மயில் - 7

மயில் - 7
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றைவிடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகைஈன்றன, ஆய மகள் தோள்
- முல்லைகலி கலித்தொகை
ஆண்யானையைக் காட்டிலும் அஞ்சாக் கண் கொண்ட இந்தக் காளையை விடாமல் நீ பற்றிச் சென்றால், இந்த ஆயமகள் உனக்குத் தன் படுக்கையை விரிப்பாள். - ஒருத்தி சொல்கிறாஈள்.
**********************************************
மலைமேக தாத்தா, இறந்த செய்தி சொந்த பந்தங்களுக்கும் ஊர்காரர்களுக்கும் சொல்லியனுப்பி வைக்க, மறுநாள் யாரும் மாட்டு பொங்கல் விழாவை கொண்டாட வில்லை...
ஊர்மக்கள் அனைவரும், மலைமேக தாத்தாவின் வீட்டிற்கு சென்றுவருவதுமாக இருந்தனர். ஊர் பெரியவர் என்பதால், ஊர்மக்கள் துக்கத்தை அனுசரித்தனர்.
பார்வதிக்கு அவர் நெருங்கி சொந்தம் என்பதால் அவளது அண்ணனும் அண்ணியும் வந்திருந்தனர்.
வேதநாயகத்திற்கும் அவர் சொந்தம் என்பதால் அவரும் அவரது மனைவி காமாட்சியும் வந்தனர்.
அவர்கள் வருவது முன் கூட்டியே மாதவனுக்கு தெரியும் என்பதால், தன் தங்கிருந்த வீட்டிற்கு வரச் சொல்லிருந்தான்...
இரவே இறந்து விட்டதாலும் வெகு நாட்களாக படுக்கையில் இருந்ததாலும் காலையில் நேர வாக்கில் சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர் ...
பின் அவரவர் வீட்டை நோக்கிச் செல்ல, மாதவன், தாய்தந்தை இருவரையும் தன் தங்கிருந்த வீட்டிற்கு அழைத்து வந்தான்..
வாசலில் திண்ணையில் நால்வரும் அமர்ந்து கொண்டனர் ..." என்னப்பா செழியா, எப்பிடி இருக்க? ஆள் கொஞ்சம் இளச்சி போன மாதிரி இருக்கீயேப்பா..." என்று குசலம் விசாரித்தார் வேதநாயகம்.
" பின்ன காதலி பின்னாடி சுத்தி இளைச்சா கூட மனசு ஆறிடும்ப்பா ஆனா, காதலிச்சிட்டு சுத்திட்டு இருக்க உங்க மகன் பின்னாடி சுத்தி சுத்தியே இளைச்சுட்டேன் , அத நெனச்சு நெனச்சு ரொம்ப இளைச்சு போறேன்..." பாவப்பட்ட ஜீவனை போல முகத்தை வைத்து கூறினான். வீடே அதிரும்படி சிரித்தார் வேதநாயகம்.
"மாதவா, என் மருமகள காட்டு. இவ்வளவு தூரம் வந்திட்டு மருமகள பார்க்காம போனா நல்ல இருக்காது, அவளை பார்த்தே ஆகணும் காட்டுடா... " என்று ஆசையாக கேட்க, " அப்போ உன் மகனை பார்க்க வரல நீ?என்னை விட மருமக முக்கியமா போயிட்டா உனக்கு"என்று நொடித்து கொள்ள,
" ஆமா டா, என் மருமக தான் எனக்கு முக்கியம். உன்னை விட, என் கூட அதிகமா இருக்க போறவள நான் பார்க்க வேணாமா?" அவரும் அவனுக்கு சலித்தவரில்லை என்பது போல கேட்டு வாயை பிளக்க வைத்தார் .
"மொதல ஊர் தலைவர பார்த்துட்டு , அப்றம் உங்க மருமகளை காட்றேன்... " என்று அவர்களை,
அருகிலுள்ள மயிலினி வீட்டிற்கு அழைத்து சென்றான். பார்வதியின் அண்ணன் வீராசாமியும், அண்ணி அன்னமும் அங்கே வாசலில் அமர்ந்திருந்து கார்மேகம் கருப்பையாவோடு பேசிக் கொண்டிருந்தனர்.
இழவு வீட்டிற்குச் சென்று வந்ததால் வீட்டிற்குள் செல்லாமல் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவர்களும் உள்ளே நுழைய, சம்பரதாயதுக்கு கார்மேகம் அவர்களைஅழைத்தார். வீராசாமியும் உரிமையோடு அழைத்தார்..." வாண்ணே... வாங்க மதினி..."
அவர்களை கண்டதும் ரங்காவை விட்டு நாற்காலிபோடச் சொன்னார் கார்மேகம், "என்ன வீரா, இங்க இருக்க? " அவருக்கு போட பட்ட நாற்காலியில் அமர்ந்தவாறு கேட்டார்.
" இங்க தானே என் தங்கச்சி பார்வதிய கொடுத்திருக்கோம்ணே... " என்றார்
"அப்டியா, சரியா சரியா, நம்ம புள்ள மாதவனுக்கு இங்கதேன் வேல கொடுத்திருந்தாய்ங்க, என் புள்ள ஒருவாரமா இங்கன தான் இருக்கான்... அவனை இவங்க தானே பார்த்துகிட்டாங்க, அதான் பார்த்து நன்றி சொல்லிட்டு போலாம் வந்தேன்... பார்த்தா, நம்ம சொந்தமால போயிருச்சு..." என்றவர், கார்மேகம் புறம் திரும்பி, " நல்ல இருக்கீங்களா? என் புள்ள சொல்லும் போது தெரியல, இம்மூட்டு நல்ல மனசுகாரங்களை பார்க்க அரிதாகி போச்சு... ஊருக்கு வேலயா வரவிங்கள உபசரிகிறது பெரிய விசயம் இல்லயா...! ரொம்ப நன்றியங்கயா ..." என்று கும்பிட,
" இதுல என்னங்கய்யா இருக்கு? நம்ம ஊருக்கு வந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்தாலும் உபசரிப்பது எல்லாம் ஒன்னு தாங்கய்யா... எங்களை நம்பி வந்தபிள்ளைய சும்மா விட்ருவோமா? அதுவும் இப்படி ஒரு நல்ல பிள்ளைக்கு செய்ய கசக்குமா என்ன?" என்று மாதவனை புகழ, வெட்கம் கொண்டான்...
"வந்தவர்களுக்கு செம்பு நிறைய நீர் எடுத்து வந்து கொடுத்தாள் மயிலினி, அவளிடம் இருவரையும் கண்காட்ட புரிந்தது போல தலையை ஆட்டியவள் அவர்களுக்கு வணக்கம் வைத்து விட்டு உள்ளே சென்றாள்.
பார்வதியும் மீனாட்சியும் வந்து அவர்களோடு ஐக்கியமாக, பார்வதி அவர்களிடம் நலம் விசாரித்தார், " வாங்கண்ணே! எப்பிடி இருக்கீக? மதினி எப்பிடி இருக்கீக?" காமாட்சி பக்கத்தில் அமர்ந்தவாறு கேட்க,
" நல்லா இருக்கோம்தா, நீ எப்பிடி இருக்க?"
" நல்லருக்கேணே வீட்ல பிள்ளைங்க எப்பிடி இருக்காக?"
" நல்லாருக்காங்க, மூத்தவன் பிசினஸ் பண்றான், இளையவன் இதோ நிக்கறான் ல..." அவனை காட்ட, " தம்பி தான் உங்க பிள்ளையா? மாமா, அன்னைக்கு பாப்பா கண்ணாலத்தை பத்தி பேசிட்டு இருக்கும் போது சொன்னேனே அது இவுகள பத்திதேன்.." என்றதும் , கார்மேகம், " அப்டியாத்தா...!" எனவும் வேதநாயகம் குழம்ப, பார்வதி அனைத்தும் கூற ஒரே அதிர்ச்சி,
" என்னடா காளைய அடக்காம மாப்பிள்ளையா ஆகிடுவா போல ... அங்க சுத்தி இங்க சுத்தி, மயிலு முறை யாகி போச்சே, உன் காட்டுலே மழை தாண்டா..." என்றவனை வெட்கச் சிரிப்போடு அடக்கினான்.
"அப்றம் என்ன பேசி முடிக்க வேண்டியது தானே? சொந்ததுகுள்ள சொந்தமா போயிடும் ..."வீராசாமி கூற, கார்மேகம் முகம் மலர, வேதநாயகத்தின் முகம் யோசனையிலிருந்தது.
"என்ன அண்ணே என்ன யோசனை?"
" இல்ல தம்பி, பையன் யாரையோ விரும்பறான், அந்தப் புள்ளைக்காக மாட்டை அடக்கறேன் சொல்லிட்டு திரியிறான் அதான் யோசனை இருக்கு..." என்னும் போதே மாதவன் குனிந்து அவர் காதில்,
" அப்பா, அந்த பொண்ணு தான் இந்த பொண்ணு" என்றதும் அவர் முகம் மலர, கார்மேகமோ கேள்வியாக மாதவனை ஏரிட்டார்...
" ஐயா, உங்க பொண்ண பார்த்ததும் பிடிச்சிருச்சு, அவங்க கிட்ட சொன்னேன் காளைய அடக்கறவன தான் கட்டிப்பேன் சொன்னாங்க, அதான் வர அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல அழகன அடக்கிட்டு உங்க கிட்ட பேசலாம் இருந்தேன் அதுக்குள்ள..." என்றதும் அவர் மனம் குளிர்ந்து போனது, மகளின் விருப்பத்திற்க்கு மதிப்பளிக்கும் மாப்பிள்ளை எடுக்க கசக்குமா என்ன? மூத்த மாப்பிள்ளை போல இரண்டாவது மாப்பிள்ளையும் அமையனும் என்ற அவரது ஆசைகேற்ப , மாதவனும் இருக்க, வேண்டாம் என்பாரா?
"ஏத்தா மயிலு இங்க வாத்தா..." என்று அவளை அழைக்க, சிவப்பு நிற பாவாடை சந்தன நிற தாவணியில் அழகோவியமாக வந்தவளை இருவரும் பார்த்தனர், நீர் கொடுக்கும் போது சரிவர பார்க்காதவர்கள், அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தனர்... அவளோ, மீண்டும் வணக்கம் வைத்தாள் இருவருக்கும்...
"என் மருமவள எனக்கு பார்க்காமலே பிடிச்சிகிடுச்சு... ஜல்லிக்கட்டு ஒரு விளயாட்டானு கேட்டவன, காளை அடக்கினாதேன் கண்ணாலம் சொன்ன, என் மருமவ மேல நெறய மதிப்பு வந்துடுச்சு, அவன் சொன்னதும் என்ன ஆனாலும் சரி அந்தபுள்ள தான் மருமவ முடிவு பண்ணிட்டேன்... நீங்க என்ன சொல்றீங்க...?"கார்மேகத்தை பார்த்து கேட்க,
"இதுல நாங்க என்ன சொல்ல இருக்குங்க?என் மக விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து, பழக்கமில்லாத விளாட்டுனாலும் விளாட்டுல ஜெய்க்கணும், என் மவள கண்ணாலம் பண்ணிக்கணும் நிக்கற என் மாப்பிள்ளைய எப்படி வேணான்னு சொல்ல மனுசு வரும்... என்ன தம்பி நான் சொல்றது, நீ என்னத்தா சொல்ற? " தன் மனைவியை பார்த்து கேட்க,
"பார்வதி சொல்லும் போதே, அந்த சம்பந்தத்த முடிக்கணும் நெனச்சேன்... இப்போ மாப்பிள்ளை பொண்ணுக்காக இம்மூட்டு செய்யும் போது. வேண்டாமுன்னு சொல்லுவேணா..." தன் பங்கிற்கு விருப்பத்தை தெரிவித்தார்.
"மாட்டு டாக்டரா வந்தவரு, மாப்பிள்ளையா ஆகிட்டாரு.. " கருப்பையா கூற கலகலவென சிரிக்க, மயிலினியும் மாதவனும் காதலாய் பார்த்துக் கொண்டனர்.
"ஏத்தா உனக்கு சம்மதம் தானே?" எனக் கேட்கவும் குனிந்தவாறே தலையை சம்மதம் என்றே அசைத்தாள்.
"அதான் பொண்ணுக்கே பிடிச்சி போச்சே, ஏதுக்கு காளை அடக்கிட்டு கண்ணாலம் வேலய பார்க்கலாம்ல...? " வீராசாமிகேட்க, மயிலினியின் முகம் சற்று வாடியது.
" இல்ல சித்தப்பா, காளை அடக்கிட்டே மயில கல்யாணம் பண்ணிக்கிறேன். அவ, விருப்பத்தை நிறைவேத்துறது என்னுடைய கடமை அதை செய்யாம இருக்க மாட்டேன்... நாளைக்கு அழகன அடக்கனதுக்கு பிறகு தான் மத்தது... " என்றான் தீர்வாக,
விழிகளில் காதல் பொங்க," இவன் என்னவன்" என்ற கர்வ புன்னகை மிளிர்ந்தது அவளுதட்டில். மீசையை நீவிக் கொண்டு தன் மகனை எண்ணிப் பெருமை பட்டுக்கொண்டார் வேதநாயகம்... " அப்போ,
மாமா அழகன அடக்கலேன்னா?" மணி தன் அறிவுக்கு எட்டிய கேள்வியை கேட்டு விழிப்பிதுங்க வைத்தாள்..
"அதுக்கென்னத்தா, ஒருவருசம் என் புள்ளைக்கு பயிற்சி குடுத்து, அடுத்த ஜல்லிக்கட்டுல உங்க அழகன அடக்க விட்டு, என் மருமவள கூட்டியாறா சொல்லுவேன்..." எனமீசை பட்டென பதிலளித்ததும் மாதவனின் முகம் அஷ்ட்கோணலானது. அதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
மறுநாள், அவர்கள் எதிர்பார்த்திருந்த நாளும் வந்தது... உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவிழா, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருந்தது...
ஆட்சியரலிருந்து அமைச்சர் வரைக்கும் விழாவிற்கு விருந்தினராக வந்தனர்.
காவல்துறையின் கண்காணிப்பில் போட்டி நிகழ இருக்கின்றது...
ஆறநூறுக்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களை மூன்று தவனையாக பிரித்து வண்ண ஆடைகளை கொடுத்திருந்தனர்...
வாடிவாசல் பின்னே ஐந்நூறுக்கு மேற்பட்ட மாடுகள் வரிசைக்கட்டி பிடிக்காரர்களுக்கு சொல்லுக்குகட்டு பட்டு நின்றிருந்தன.
தமிழர்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டு போராடி மீட்டு தந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டையும் அதன் பழமையையும் பெருமையையும் இப்பொழுது எண்ணினாலும் இதயம் துடிக்க, தேகம் சிலிர்க்கிறது மறந்த வீரமும் சீறியெழும்...
பல நூற்றாண்டுகளை தாண்டி நிற்கும் தமிழினத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு. ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும்.
ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் நின்று அடக்கிறார்கள்.
"சல்லி" என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும்.
மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. இதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டு என்றானது..
கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.
ஏறுதழுவும் இளைஞர்களைப் ஆயர்குல பெண்கள் விரும்பி மணம் முடிப்பதை முல்லைக்கலியில் இருக்கிறது.
காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் ஆயமகளிர் மணப்பது இல்லை. தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.
காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றானது.
ஜல்லிக்கட்டு என்பது நாம் நினைப்பதைப் போல வெறும் பொங்கல் விளையாட்டோ அல்லது சம்பிரதாயமோ மட்டுமல்ல. மனித சமூகத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு அதன் பின்னால் மிகப்பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது.
மனித சமூகத்தின் இனவிருத்திக்காகவும், நாட்டு மாடுகளின் இனவிருத்திக்காகவும் ஆண்களையும், காளைகளையும் தயார் செய்யும் வகையில் உருவானதுதான் ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டு.மாட்டை அடக்கும் வீரனை மணந்தால் வலிமையான, ஆரோக்கியமான குழந்தைகள் கிடைப்பார்கள்’ என பெண்ணுக்கு அடையாளம் காட்டுவதைப்போல, ‘இதில் ஈடுபடும் காளை வலிமையானது... இதன் மரபணுக்கள் வலிமையானவை... இதன் மூலம் சிறந்த மாடுகளின் சந்ததிகளை உருவாக்கலாம்’ என காளைகளையும் அடையாளப்படுத்திக் காட்டும் நிகழ்வாகவே ஜல்லிக்கட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் குறுகலான வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்படும் போது, வேகமாகப்பாயும் காளைகளிடத்தில் அட்ரினலின்(Adrenaline) சுரப்பியின் உந்துதலால் சாதாரணமாகத் துடிக்கும் வேகத்தைவிட இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.வேகமான இதயத்துடிப்பு காளைகளிடத்தில் உற்பத்தியாகும் Testosterone எனப்படும் ஆண் மரபணுவின் வீரியத்தையும் அதிகரிக்கிறது. நாட்டு ரக காளைகளுக்கு இந்த செயல்முறை அத்தியாவசியமானது. சாதாரணமாக பசு, காளையின் இணை சேரும்போது அந்த காளையின் அணுக்களில் வீரியம் வலிமையாக இருக்காது. இணை சேரும் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டால் காளைகளின் இனப்பெருக்க வீரியம் குறைந்து மாடுகளுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையையே நம்பவேண்டிய நிலை கட்டாயமாகிவிடும். நாட்டு இன மாடுகள் இன்னும் மிகப்பெரிய அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும். இனவிருத்திக்குப் பயன்படாத காளைகளை தானாகவே மாட்டிறைச்சிக்கு பயன்படுத்தத் தொடங்குவர்.
இதுதான் வெளிநாட்டு மாடுகளையும், பாலையும் நம்நாட்டுக்குள் கொண்டுவரும் மிகப்பெரிய வியாபார உத்தியாக மெல்லமெல்ல நடந்துகொண்டிருக்கிறது. 130 வகை கால்நடை இனங்கள் இருந்த நம் நாட்டில் இன்று 37 வகை மட்டுமே இருக்கின்றன என்பதைக் கவனித்தால் இந்த விஷயத்தின் தீவிரம் புரியும்.எனவே, மிச்சமிருக்கும் நாட்டு மாடுகளைக் காப்பதன் மூலமே மனித சமூகத்தையும் காக்க முடியும். ஜல்லிக்கட்டுகளையும் நாட்டு மாடுகளையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
வாடிவாசலின் அருகே மக்கள் அமர்ந்து பார்க்க மேடையிட்டு இருந்தனர், பலர் வீட்டிலிருந்தும் பார்த்தனர்...
பறக்கும் கேமிராக்களும் லோக்கல் சேனலில் இருந்து படம்பிடிக்கப் பட்டது. மக்களின் கூச்சல்களும் காரகோசங்களும் காதை பிளந்தன.
தந்தையின் ஆசிப்பெற்று, காதலியின் கடைக்கண் பார்வையில் காதலும் தவிப்பும் கண்டு நம்பிக்கையை விழியசைவில் தந்து, ஊர் பெரியவர்களை வணங்கிவிட்டு, நண்பனை அணைத்துவிட்டு களத்தில் இறங்கினான் மாதவன். அங்கே மகேந்திரனும் மீசையை முறுக்கிக் கொண்டு நின்றான்.
இதை கவனித்த கார்மேகமும் கருப்பையாவும் கடுகடுத்தனர். கஜேந்திரன், அவனை அங்கு எதிர்பார்க்கவே இல்லை... திருமலை மாட்டுடன் இருந்ததால் செய்தி செல்லவில்லை..
வேதநாயகத்தோடு சம்பந்தம் வைத்த விசயம் பச்சையம்மாள் மூலமாக கண்ணமாவின் காதுகளுக்கு எட்டி, அது மகேந்திரனை சென்றடைய, ஈசனின் கழுத்திலிருக்கும் நஞ்சை போல அவன் மனதில் நிரந்தரமாக நின்ற வஞ்சகம், மதியையும் ஆக்கிரமித்தது, அவர்களை பழி தீர்க்க, செல்லிற்கெல்லாம் கட்டளையிட்டது போல, ஒவ்வொரு செல்லும் அவர்களை எதாவது செய்ய சொல்லித் தூண்ட, வேறு வழியே இன்றி, களத்தில் இறக்கினான்.
வாடிவாசலில் அழகனை அடக்கி, அவளை கட்ட வேண்டும், அவளை வைத்தே அனைவரையும் பழி தீர்க்க எண்ணி அதில் கலந்து கொண்ட அடிபட்ட வஞ்சக நரி, மாட்டையும் மாதுவையும் வேட்டையாட துடித்து கொண்டிருந்தது.
மாதவனைக் கண்ட மகேந்திரன், அவனை ஏளனச் சிரிப்பில் பார்க்க, மாதவனோ, திமிர்ச் சிரிப்போடு அவனை எதிர்கொண்டான்..
விழா தொடங்கியது, காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்கப் பட்டது... முதலில் வந்த காளைகள் எல்லாம் கோவிலுக்கு நேந்து விட்ட காளைகலும் கன்று குட்டிகளும் என்பதால், அதனை பிடிக்க வேண்டாமென்று கூறிவிட்டனர்
அதன் படி முதல் மூன்று மாடுகளை அவிழ்த்து விட்டனர்.
அந்த மாடுகள் சென்ற பின், அடுத்து வந்த மாடுகளை பிடிக்கச் சொன்னார்கள். திமில் நிறைந்த காளைகள் அவிழ்த்து விட ஆரம்பித்தனர்..
காளைகளின் குணத்தையும் தரத்தையும் பொருத்தே அதற்கான பரிசு பொருட்களை நிர்ணயம் செய்வார்கள்... காளையை அடக்கினால் அப்பரிசு வீரனுக்கு. அடக்கவில்லை என்றால் மாட்டுகார்களுக்கு...
ஒரு எல்லை வரைதான் மாட்டின் திமிலையும் கொம்பையும் பிடிக்க வேண்டும்... ரெண்டு மூன்று பேர் பிடித்தால் "மாடு பிடிமாடு இல்லை "என்றிடுவார்கள்.
ஊர் பேரையும் மாட்டின் உரிமையாளரின் பேரையும் அதன் பரிசையும் மைக்கில் சொல்வார்கள்...
வாடிவாசலை விட்டு வெளி வந்த சில காளைகள் நின்று விளையாடும் சில காளைகள் பயந்து ஓடும், சில காளைகள் மிரண்டு குத்திச் செல்லும், சில மாடுகள் வாடி வாசலில் இருந்தே தாவிக் குதிக்கும் அத்தனை காளைகளையும் வீரர்கள் எதிர்க்கொள்வார்கள்...
வாடிவாசலை சூழ்ந்தே வீரர்கள் மாட்டை எதிர்ப்பார்த்திருப்பார்கள்.
முதலில் அமைச்சரின் மாட்டை அவிழ்த்து விட்டனர், யார் கையிலும் சிக்காமல் ஓடி விட, " மாடு பிடிமாடு இல்லை " என்று ஒருவர் மைக்கில் கூற, பிடிக்காரர்கள் வந்து பரிசை வாங்கிச் சென்றனர்.
அதே போல, நாலைந்து மாடுகள் அவிழ்த்து விட்டனர்.... அதன் பின் " ஊர் தலைவர் கார்மேகக்கோனார் மாடு, ஊர் தலைவர் கார்மேககோனார் மாடு.... மாட்டை பிடிச்சா, தங்க காசு..." என்றவர் மேலும் இதர பொருட்களை எல்லாம் சொன்னார்கள்...
உள்ளே திருமலை கயிறை அவிழ்க, பெயரை சொன்னதும் வீரர்கள் ஒதுங்கி நின்றார்கள், உள்ளிருந்து பாய்ந்து வெளியே வந்த அழகு நடுவில் நின்றது... அதனை பிடிக்க யாரும் முன் வராத நேரத்தில் அதன் மேல் பாய்ந்தான், மகேந்திரன்.
அவனை கண்டதும், அன்று வந்தது அவன் தான் என்று நினைவுகூர்ந்து கொம்பால் குத்தி கிழித்து தூக்கி எறிந்தது... மேலும் அவனை குத்தி வர பயத்தில் தரையில் படுத்துக்கொண்டான்.
அதைக் கண்டு அனைவரும் மிரண்டு போக, மாதவனும் ஒரு கணம் அரண்டு தான் போனான்.. பின் மாடு எல்லையைக் கடக்க ஓட, அந்தச் சமயத்தில் மாதவன் அழகின் மீது பாய்ந்தான். முதலில் சீறியது அழகு. ஆனால் அவனோ திமலையும் கொம்பையும் விடாது பிடித்திருந்தான் அவனையும் அவனது பிடியையும் நினைவுகூர்ந்து அவனை ஏதும் செய்யாது அவனை எல்லை வரை சுமந்து சென்றது.
" மாடு பிடி மாடு" என்று அறிவித்த பின்னரே, அதனை விட்டான்..
கார்மேகத்திற்கும் கருப்பையாவிற்கும் கொள்ள சந்தோசம்... வேதநாயகம் மீசை நீவிக் கொண்டு பெருமையாக பார்த்தார்... மயிலினி கண்கள் ஆனந்த நீரால் குளம் கட்டிப்போக, மணி அவளை அணைத்துக் கொண்டாள்..
தங்க காசுடன், இதர பரிசுகளோடு மயிலினியின் இல்லம் வர, அங்கே அனைவரும் அவனை வரவேற்க காத்திருந்தனர்...
ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தனர்... அன்றைய நாளிலே பாக்கு வெத்தலை மாற்றி பேசி முடித்தனர்.
அதன் மூன்று வாரங்கள் கழித்து.... அலங்காரநல்லூரில் உள்ள கோயிலில் மாதவன், மயிலினி கழுத்தில் மஞ்சள் நாணை பூட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான்..
பக்கத்திலே மண்டபத்தில் வரவேற்புவிழா வைத்திருந்தனர்... பெரியவர்கள் வாழ்த்து சொல்லிவிட்டு போக, தோழமைகள் பரிசு கொடுத்து விட்டு சென்றனர்...
மாலையில், முதலில் மயிலினி இல்லம் வந்தவர்களுக்கு மணமக்களோடு சேர்ந்து அனைவரும் கடவுளை வணங்கிவிட்டு, பின் அவர்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்... பிறகு நல்ல நேரத்தில் சீர் சனத்தோடு மாதவனின் இல்லம் செல்ல இருக்க, அழகுவை கட்டிக் கொண்டு அழுதாள் மயிலினி. அதுவும் அவளை போக விடாமல் கையை உரசிக் கொண்டே இருந்தது...
"அழுகு, இது என் வரமா ? சாபமா தெரியல? ஆனா
பொண்ணா பொறந்த யாருக்கும் பொறந்த வீட்டை விட்டுபோய் தானே டா ஆகணும்... சமத்த இருயா நீயி...! யாரையும் கஷ்ட படுத்தாதையா... அக்கா வரேன்" என்று அழுதுக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.
அனைவரும் மாதவன் வீட்டிற்கு வந்தனர், வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தவள், பூஜை அறையில் விளக்கேற்றினாள்...
வேதநாயகம் மறுத்தும் வீட்டை சீருசனத்தால் நிரப்பி விட்டார் கார்மேகம்... இரவு விருந்தையும் முடித்து விட்டு வீடு திரும்ப, பச்சையம்மாளிருந்து ரங்கன் வரைக்கும் கண்டுபிடித்து அழுதுவிட்டாள்...
"யக்கா, எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன் சொல்லிட்டு, நீ முன்ன பண்ணிக்கிட்ட?" பொய் கோபம் கொண்டான் கருப்பன்...
" விருந்துக்கு வரப்பா, நல்ல செய்தியா சொல்லுடா கருப்பா...! " என்று கண்ணடிக்க, அவனோ புரியாமல் விழித்தான்...
திருமலை அவன் அருகில் வந்து, "கறிக்கடை மாமாகிட்ட பேசிட்டோம் டா கருப்பு, போனதும் உன் கல்யாண வேலதேன்..." என்றதும் அழுதேவிட்டான்...
பின் திருமலை, மாதவனின் தோளில் கையை போட்டு, "மாப்புள, தங்கச்சியா நல்ல பார்த்துகிடுங்க, அவ கண்ணுல தண்ணீ வந்தா, நான் வரமாட்டேன், அழகனதேன் அனுப்புவேன்.. எப்படி வசதி...?" செல்லமாக மிரட்ட, "ஏன் மாமா, காளை அடக்கின அப்றம் அத வச்சே மிரட்ற?, உன் தங்கச்சி மேல் தண்ணீ கூட பட விடமாட்டேன் மாமா... " என்றான் அன்புச் சிறையில் இருந்து கொண்டு.
"அம்புட்டு பயம் அழகன மேல... சரி மாப்புள, நான் வரேன்..." என்றான் பிடியை விடுத்து
" எலும்ப ஒடச்சிட்டு போறானே, என்னத்த திம்பானோ...! "வாய்க்குள்ளே முணுங்கி கொண்டான்...
அழுது நிறுக்கும் தன் மனையாளை தூக்கி நேராக அறைக்குச் செல்ல ஆசைத்தான் இருந்தாலும் உள்ளிருக்கும் ஜீவன்கள் அற்பமாக எண்ணிவிடுவார்கள், என்று அவளருகில் சென்று, முகத்தை ஏந்தி கண்களை துடைத்து விட்டு உள்ளே அழைத்து சென்றான்.
அவளை முதலிரவுகாக அலங்காரம் செய்தாள் சினேகா, இரண்டு வாரத்திலே, காமாட்சியோடும் சினேகாவோடும் பேசி தோழியாகி கொண்டாள் .
செழியனும் மதுசூதனனும் மாதவனின் அறையை அலங்கரித்தனர்... " செழியா, உனக்கு எப்போடா கல்யாணம்...?" மது கேட்க, " இப்போதானே மாதவன் கல்யாணம் முடிஞ்சிருக்கு, அடுத்து நீங்க தான் வந்து பொண்ணு வீட்ல பேசி என் கல்யாணத்த முடிக்கணும்" என்று உரிமையோடு கேட்க,
" அதுகென்ன அப்பாவோட சேர்ந்து போய் கேட்டுடுவோம், உன்ன மட்டும் சங்கத்தில் சேர்க்காம விடுவோமா?..." கேலி செய்ய வெட்கம் கொண்டான்..
மாதவனையும் மயிலினியையும் அறையில் விட்டனர்... மஞ்சத்தில் தன் மனையாளியின் அருகில் அமர்ந்தவன், அவள் விரலில் சுழுக்கெடுக்க, நேராகவே கேட்டு விட்டாள்...
"என்ன வேணும் மாட்டு டாக்டருக்கு?" அவன் முகம் பார்த்து கேட்க,
" அடியே, புருசன ஒன்னு அத்தான்னு கூப்பிடு, இல்ல மாமானு கூப்பிடு, இல்லேன்னா ஏங்கனு சொல்லு, அதென்னடீ மாட்டு டாக்டரு ஒழுங்கா புருசனுக்கு மரியாதை கொடு..." என்று மிரட்ட, அசட்டை பார்வை பார்த்தவள்,
"உங்கள அப்படித்தேன் கூப்பிட வருது டாக்டரே, நான் என்ன பண்ணட்டும்?" என்றவளை முறைத்தவன்,
"இந்த அறையில் நீ என்னைய எப்படி வேணா கூப்பிட்டுக்கோ, ஆனால் வெளிய மாமானு கூப்பிடு, மாட்டு டாக்டரேனு கூப்பிட்டு மானத்தை வாங்கிடாத மயிலு ..." எனக் கெஞ்ச, வாய்விட்டு சிரித்தவள்,
"சரி சரி, ரொம்ப கெஞ்சாதீக டாக்டரே! கூப்பிட உங்களை மாமானு முயற்சி செய்றேன்..." என்று அவள் பிகு பண்ண, அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு இடையை அழுத்த, வெட்கத்தில் நெளிந்தாள்...
"ரெண்டு நாளா மாமா கேக்குறேன் சொல்றீயா டீ மயிலு!" அவளை கீழே போட்டு, பக்கத்தில் அவள் புறம் திரும்பி படுத்துக் கொண்டு கேட்டான்.
"என்ன?" என்று புருவங்களை சுருக்கி கேட்க,
"ஒரு ஐ லவ் யூ...." என்றான்.மீண்டும் வெட்கத்தில் விழியை தாழ்த்தினாள்.
"என்ன டீ சொல்லு...." என்றதும் மறுபாக்க தலையை அசைத்தாள், "ஏன்டி, உனக்கு அதுக்கான அர்த்தம் தெரியாத, நான் சொன்னா சொல்வீயா?" என்றவனை கொல வெறியோடு முறைத்தவள், சட்டென எழுந்து, "என்னை என்ன படிக்காதவ நெனச்சீங்களா?" என்றதும், தலை மெதுவாய் ஆமாமென்று அசைக்க, மேலும் முறைத்தவள்.
B.vsc& AH veterinary science and animal husbandry முடிச்சுருக்கேன்..." என்றதும் அவன் அதிர்ச்சியானான்.
" அடிப்பாவி! என் இனமா டீ நீ ? முன்னாடியே சொல்ல மாட்டீயா, நீ படிக்கல நெனச்சு பத்திரக்கையில கூட என் பெயர் பின்னாடி டிக்கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றைவிடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகைஈன்றன, ஆய மகள் தோள்

" அடிப்பாவி! என் இனமா டீ நீ ? முன்னாடியே சொல்ல மாட்டீயா, நீ படிக்கல நெனச்சு பத்திரக்கையில கூட என் பெயர் பின்னாடி டிக்130ரீ போட வேணாம் சொல்லிட்டேன்... ஏன்டி சொல்லல?"
"நீங்க கேட்கல நான் சொல்லல, அப்றம் பத்திரக்கைய பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன்..." என்றாள்...
"மேற்கொண்டு எதுவும் பண்ண ஆசை இருக்கா?" என்றதும் அவனை நெருங்கி அமர்ந்தவள்,
"ம்ம்.. நிறையா இருக்கு, நாட்டு மாடுகள அழியாம பாதுகாரீ போட வேணாம் சொல்லிட்டேன்... ஏன்டி சொல்லல?"
"நீங்க கேட்கல நான் சொல்லல, அப்றம் பத்திரக்கைய பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன்..." என்றாள்...
"மேற்கொண்டு எதுவும் பண்ண ஆசை இருக்கா?" என்றதும் அவனை நெருங்கி அமர்ந்தவள்,
"ம்ம்.. நிறையா இருக்கு, நாட்டு மாடுகள அழியாம
பாதுகாக்கணும்.... பண்ணை வைக்கணும், மக்களுக்கு, நாட்டு மாடுகளை பத்திவிழிப்புணர்வு கொடுக்கணும் ஆசைதேன்... ஆனா என் அப்பாத்தா, அந்த மகேந்திரன் நெனச்சு என்னை மேற்கொண்டு எதையும் செய்ய விடாம பண்ணிருச்சு..." முகத்தை சோகமாக வைக்க, அவள் முகத்தை உயர்த்தி,
"இந்த மாட்டு டாக்டரரோட மாட்டு டாக்டரி( சும்மா ஃபிமலே கெண்டர் female gender) பீல் பண்ணவே கூடாது... மாமா உன் ஆசையை நிறைவேத்துறேன்... " என்றதும் அவள் கண்கள் கலங்கி போக,
"உன் ஆசைக்காக காளை அடக்க முயற்சி செஞ்ச நான், இதை செய்ய மாட்டேனா டீ என் மயிலு.நான் இருக்கேன் நீ செய்" என்றான்.
"ஆனா, அத்தை , மாமா..." என இழுக்க, இது நம்ம வாழ்க்கை, நாம தான் வாழ போறோம்... அவங்க இல்லை, உன் ஆசைய நிறைவேத்தாத இந்த வாழ்க்கைய வாழ்ந்து என்ன பயன்...? நான் பேசிக்கிறேன்..." என்று கண்ணை சிமிட்ட,
"ஐ லவ் யூ மாமா...." என தாவி அணைத்தவளின் திடீர் தாக்குதலை எதிர்பாராதவன் நிலை தடுமாறி மெத்தையில் அவளோடு சரிந்தான்..
அதன் பின் அங்கே அமளியில் ஒரு மஞ்சக்கட்டு நடந்தது. அந்தக் காளையுடன் வீராங்கனை மல்லுக்கு நிக்க, அடக்கி ஆள்கிறாளா? அடங்கிப் போகிறாளா? இருவருக்கு மட்டுமே வெளிச்சம் இதற்கு மேல் நாமிருந்தால், மரியாதை இல்லை என்று வெளிய வந்திடுவோம்...
முற்றும்..
கதைமுடித்து விட்டது சின்ன குறுநாவல்... முழுகதை படித்து விட்டாவது சி எல்உங்க கருத்தை பகிருங்க.
Comment
Share
Like
Register
And login
What's Your Reaction?