நெடுஞ்சாலை கானமே - 9

கானம் - 9
"குட் மார்னிங் டீச்சர்ஸ்! இந்த மீட்டிங் ஹையர் கிளாஸ்க்கு மட்டும் எதுக்குனா நம்ம சாவித்திரி மிஸ் மெடிக்கல் லீவுல இருக்காங்க. அவங்களால வர முடியல, லீவ் போஸ்ட் ஆள் போடற வரைக்கும் உங்களை மேனேஜ் பண்ணிக்க சொல்லிருந்தோம். யூ ஆர் கிரேட் டீச்சர்ஸ். அந்த டீச்சர் இல்லாத குறைய, இல்லாம சின்சியரா தங்களோட வொர்க்க பெர்பெக்ட்டா மெயின்டேயின் பண்ணிட்டு வந்தீங்க. முக்கியமா தென்றல் மிஸ், உங்க பங்கு ரொம்ப அதிகம். அதுக்கு ஒரு பிக் தேங்க்ஸ்." எனத் தலைமை ஆசிரியர் புகழ, அவளோ முறுவலுடன் பக்கத்திலிருந்தவளின் காதை கடித்தாள்.
"என்னடி புதுசா புகழ்கறாய்ங்க. இதெல்லாம் இவனுங்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராதே."
"ஒனக்கு புரியல. பக்கத்துல நல்லா டிப் டாப்ப்பா, அம்சமா ஒரு ஆளு நிக்கறானே, அவன் முன்ன நம்மலை திட்டுனா நல்லாவா இருக்கும். அதான் தனக்கு வர்றாதத எல்லாம் செஞ்சிட்டிருக்கு அந்தக் குண்டாத்தி." என்றாள். இவளுக்குச் சிரிப்பு வர அடக்கிக் கொண்டாள்.
"மீட் மிஸ்டர் தனிஷ். சாவித்ரி மிஸ்க்கு பதிலா லீவ் போஸ்ட்ல வந்திருக்கார். இவர் மேத்ஸ் எம். எஸ். சி எம் மெட் முடிச்சிருக்கார். சாவித்திரி மிஸ் வர வரைக்கும் இவர் தான் அவங்க இடத்தில வேலைப் பார்க்க போறார். சோ, இனிமே இவரும் உங்க கோலிக்ஸ் தான். கோ வொர்க்கர்ஸா அவருக்குத் தேவையான ஹெல்ப் நீங்க பண்ணனும். கோ ஆப்ரேட் வித் ஹிம். இதுக்கு தான் இந்த மீட்டிங்." என்று முடித்து விட, மற்றவர்கள் களைந்து சென்றனர்.
இவர்கள் இருவரும் முனங்கிக் கொண்டே நடந்தனர்.
"இவ்வளவு படிச்சி, மனுஷன் இந்த ஓட்ட ஸ்கூலுக்கு எதுக்குடி வரணும்? கவர்மென்ட் ஸ்கூலுக்கு போலாம். இல்ல பெத்த பெத்த ஸ்கூல் இருக்கே அதுக்கு போலாம், ஏன் எங்கோ மூலையில இருக்க இந்த ஸ்கூலுக்கு வரனும்?" விழி சந்தேகம் கொள்ள,
"எனக்கும் சம்திங் ராங்கா தான் தெரியுது. லீவ் போஸ்ட் வர இந்த மனுஷன எதுக்கு ஊர கூட்டிச் சொல்லணும்? ஹி இஸ் சம்திங். கொஞ்சம் கேர்ஃபுல் இருக்கணும் டி." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"தென்றல்" என்று அழைத்தார் தலைமை ஆசிரியர். அவள் வேகமாக நடந்து அவர் அருகே வந்து நின்றாள்.
"நீ தான் அவருக்குத் தேவையான எல்லா உதவியை செய்யணும். சாவித்ரி மிஸ் கிளாஸ காட்டு, அவங்களோட லெஸன் பிளான், டைம் டேபிள் எல்லாத்தையும் சார் கிட்ட கொடுத்திடு, கிளாஸ் ரெஜிஸ்டர ஹான்ட் ஒவர் பண்ணிடு. சார் இவங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க." என்றார்.
அவரிடம், "நன்றி" சொல்லி விட்டு அவளுடன் நடந்தான்.
இளந்தாரி தான். சுத்தமும் ஊருக்குப் பொருந்தாத நிறம். மீசை, தாடியை இரண்டையும் ட்ரீம் செய்திருந்தான். பார்ப்பவர்கள் உடனே அவனை 'நார்த் இந்தியனா?' எனக் கேட்க வைக்கும் படி வித்தியாசமாக இருந்தான்.
அவனை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்தாள்.
அவர்கள் அவனை வரவேற்க, தன்னை அறிமுகம் செய்து கொண்டு மற்றவர்களைப் பற்றியும் கேட்க, அவர்களும் தங்களை அறிமுகம் செய்தனர்.
தென்றல் அவனிடம் சாவித்திரி பார்த்துக் கொண்டிருந்த அனைத்தையும் கொடுக்க, அதெல்லாம் வாங்கி வைத்தவன், "மார்க் ரிஜிஸ்டர் வேணும்" என்றான் பட்டென்று.
ஒரு கணம் விழித்தவள், எழுந்து போய் எடுத்து வந்து கொடுத்தாள்.
"தேங்க்ஸ், உங்களோடதும் வேணும்." என்றான்.
'எதற்குக் கேட்கிறான்?' என்று உள்ளுக்குள் கேட்டபடி, அதை எடுத்துக் கொடுக்க, சமீபத்தில் நடந்த பருவ தேர்வில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை ஆராய்ந்தான்.
புருவ முடிச்சுகளுடன், முந்தைய தேர்வின் மதிப்பெண்களையும் பார்த்தான். இவளுடையதையும் பார்த்தான். கொஞ்சம் குழப்பமாக இருந்தது.
"மொத்தம் எத்தனை செக்சன் இங்க?" என்று வினவ,
"டென்த்ல நாலு செக்சன். பிளஸ் ஒன் பிளஸ் டூல மூணு செக்சன் சார். நான் டென்த்ல ரெண்டு செக்சன் பிளஸ் பயோ குரூப்க்கு நான் மேத்ஸ் எடுக்கறேன். அவங்க பேலன்ஸ் ரெண்டு செக்சன் பிளஸ் கம்யூட்டர் சைன்ஸ் க்ரூப்க்கு மேத்ஸ் எடுக்கறாங்க." என்றாள்.
'மம்' என்றான். மீண்டும் மார்க் ரெஜிஸ்டரில் தலையை நுழைத்தான்.
"நீங்கப் போற கிளாஸ் பர்ஸ்ட் டைம் பத்து பேர் பெயில், அடுத்த பரிட்சையில் ஐந்து பேர் பெயில். பேலன்ஸ் ஃபைவ் ஸ்டுடென்ட்ஸ் படிக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என்று வினவ, அவளும் வார்த்தையில் பிசிறு தட்டாமல் சமாளிப்பு இல்லாமல் நிமிர்வாகப் பதில் சொன்னாள்.
"எஸ் சார்! முதல்ல பத்து பேர் இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா அவங்க படிக்க ஆரம்பிச்சாங்க, அதுல ஃபைவ் ஸ்டுடெண்டஸ் பார்டர் லைன் பாஸ் பண்ணிருக்காங்க. பேலன்ஸ் ஐஞ்சு கொண்டு வந்துட்டு இருக்கேன் சார். நெஸ்ட் எக்ஜாம் வீ வில் கெட் பாஸ் மார்க் சார்." என்றாள்.
"ஓகே! பட் வாட் அபாவ்ட் ஹர் கிளாஸ்? ஃபர்ஸ்ட் எக்ஜாம்ல ஐஞ்சு, இப்போ ரெண்டு. உங்க கிளாஸ் விட அவங்க எடுக்கற கிளாஸ்ல ஸ்டூடண்ட் நல்லா படிப்பாங்களா என்ன?" என வினவ, அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
"சோ அவங்க கிளாஸ் பெயிலியர் கம்மி, உங்களது அதிகம்? இட்ஸ் ஓகே, ஆனா ரிசல்ட் எப்படி பெயில்யர்ஸ் வர்றாங்க? அதுவும் சாவித்ரி மிஸ் கிளாஸ்ல இருந்து? இங்க பாஸ் பண்ற ஸ்டூடண்ட்டால, ஏன் பப்ளிக்ல முடியல? ஏன் செண்டம் ரிசல்ட் இந்த ஸ்கூலால கொடுக்க முடியல?" என அவன் கேட்ட கேள்விக்கு மீண்டும் அமைதி தான்.
"சொல்லுங்க மிஸ்...?" என இழுக்க, "தென்றல்" என்றாள்.
"ஓகே சொல்லுங்க மிஸ் தென்றல், எதனால இங்க டென்த்ல செண்டம் ரிசல்ட் காட்ட முடியல?"
"ஹான்ஸ்ட்டா சொல்றேன் சார். ஸ்டார்டிங்கல இருந்து எண்டு வரைக்கும் அவங்க எடுக்கற மார்க் தான் ரிப்போர்ட்ஸ் காட்டுவேன். தொடக்கத்தில் எனக்கு நிறைய ஃபெயிலியர்ஸ் இருப்பாங்க. பப்ளிக் நான் எடுக்கற கிளாஸ்ல செண்டம் ரிசல்ட் கொடுப்பேன் சார். பட் அவங்களைப் பத்தி எனக்குத் தெரியாது சார்." என்று முடித்துக் கொண்டாள்.
"இப்படிப் பொறுப்பு இல்லாமல் ஒரு டீச்சர் சொல்லலாமா?" என்று சிரித்துக் கொண்டே வினவினான்.
"நீங்கப் புதுசு சார்! உங்களுக்கு இங்க நடக்கற அரசியல் தெரியாது. இங்க தூணுக்கும் காது இருக்கும். இல்லாதவங்களை பத்தி பேசறது தப்பு சார். நான் ஏதோ சொல்ல, தவறாக அவங்க காதுக்குப் போய்ச் சேர்ந்து, நானே பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட விரும்பல." என்றாள்.
அதற்கும் மேல் அவன் அதைப் பற்றி அவளிடம் பேசவில்லை.
மாலையில் ஒரு சில ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் இருக்க அதில் விழியும் தென்றலும் அடக்கம். சிறப்பு வகுப்பை முடித்து விட்டு வரவும், தனிஷ் பள்ளி அலுவலகத்தில் வெளியே வரவும் சரியாக இருந்தது.
தென்றல் தான், "நீங்க இன்னமும் போகலையா சார்?" என்றாள்.
"ஆபீஸ் வொர்க் இருந்தது முடிச்சிட்டு இப்போ தான் வர்றேன். *** போகணும் இங்க ஆட்டோ எங்க கிடைக்கும்?"
"பஸ் ஸ்டாண்ட்ல நின்னா ஆட்டோவும் வரும், பஸ்ஸும் வரும்." என்றாள் நடந்துக் கொண்டே. அவனும் நடந்தபடி பேசிக் கொண்டே வந்தான்.
"ஓ... பஸ் சார்ஜ் எவ்வளவு இருக்கும்? மார்னிங் ஆட்டோக்கு நூறு ரூபாய் கொடுத்தேன். ஒ மை காட். தினமும் நான் இருநூறு கொடுத்துட்டு இருந்தா என்ன ஆகறது?" என முழிப்பிதுங்க,
"ஒன்னு பைக் இருக்கணும் சார். இல்ல பஸ்ல தான் போகணும். இங்க மினி பஸ் வரும் பதினைஞ்சு ரூபாய் தான். கவர்மெண்ட் பஸ் பன்னிரெண்டு ரூபாய் தான் மார்னிங் ஈவ்னிங் எப்போதும் அவைலபில் தான்." என்றாள்.
"ஓ தெட்ஸ் குட். நீங்க எந்த ஏரியா? நீங்களும் பஸ்ல தான் போவீங்களா?" எனக் கேட்க, அவளும், "ஆமா, உங்க ஸ்டாப் தாண்டி ரெண்டு ஸ்டாப்ல என் ஸ்டாப்." என்றாள்.
"ஓகே" என்றவன் பேருந்து நிறுத்தத்தில் அவளுடன் வந்து நின்றான். அங்கே சொற்ப மாணவர்களுடன் நின்றனர் மூவரும்.
நல்லக்கண்ணு வரவும் தென்றல், "இந்தப் பஸ் தான் சார். எங்க கூடவே ஏறுங்க சார்." என்றாள்.
அவள் முன்னாடியே ஏறிக் கொள்ள, அவன் தட்டுத் தடுமாறி ஏறியவன் கம்பியைப் பிடித்துக் கொள்ளாமல் நிற்கவும், சேத்தன் விசிலடித்து சிக்னல் கொடுக்கவும் வண்டியை அவன் எடுக்கவும் சரியாக இருக்க, கம்பியைப் பிடிக்காமல் நின்றவன், தடுமாறி கீழே விழப் போக, அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
"சார் பார்த்து, இங்க உட்காருங்க." என்றாள்.
சீட்டில் அமர்ந்தவன், "உப்" என நெஞ்சில் கை வைத்து ஊதி விட்டு, "தேங்க் காட் நீங்க இல்லேனா கீழ விழுந்து இருப்பேன்." என்று கண்களை மூடித் திறந்தான். அவளும் புன்னகை செய்தாள்.
"எனக்குப் பஸ்ல போய்ப் பழக்கம் இல்ல. ஃபர்ஸ்ட் டைம் இது."
"ஃபர்ஸ்ட் டைமா? நீங்க எங்க இருந்து வர்றீங்க?" என அவள் ஆச்சரியமாக கேட்டதும் தான், அவன் சொன்ன பதிலை அவனுணர்ந்தான்.
"ஆ... அது கரூர்ல இருந்து வர்றேன். பைக்கிலே டிராவல் பண்ணதுனால பஸ்ல போய்ப் பழக்கம் இல்ல." எனச் சமாளிக்க, இருவரும் சிரித்துக் கொண்டே ஆமோதித்தாலும் உள்ளுக்குள் சந்தேகம் எழுந்தது.
"என்னடி கரூர்ங்கறான் பஸ்ல பழக்கம் இல்லங்கறான், என்னவோ மர்மம் இருக்குடி அவன்கிட்ட, கேர்ஃபுல்லா தான் இருக்கணும்." என்று தென்றல் அவள் காதைக் கடித்தாள்.
"அவன் கிடக்கட்டும், பின்னாடி திரும்பிப் பாரு, நெஞ்சை பிடிச்சிட்டு ஒருத்தன் நிக்கறான் அவன என்னானு கவனி?" என்றாள். அவள் சொன்னதும் அவள் திரும்பிப் பார்க்க, நெஞ்சில் கை வைத்து அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் சேத்தன்.
அவளும் திரும்பி, "இப்போ என்ன நடந்துச்சுனு உன் அண்ணங்காரன் இப்படி நிக்கறான்?"
"அதுவா? நீ அவன் கையைப் பிடிச்சதும் இவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி. வேற ஒன்னும் இல்ல பொசெஸ்ஸிவ் வியாதி தான். போகப் போக அதிகமாகி செத்துடுவான் பாரு." என்றாள்.
அவளோ அவனை ஒரு தரம் பார்த்துத் தலையை இடது வலது பக்கமாக ஆட்டி விட்டுச் சாலையை வெறிக்க,
"டேய் சேத்தா! இப்படியே நின்னா டிக்கெட் எடுக்காமலே பஸ் விட்டு எகிறி குதிச்சிடுவாய்ங்க. அப்புறம் ஒனர் வாயில நீ தான் விழனும் பார்த்துக்க." என்றதும் தான் தலையை உலுக்கி விட்டு, பணத்தை வாங்கி பயணச் சீட்டைக் கொடுத்தான்.
தனிஷ்ஷிடம் வந்து நிற்க, அவனோ பணத்தைப் எடுத்து கொடுத்தவன் இறங்கும் இடத்தைத் தென்றலிடம் கேட்டுச் சொல்ல, இவனுக்கு அவன்மேல் கடுப்பு, சேத்தனும் காய வைத்த எண்ணெய்போல் சூடாக இருந்தான்.
அவளுக்கு அவனை நினைத்து இதழ் விளிம்பில் புன்னகை பூத்தாலும் மறைத்துக் கொண்டாள்.
தனிஷ் இறங்க வேண்டிய இடம் வர, அவனிடம் சொல்லி, கவனமாக இறங்க அவனுக்கு உதவிச் செய்தாள்.
மேலும் இடத்தைக் காட்டி நேரத்தையும் சொல்லி தினமும் வந்து நிற்கச் சொன்னாள்.
இவையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பத்திக் கொண்டு வந்தது.
"பெரிய குழந்தை விவரம் சொல்லைனா தொலைஞ்சு போயிடுமாக்கும்?" என அவள் முன்னே நின்று சலித்து கொள்ள,
அவனை முறைத்தவள், "ஊருக்கு புதுசு, இன்னைக்கி தான் ஸ்கூல்ல ஜாயின் பண்ணார். எப்படி போகணும்? எங்க ஏறனும்? விவரம் கேட்டார் சொன்னேன் இதுல என்ன இருக்கு?"
அவளை நேர் கொண்டு பார்த்தவன், "அவனுக்கு உதவி பண்ணு. அதுக்காக, கைப் பிடிச்சி கூட்டி உட்கார வைக்க அவன் ஒன்னும் குழந்தை இல்ல புரியுதா?" என்றான் பதிலுக்கு.
"கீழே விழப் போற மனுசன காப்பாத்தினேன். என்ன புத்திடா ஒனக்கு? அங்க ஒரு வயசான தாத்தாவா இருந்திருந்தா அமைதியா இருந்திருப்பியோ போகுது பாரு எண்ணம்? ச்ச.." என முகத்தை திருப்பிக் கொள்ள, அவனோ கோபத்தில் முஷ்டியை கொண்டு கம்பியில் குத்தியவன், விறுவிறுவென உள்ளே சென்று விட்டான்.
***
"நில்லுடி நானும் பதிலைக் கேட்டுப் பைத்தியக்காரன் போல உன் பின்னால சுத்திட்டு இருக்கேன். பதில் சொல்றீயா டி நீ? என் மேலே ஒனக்கு என்னடி கோபம்? அப்படி என்ன செஞ்சிட்டேன் நான் ஒனக்கு?" என ஆள் அரவமற்ற சாலையில் அவளை மறித்துக் கேட்டான்.
"நீ பார்க்கற வேலை எனக்குச் சுத்தமா பிடிக்கல. போதுமா? அது தான் எனக்கு உன் மேலே கோபம்." என்றாள்.
"அப்போ நான் கவர்னர் வேலை பார்த்தா மேடத்துக்குப் பிடிக்குமா?"
"கௌரவமான வேலை பார்த்தா எனக்குப் பிடிக்கும். நீ அந்த மாதிரி வேலையா பார்க்கிற?" எனக் கத்த, தான் பார்க்கும்
வேலைப் பற்றிப் பேசியதும் அவனுக்குக் கோபம் உச்சி முதல் பாதம்வரை சுள்ளென ஏறியது. கை முஷ்டியை இறுக்கிய படி அவள் முன் நின்றிருந்தான்.
அடுத்த பாகம்
கானம் - 10
What's Your Reaction?






