன்னும் வேணாம்..." என்று தட்டை பறக்க விட்டு அறைக்குச் சென்று விட்டான்.

"அவனுக்கு ஏன்மா சைக்கிள் வாங்கி தர மாட்டிக்கிறீங்க...? நீங்க வாங்கி குடுத்தா, அவன் ரொம்ப சந்தோசம் படுவான். உங்க மேலயும் அவனுக்கு  அன்பு வரும்மா... நீங்க வேணாம் சொல்றதுனால, உங்க மேல கோபம் தான் வரும், உங்கள பிடிக்காம போயிடுமா" 

"அவன் கேட்டதெல்லாம் வாங்கி குடுத்து தான் அவன் அன்பை பெறனும் இருந்தால், அவங்க அப்பா போல நானும்  இருந்திருப்பேனே ...! அவர் தான் மகன் மேல உள்ள கண்மூடி தனமாக பாசத்துல எல்லாத்தையும் வாங்கி குடுக்கிறாரன்னா நானும் அதே செய்ய முடியுமா டா, அது அவனுக்கு நல்லாதா? கெட்டதா? கூட அவர் யோசிக்க மாட்றார். அது தான் அவனை கெடுக்கிறது. நான் அவன் கண்ணுக்கு கெட்டவளா தெரிஞ்சாலும் அவனுக்கு நல்லது  மட்டும் தான் செய்றேன். அது அவனுக்கு இப்போ புரியாது போக போக தான்  புரியும்" என்றார்.

" சரி மா, சைக்கிள் வாங்கி குடுக்கறதுல என்ன இருக்கு?  

அவனுக்கும் மத்த பசங்களைப் போல சைக்கிள்ல  போகனும் ஆசை இருக்கும்ல மா..." நேசன் கூற,

"உங்களுக்கு தெரியாது பா... நம்மல வீட்ல இருந்து ஸ்கூலுக்கு போக, எப்படியும் 100km  இருக்கும்... இடையில வர அந்த முள்ளுக் காட்ட நினைச்சால் தான்  கொஞ்சம் பயமா இருக்குப்பா. எல்லாம் கருவேல மரங்கள் தான் புதர் மாதிரி வளர்ந்து கிடக்குது... அங்க வெட்டிப்பசங்க குடிச்சிட்டு கிடக்குறது, சீட்டாடுறதுனு  சில மோசமான வேலைகளையும் செய்றாங்கப்பா. பள்ளிக்கு, வர பசங்க எல்லாரும் அந்தக் காட்டை கடந்து தான் வர்றாங்க. பொம்பள புள்ளைங்க, அந்த இடத்த கடந்து தான் சைக்கிள்ல வருதுங்க... அதை நினைக்கும் போது உள்ளுக்குள்ள கொஞ்சம் பயமிருக்கு . அவங்களுக்கு ஒன்னு கிடக்கா ஒன்னு ஆச்சுன்னாலும் கேட்க யாருப்பா இருக்கா? பாப்பா காலேஜ் போகும் போதும் எல்லா சரியா இருக்கானு பார்க்க சொல்றதே,  எங்க வண்டி பாதிலே நின்னுடுமோ பயம் தான். நின்னா உதவிக்கு யாரு வரமாட்டாங்க... அங்க இருக்க பசங்க கையில சிக்குன்னா போதையில இருக்கறவனுங்க என்ன பண்ணுவானுங்க தெரியாதுப்பா... அதான் என் பயமே.ஸ்டுடெண்ட்ஸூமே ஸ்கூல்ல இருக்குற வரைக்கும் நல்ல பசங்களா இருக்கிறானுங்க வெளிய வந்ததும்  மாறிடுறானுங்க பா. என்ன தான் புத்திமதி சொன்னாலும்

ஏத்துக்கிட்டு நல்ல வழியில போறதும் இல்ல காத்துல ஊதிவிடுறதும்  அதுங்க விருப்பம்... இவன் பிரண்டஸோட போறேன் சொல்றான் எதாவது கெட்ட பழக்கத்த பழகிட்டு வந்திடுவானோ பயமா இருக்கு... அதான் அவனை என் கண் பார்வையிலே வச்சிருக்கேன் பா ...!"  நீண்ட விளக்கத்தை கொடுக்க, அது அவர்களுக்கு சரியென பட்டது.

"புரியுது மா, நீ சொல்றதும் சரிதான் கூடா நட்பு கேடு விளைவிக்கும்... பள்ளியில, வீட்ல பசங்களுக்கு நல்லது சொன்னாலும், வயசு கோளாறுல எதையும் செய்ய வைக்கும். விடுமா அவன் புரிஞ்சுப்பான்..."என்று பேசிக்கொண்டு இருக்க, அங்கு அவனோ ருத்ரனை அழைத்தவன், " ப்பா, எனக்கு நீ என்ன பண்ணுவீயோ ஏது பண்ணுவீயோ தெரியாது?  எனக்கு நாளைக்கு சைக்கிள் வந்தாகணும் "என்று கட்டளையிட்டு போனை வைத்தான்.

மறுநாள், விடியவே ஆர்வமாக பள்ளிக்கு கிளம்பினான்... அவனது ஆர்வம் வீட்டில் உள்ளோருக்கு சந்தேகத்தை தான் உண்டு பண்ணியது... 'என்ன?' என்று யோசிப்பதற்குள்  வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்க, இந்திரா வெளிய வந்து பார்த்தார். அவரை இடித்துக் கொண்டு வெளியே வந்தான்.

ஆட்டோவில் இருந்து இருவர் சைக்கிளோடு இறங்க, புரியாமல் பார்த்தார். ஆனால் அர்ஜுனின் கண்கள்  சைக்கிளை கண்டு பளபளத்தன.

ஆர்வமாக சைக்கிளில் உள்ள கவரை பிரித்தான் .

"நான் சைக்கிள் எதுவும் ஆர்டர் பண்ணலையே...!" அவர்களை பார்த்து இந்திரா கேட்க, " இல்லங்க ருத்ரன் ஐயா தான், ஆடர் பண்ணி வீட்ல வந்து கொடுக்க சொன்னாங்க. தம்பி, நீங்க ஓட்டி பாருங்க ...!"  என்று சாவியை கொடுக்க, அவனும் வாங்கி ஓட்டிப் பார்த்து விட்டு அவர்களிடம், " நல்லா இருக்கு, அப்பா கிட்ட சொல்லிடுங்க ...!" என்று சைக்கிளின் சாவியைச் சுழற்றிய படி, இந்திராவை இடித்து விட்டு உள்ளே போனான்.

அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் முன்னே வந்து நின்றார். "நான் தான் சைக்கிள் வேணாம் சொன்னேனே. என் பேச்சை கேட்கவே மாட்டீயா நீ? "

"நானும் தான் சைக்கிள் வேணும் கேட்டேனே... என் பேச்சையும் தான் நீயும் கேட்கல, நான் இனி சைக்கிள் தன் ஸ்கூலுக்கு போவேன். உன்னால  முடிஞ்சுத பண்ணிக்கோ...! "என்று எதிர்த்து பேசிவிட்டு பேக்கை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றான்.

"இந்த மனுசன என்னால முழுசா தலை முழுக முடியல பா... தன் புள்ளை கெடுக்கிறோம் கொஞ்சம் கூட அவருக்கும் அவரால் கெட்டுப் போறோம்னு இவனுக்கும் தெரிய மாட்டிக்கிதுப்பா. இதுனால என்ன விழைவுகள் வரப்போகுதோ ...!" தலையில் அடித்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினார்.

அவன் முன்னே செல்ல, இந்திரா பின்னே சென்றார். தன் நண்பர்களிடம் சைக்கிளை காட்டி மகிழந்தான்.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றான். படிக்க அல்ல, நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு சைக்கிளில் செல்வதற்காக, அந்தப் பள்ளியில் படிக்கும் பாதி மாணவ மாணவியர்கள் சைக்கிளில் தான் சென்று வருகிறார்கள். பள்ளிவிடும் பொழுது மாணவர்களோடு சேர்ந்து இந்திராவும் அந்த முள்ளுக் காட்டை தாண்டி தான் வீட்டிற்குச் செல்வார். அதை தாண்டும் பொழுதெல்லாம் மனதில் சிறு பயமும் உடலில் சிறு அதிர்வும் வந்து போகும். 

சுடுகாட்டைக் கண்டால் கூட, இத்தனை பயத்தை மனம் உணர்ந்திருக்காது... ஏனோ, அந்த இடம்,  அதை எண்ணினாலே கதி கலங்கிறது... சில ஆசிரியர் அங்கு நடந்த கசப்பான உண்மையை கூறி மேலும் பயத்தை வளர விட்டனர். பலாத்காரம் ,பாலியல் தொல்லை, கொலை என மாதமொருமுறை நிகழ்வதாக கூறினார்கள். போலீஸ், கலெக்டரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் நொடித்துக் கொண்டனர்.

கடவுளிடம் தினமும் வைக்கும் பிராத்தனையில் ஒன்று அந்த முள்ளுக் காட்டிற்கு யாரும் பலியாகக் கூடாதென்று தான். ஆனால் அக்காடோ அடுத்த பலிக்கு

தயாராகிக் கொண்டிருந்தது, அதுவும் இந்திராவின் மகனை வைத்தே...!

அவர் ஏது நடக்கக் கூடாது என்று எண்ணியிருந்தாரோ அது நடந்து விட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களில் சிலர் கூடி இருக்க, அவர்கள் முன்னே அர்ஜுனை அடியென அடித்து விட்டார். மாணவர்கள்,  மிரண்டு போய் பார்த்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0