நெடுஞ்சாலை கானமே - 13

Jul 1, 2025 - 02:53
 0  8
நெடுஞ்சாலை கானமே - 13

கானம் - 13

வார இறுதி நாளில் குழந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருக்க, பெற்றோர்களுடன் வந்து பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் மட்டுமல்லாது வயது பிரிவுக்கு ஏற்றது போல இளைஞர்களும் முதியோர்களும் கூட அப்பூங்காவை ஆக்கிரமித்திருந்தனர்.

அவர்களுக்கெல்லாம் இடமிருக்கும் போது இந்தக் காதல் புறாக்களுக்கு இடம் இருக்காதா என்ன?

பகல் பன்னிரெண்டு மணி வரையிலும் மதுரையே சுற்றி வந்த புறாக்கள்,  நிழல் தேடி ஓய்ந்து களைத்து போய் பூங்கவிற்குள் தஞ்சம் புகுந்தன. 

கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே  மைவிழி நெடுமாறன் ஜோடி, மாதம் ஒரு  சனிக்கிழமையில் கல்லூரிக்குச் செல்லாமல் மதுரையைச் சுற்றி வருவதும் கைப் பிடித்து காதல் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

பைக்கில் உலா வரும் இருவரும், உணவு உண்ண மட்டும் மரத்தடி நிழலுக்குள் வந்து, கொண்டு வந்த உணவினைப் பகிர்ந்து உண்டு, அவள் அமர, அவள் மடியிலே சிறு தூக்கம் போட்டு விட்டு, பின் மீண்டும் கதைகள் நூறு பேசி, கல்லூரி முடியும் நேரத்தில் சரியாக வீடு வந்து சேர்ந்திடுவார்கள். வேலைக்குச் சென்றாலும் வெளியே செல்வதை விடாமல் தொடர்ந்தனர்.

அவளுக்கு அன்று விடுமுறை தான்,  ஆனாலும் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாகச் சொல்லி தென்றலுடன் பேருந்து நிறுத்தம் வரை வருவாள். அவளை அங்கிருந்து பைக்கில் அழைத்து சென்றிடுவான் நெடுமாறன். அவனும்  அன்றைய நாளில் விடுமுறை எடுத்து விடுவான்.

இருவரையும் ஒரு வித ஏக்கத்தோடு பார்த்து கொள்வார்கள் இசைசேத்தனும் இளந்தென்றலும்.

அவனுக்கு தன் காதலியுடன் இவ்வாறு ஊர் சுத்த ஆசை தான். இன்றளவும் ஆசையாகவே தான் இருக்கிறது. 

நிறைவேறும் நாள் தான் எப்போது என்று கனவில் அவளிடம் கேட்டு அவளைக்  தொந்தரவு செய்துக் கொண்டிருப்பான்.

அவளும் கனவில் தான் அவனைக் கட்டியணைத்து, அவனது இருசக்கர தேரில் உலா வருவாள். இருவரும் கனவில் மட்டுமே காதல் படத்தை ஓட்டினார்கள்.

மதியம் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு விட்டு அவள் முந்தானையை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டு உறங்கிப் போனான். 

இவ்வாறு வர நேரமெல்லாம் மடியில் படுப்பவன், இருக்கும் இடத்தில் நாகரீகம் கருதி, அவளது பேக்கை தலைக்கு அண்டம் கொடுத்து படுத்தவன், அவளது தலைகோதலில் உறங்கிப் போனான். 

அவளது சேலை தந்த தனி வாசனையை கண்களை மூடி நுகர்ந்தவனுக்கு கருப்பு திரைக்கு அப்பால் அவனை கற்பனை உலகிற்கு அழைத்து சென்றது. 

அதில் மனைவியாக நிற்கும் மைவிழியோடு கட்டிலில் காதல் யுத்தம் செய்வது போன்ற கற்பனை வேறு சுகமாக இருந்தது. 

விடிய விடியப் காதல் போர், விடிந்ததும் முடிந்திருக்க, தனது உடைகளை எடுத்துக் கொண்டு தள்ளிப் போனவளை மீதமிருந்த மோக்கத்துடன் அவளைப் போக விடமால் தடுத்துக் கொண்டிருந்தான்.

"ஏய் ஐஸ்! போகதடி இன்னும் கொஞ்சம் நேரம் இருடி." என்று தூக்கத்தில் புலம்ப, கைப்பேசியிலிருந்து தலையை இவன் பக்கம் திருப்பியவள், தலையில் அடித்துக் கொண்டு, 'இவனுக்கு இதே வேலையா போச்சி.' என்றவள், அவன் முகத்தில் படர்ந்த தனது சேலையை எடுத்து விட்டு தலையில் நங்கு என்று கொட்டினாள்.

"அம்மா!" என அலறியபடி தலையை தேய்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தான். அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

"எப்பத் தூங்கினாலும் உனக்கு அதே கனவு தான் வருமா டா?"

"எனக்கு வேற நினைப்பு என்னடி இருக்கப் போது? ஒன் கூட சந்தோஷமா வாழனும், அம்முட்டு தான் வேறென்ன எனக்கு வேணும்?"

"வேலை வேணும், சும்மா  உன் கூட சந்தோஷமா வாழனும் வாய் வார்த்தையா சொல்லிட்டு கெடக்கமாக, அதை செயலையும் காட்டணும்." என்றதும் கண்களை விரித்தவன்,

"எது செயல்ல காட்டணும்மா? நான் ரெடி." என சட்டையின் இரு பொத்தான்களை கழட்டியபடி அவளை நெருங்க, 

அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவள், "செயல்ல காட்டுனு சொன்னேன் தான். அதுக்கு இப்பவே காட்ட சொல்லல. அப்படியே எப்படா பாயலாம் கெடக்க நீ. நான் எதை சொல்றேன் புரியுதா இல்லையா நெடுவா ஒனக்கு?" எனக் கோபத்துடன் கேட்கவும், அவனும் சட்டைப் பட்டனை போட்டுக் கொண்டு, "ஆங்... புரியுது புரியுது" என்றான் சலிப்புடன்.

"நெடுவா! கொஞ்சம் சீரியஸா பேசுடா. என்ன பண்றதா இருக்க? ட்ரைவராவே இருக்கப் போறீயா? இல்ல ஏதாவது பிஸ்னஸ் பண்ணப் போறீயா? என்ன பிளான் தான் வச்சிருக்க? நாம இன்னும் காலேஜ் ஸ்டுடேண்ட் இல்லடா கனவு கற்பனையோட வாழ, அடுத்த கட்டத்துக்கு வந்துட்டோம்.

வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க. எனக்கு நீ எந்த வேலையில் இருந்தாலும் ஓகே தான். ஆனா வீட்ல அப்படி இல்லையே எதிர்பார்ப்பாங்க டா. அவங்க எதிர்பார்க்கற அளவுக்கு நீ இருக்கணும்ண்டு நான் சொல்லல. ஆனால் ஓரளவு உன்னை நீயே உயர்த்தி காட்டணும்ண்டு தான் நான் சொல்றேன் புரியுதாடா?"

"புரியுது டி. எனக்கு டிரைவராக இருக்க பிடிக்கல. பிஸ்னஸ் பண்ணலாண்டு  எண்ணம் இருக்கு. சேத்தன் கிட்ட பேசினேன். யோசித்து சொல்றேன் டா சொல்லி இருக்கான். அவன் முடிவ சொன்னதும், அடுத்து வேலைய ஆரம்பிச்சிடலாம்டி. நீ கவலை படாத. உன்னை யார் முன்னாடியும் தலைகுனிய விடமாட்டேன்." என்றான் காதலாக,

"என்ன தொழில் பண்ண போறீங்க?"

"பொறுமையா இருடி முடிவு பண்ணிட்டு  சொல்றோம். அப்புறம் இதை தென்றல் கிட்ட சொல்லி வைக்காத, சப்போஸ் நாங்க எதுவும் ஆரம்பிச்சாலும் அவன் அவளுக்கு சப்ரைஸ் பண்ண கூட நினைப்பான். அதுனால இப்போதைக்கு எதுவும் சொல்லாத."

"சரி சரி நான் எதுவும் சொல்லல, ஆனா பண்றதா இருந்தால் கொஞ்சம் சீக்கிரமா ஆரம்பிங்க. இதுவரைக்கும் வீட்ல கல்யாணத்தை பத்தி பேச்சை எடுக்கல. இனி பேச ஆரம்பிச்சா, ஒரே பதில், ஒரே முடிவு அது நீயா மட்டும் தான் இருக்கணும்." என்றவளை  அணைத்து தேற்றினான்.

அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். இருவரும் காதல் மனநிலையில் இருக்க, அடித்த காற்றில் அவளது சேலை விலகிப் பாதி அங்கத்தை காட்ட, அவனுக்கோ புறையேறியது.

அவளும் அவனது தலையைத் தட்டி தண்ணீர் கொடுத்தாள். அவனும் தண்ணீரை பருகி விட்டு அவளைப் பார்க்க தடுமாறினான்.

"நெடுவா! என்னடா ஆச்சு உனக்கு?" அக்கறையாக கேட்டவளின் கரம் அவனது முதுகை தடவிக் கொடுத்தது.

நெஞ்சில் கையை வைத்து நிதானித்தவன், அவளிடம், "இனிமே வெளிய வந்தால் சேலை கட்டிட்டு வராதடி." என்றான் கிறக்கமாக,

அவன் நிலமையைப் புரிந்து கொள்ளாது, "ஏன்டா நல்லா இல்லையா?" தன்னை ஒரு தரம் பார்த்து விட்டு சந்தேகமாகக் கேட்டாள்.

"அதில்லடி நீ முழுசா மூடி வச்சு சதி பண்ற, இந்தக் காத்து அப்பப்ப உன் சேலை விலகி சதி பண்ணுது? என்ன பண்ண? நானும் மனுஷன் தானடி, உன் சேலை விலகும் போது தெரியற பாகத்தை..." என்றவன், அவளை நெருங்கி இதழால் காது மடலை உரசி, அவள் காதில் ஏதோ கிசுகிசுக்க.

அவன் நெஞ்சில் கையை வைத்து தள்ளி விட்டவள், "பொறுக்கி பொறுக்கி! நினைப்ப பாரு ச்சீ." என்றாலும் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

"இனி சேலை கட்டாதடி செல்லம்!" என மீண்டும் கொஞ்சம் வெட்கத்துடனே, "எந்த டீச்சரும் சுடிதார் போட்டு ஸ்கூலுக்கு போறதில்ல, அப்படி நான் போட்டு போனா, எவன் கூடயோ ஊர் சுத்த போறானு கண்டு பிடிச்சி சாத்தவா. ஒனக்கு நான் எது போட்டாலும் உறுத்த தான் செய்யும், சுடிதார் போட்டாலும் சாலை இறக்குடி ஏத்துடிம்ப போடா பொறுக்கி." என்றாள். அவனை அசடு வழிய பார்த்து சிரித்தான்.

****

தென்றல் வேலைப்பார்க்கும் பள்ளியில் மாசத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை அளித்தும் இரண்டு சனிக்கிழமை பள்ளியும் வைப்பது அவர்களுக்கு வழக்கம்.

அதில் விடுமுறை அளிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் பத்து பதினொன்று, பன்னிரெண்டாம் மாணவர்களுக்கு மட்டும் மாலை மூன்று மணி வரைக்கும் சிறப்பு வகுப்புகள் இருக்கும். அனைத்து ஆசிரியர்கள் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட ஆசிரியர்கள் வந்ததால் மட்டும் போதும்.

தென்றலுக்கும் தனிஷ்ஷுக்கும் இன்று சிறப்பு வகுப்புகள் இருந்ததால், இருவரும் வழக்கமாக காலையிலும் மாலையிலும் பேருந்தில் பயணித்தனர். 

காலையிலிருந்த கூட்டம் மாலையில் குறைந்திருக்க, எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டே வந்தனர்.

அவனுடன் சிரித்து பேசும் தென்றலைக் கண்டு எரிச்சலாக இருந்தது சேத்தனுக்கு. தன்னை கடுப்பேற்றத் தான் இவ்வாறு செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

தென்றல் சாதாரணமாக தான் தனிஷ்ஷிடம் பேசுகிறாள். அவனுடன் பேசினாலும் அவளது பார்வை முக இறுக்கத்தோடு வலம் வரும் சேத்தன் மீது தான். உள்ளுக்குள் அவனை ரசித்தாலும் வெளியே அவனுடன் முறைப்போடு தான் இருக்கிறாள்.

இன்னமும் அவனுடன் அவள் சமாதானமாகாமல் கோபத்துடன் தான் இருக்கிறாள். அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று மனம் துடித்தாலும் அதனை அடக்கி விடுகிறது அவனது கோபம். காரணம் அவள் தனிஷ்ஷிடம் பேசுவதைக் கண்டு. இருவரும் நடுவில் திரையிட்டு கொண்டு விலகி நிற்கின்றனர்.

முதலில் தனிஷ்  இறங்கி அவளிடம் கையசைத்து விடைபெற்றுக் கொண்டான். அவனுக்கு கையசைத்து வழியனுப்பி வைக்க, இவனுக்கு மேலும் பத்திக் கொண்டு வந்தது. வண்டியில் கூட்டம் குறைந்திருக்க, அவள் அருகே கம்பியில் சாய்ந்து, அவளுக்கு மட்டும் கேட்கும் படி பல்லை கடித்துக் கொண்டு பேசினான்.

"உனக்கு கொழுப்பு டி. என் முன்னாடி அவன் கூட சிரிச்சி சிரிச்சி பேசற. என்னை வெறுப்பேத்த தானே இதெல்லாம் பண்ற?" என்றான்.

"நான் ஏன் உங்களை வெறுப்பேத்தனும் கண்டக்டர் சார். என் கூட வேலை பாக்கறவர், ஏன் நாளைக்கு என்னை  கட்டிக்க போறவராக் கூட இருக்கலாம். அவர் கூட சிரிச்சி பேசினா உங்க ஸ்டோமக் ஏன் பர்ன் ஆகுது?" அவனை மேலும் கடுப்படிக்க, 

அவளை தனிஷ்ஷுடன் கற்பனையில்  கூட சேர்த்து வைத்து பார்க்க முடியவில்லை. கற்பனையோ நிஜமோ அவள் தனக்கு மட்டும் தான் என்பதில் உறுதியாக இருந்தவன், அவளது பேச்சில் கொதித்து போயிருக்க, மேலும் அதில் எண்ணெய் ஊத்தும் விதமாக, "அப்புறம் இன்னொரு விஷயம்." என்று நிறுத்தியவள், "எனக்கு கொழுப்பு அதிகம் தான்." என்றாள்.

அதில் எரிமலையாக சீறினான். "சாவடிச்சிடுவேன்டி உன்னை. வாய் வார்த்தையாக் கூட கட்டிக்கப் போறவர்னு என்னை தவிர எவனையும் நீ சொல்ல கூடாது. நீ எனக்கு தான் எழுதி வச்சாச்சு. அதை மாத்தணும்ண்டு நினைச்ச உன்னை கொன்னு பொதச்சிடுவேன்." என்று எச்சரித்து விட்டு அவன் அகன்று விட்டான்.

அவளுக்கோ அவனை கடுப்பேற்றியதில் அப்படி ஒரு திருப்தி, அதை நினைத்து அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்ந்தவளுக்கு அவனது பேச்சு சிலிர்ப்பை தந்தது.  

அவளது நிறுத்தம் வர, அவனை நக்கல் சிரிப்புடன் பார்த்து விட்டு இறங்கிக் கொண்டாள்.

"போடி! ரொம்ப தான் பண்றா. மனுசன படுத்தி எடுக்கறா." என அவனது வாய் முணுமுணுத்தது.

அவள் இறங்கி நிற்கவும் சரியாக மாறனின் பைக்கும் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி கொண்ட விழியை  பெருமூச்சுடன் பார்த்தாள்.

"எத்தனை நாளைக்கு இந்த திருட்டு தனம் தொடரும் மாறா?"

"வீட்ல மாட்ற வரைக்கும்" என சிரிக்காமல் சொல்ல, தென்றலுக்கும் சிரிப்பு வர, விழியோ அவனை முறைத்தாள். 

"சீக்கிரமா இதுக்கு எண்ட் கார்ட் போட்டு கையில இன்விடேசன் கார்ட் கொடுங்க டா." என்றாள்.

"பாரா தங்கச்சி! ரைமிங்ல பேசுது. கவலைப் படாத தங்கச்சி சீக்கிரமா, இவளுக்கு நீ நாத்தனார் முடிச்சி போட்டு உன்  கொடுமை ஆரம்பிக்கற." என்றான்.

"தனியா கொடுமை பண்ண என்ன இருக்கு? தினமும் அதை தான இவ பண்றா. உங்க பாசமலர் ரீல ஓட்டினது போதும் கிளம்புடா. வாடிப் போலாம்." என்று நடக்க, சிரிப்புடன் அவனிடம் தலையை அசைத்து விட்டுப் பின்னே சென்றாள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0