ஆசான் -1

தன் மகன் செய்த தவறால பள்ளி மாணவி பாதிக்கப்பட, அம்மாணவிக்காக தவறு செய்த மகனை கைது செய்ய கோரும் ஆசிரியரின் கதை...

May 13, 2025 - 12:56
Jun 9, 2025 - 03:36
 0  20
ஆசான் -1

ஆசான் - 1

"மதுரையை சேர்ந்த அரசு பள்ளி  ஆசிரியர் திருமதி. இந்திரா  அவர்கள், தன் மகன் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டு போலீஸில் ஒப்படைத்துள்ளார்.  மேலூரில் உள்ள அரசு பள்ளி மாணவி ****** பலாத்காரம் செய்த விவாகரத்தில் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதற்கு காரணம் தன் மகனெனக் கூறி தன் மகனை காவலில் ஒப்படைத்தார்  திருமதி. இந்திரா"என்று நடந்த சம்பவங்களை,  செய்திகளாக மாறி மாறி செய்தி சேனல்களில் ஒளிப்பரப்பு செய்தனர். அதைக் கண்டவர் கோபத்தில் தொலைக்காட்சியை அணைத்து வைத்தார் இந்திரா.

 

அவரை பேட்டி எடுக்க வந்தவர்களையும் தவிர்த்தவர், தன் மகனை போலீஸில் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு வந்ததோடு சரி, வெளியே செல்லாமல் இருக்கிறார்.

அவர் செய்த காரியத்தை சிலர் பாராட்டியும் பலர் தூற்றியும் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

இவை யாவும் தெரிந்தும் தெரியாத இந்திராவோ வீடே கதியென இருக்கிறார். செல்போனை சுவீட்ச் ஆப் செய்து வைத்தார்.

 

 

கண்கள் நீர் நிக்காமல் கொட்டித் தீர்க்க, ஒரு ஆசிரியராக அவர் செய்த காரியம் சரியென எடுத்துக் கொண்டாலும், தாயாய் தவறு என்று ஒரு மனம் சொல்ல,  மறுமனமோ சரியென்றது. ' தன் மகன் திருந்த, எந்த எல்லைக்கும் செல்வேனென்று வாதிட்டு தன் மனதை அடக்கினாலும், பெத்த வயிறும் துடிக்கதான் செய்தது.

 

'தன் மகனை அடிப்பார்களோ, அடி தாங்கிட மாட்டானே...!' என தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்தார். 

 

 

'இதுபோல தானே அந்தப் பெண்ணை பெற்றவர்கள் துடித்து இருப்பார்கள், அந்தச் சின்ன பெண் என்ன செய்தாள்? அவளுக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை...? வெறி பிடித்த நாய்களின் வெறித்தனத்திற்கு பலியாகி விட்டாளே ! அதற்கு முதல் காரணம் தன் மகன் தான். அவள் அனுபவித்த உடல் வலியை அவனும் அனுபவிக்கட்டும் என்றது ஒரு  மனம்'

 

'இருப்பினும் அவன் வேண்டும் என்று செய்திருக்க மாட்டான். அறியாமல் செய்த குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? ' இன்னொரு மனம் வாதிட,

 

"இன்று அறியாமல் செய்த தவறை நாளைக்கு அறிந்து செய்தால் என்ன செய்வது? அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு தண்டனை கிடைப்பதே  சரியென்று ஒரு மனம் முற்றுப்புள்ளி  வைத்தது.

 

 

பாவம் இரு மனமாக பிரிந்து வாக்குவாதம் வைக்க, அவரது மூளையோ கொதித்து போனதும் இல்லாமல் மேலும் தலை வலியை கொடுக்க, தலையை பிடித்துக்கொண்டு அவிழ்க மேசையில் அமர்ந்து விட்டார்.

 

'என்ன பாவம் செய்தேனோ , எனக்கு மட்டும் நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை...!' என புலம்பி கொண்டிருந்தவரின் அருகே ஒரு நிழல் ஆட, நிமிர்ந்து பார்த்தார். இந்திராவின் தந்தை கையில் காஃபி கப்புடன் நின்றார்.

 

 

"இந்தா இதை குடி!" என்று அவர் பக்கம் கப்பை நகர்த்த, அவரோ அதையே வெறித்தமர்ந்திருந்தார். " குடி மா, காலையில் இருந்து பச்ச தண்ணீ கூட குடிக்கல... உனக்கு ப்ரஷர் வேற இருக்கு. இதை குடுச்சிட்டு மாத்திரை போடு மா!" அக்கறையாக சொல்ல , அவர் முகம் பார்த்தவர்," உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா அப்பா...?"  எனக் கேட்க,

 

அவர் பக்கத்தில் அமர்ந்தவர்,  " எனக்கு நீ பண்ணது கோபத்தை தரலமா, பெருமையா தான் இருக்கு. ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவான். அதுக்காக நீ செய்தது தவறுனு ஆகிடாது. தவறு செய்த தன் மகனுக்கு தண்டனை கிடைக்கனும் எத்தனை தாய் நினைப்பா?  நீ தாயாவும் அதே சமயம் நல்லா ஆசிரியராவும் செயல் பட்டிருக்க, இது தப்பில்ல" என்று ஆறுதலளிக்க, " நான் அவனை சரியா வளர்கலேல ப்பா..  அதுனால தானே அவன் ஜெயிலுக்கு போனான். நான் ஒரு நல்ல தாயே இல்ல பா...!" வெம்பி அழுக,

 

"அப்படி சொல்ல முடியாதுமா, அவனை திருத்த நீ பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். ஊர்ல ஆம்பள பையன் தானே எப்படி வேணாம் திரியட்டும் விடாம, அவனை மாத்த நீயும் எவ்வளவு தான் முயற்சி பண்ணுவ? அவன் அப்பன் புத்தி, அவனுக்கு வர கூடாதுனு நீயும் போராடுற, அதுக்கெல்லாம் இது ஒரு முடிவுனு நின்னச்சிகோ மா. நம்மளால முடியாதத போலீஸ் முடிப்பாங்க மா...! " என்றார்.

 

"அவன் என்னை வெறுத்து இருப்பான்ப்பா ...! சும்மாவே என்னை அவனுக்கு பிடிக்காதுப்பா, இதுல அவனை போலீஸ்லவேற பிடிச்சுக் கொடுத்திருக்கேன். என்னை அம்மாவே இல்லைனு சொல்லிடுவான்ல...!" அதை எண்ணிக் கதற, மகளை அணைத்தவர், " எனக்கு அப்படி தெரியலம்மா, அவன் கடைசியா பார்த்த பார்வையிலே எனக்கு என்னமோ அவன் மாற வாய்ப்பு இருக்குனு தோணுதுமா...!" 

 

 

"நானும் அந்த நம்பிக்கையில தான்ப்பா, அவனை போலீஸ்ல ஒப்படைச்சேன்... அவங்க அவனை என்ன பண்ணுவாங்க னு நினைக்கும் போது பயமா இருக்குப்பா...! பெத்த வயிறு துடிக்கிது. என் புள்ளைய எங்கிட்ட குடுத்திடுங்க கதறனும் போல இருக்கு ப்பா!" 

 

"அப்படி கதறலேனா பெத்தவளே இல்லையே... அர்ஜுன் திருந்தி வருவான் மா. அதுக்கு நீ சில வலிகளை அனுபவிச்சு தான் ஆகணும்.. உன் புள்ளைய பெத்தெடுக்கும் போது ஒரு வலி அனுபவிச்சியே அதை விடவா மா,  அந்த வலிக்கு நீ ஒரு அர்த்தம் கொடுக்கணும்ன்னா நீ இந்த வலியை பொறுத்து கிட்டு தான் ஆகணும்..."  என்றார் நேசன். அவரும் அதை ஆமோதிக்க, கதவு தட்டப்படும் சத்ததத்தை கேட்டு யாரென கணித்தனர்.

 

 

"உன் புருஷன் தான் மா ...!"  என்று எழுந்துக் கொள்ள, "அப்பா இருங்க நான் போய் திறக்கிறேன்" என்று முகத்தை  துடைத்தவர், கதவை திறக்க, அங்கே ருத்ர மூர்த்தியாய் ருத்ரன் நின்றிருந்தார்.

 

 

"என்ன டீச்சர்ம்மா, நீங்க நல்ல பெயர் எடுக்க, என் புள்ளய ஜெயிலுக்கு அனுப்பிவச்சிருக்கீங்க போல... இதான் நீங்க புள்ளய வளர்க்கற லட்ஷணமா? எதுக்கு டீ என் புள்ளைய போலீஸ்ல புடிச்சிக் குடுத்த? என்ன டீ தப்பு பண்ணான்னு அவனுக்கு இந்த தண்டன  சொல்லு டீ...!" எனக் கத்த,

 

 

"ஒரு சின்ன பொண்ண நாலு ரவுடி பசங்க ரேப் பண்ண காரணமா இருந்திருக்கான்... அதுக்கு தான் இந்த தண்டனை" என்றார் கோபத்தில்.

 

"காரணமா தானே இருந்திருக்கான், என்னமோ அவனை பண்ணது போல அவனை போலீஸ்ல ஒப்படைச்சிருக்க...!"எனவும், மேலும் கோபமெழ, கட்டுப்படுத்தியவர், " இப்படியே விட்டா அதையும்

செய்வான் ...!  அவன் செய்த தப்புக்கு இந்தத் தண்டனை தான் சரி" என்றார்.

 

"எது டீ சரி, உன் டீச்சர் வேலை எல்லாம் ஸ்கூலோட நிறுத்திக்க, வெளிய ஒரு நல்லா அம்மாவா இரு ...! "

 

"நான் எப்படி இருக்கணும் நீங்க சொல்லனும் அவசியம் இல்ல.. என் புள்ளைக்கு எது சரியோ அதை தான் செய்திருக்கேன். நீங்க உங்க வேலைய பார்த்துட்டு போங்க..." என்றார்.

 

 

"எது டீ அவனுக்கு சரி, அவன் ஜெயில்ல இருக்கிறதா? அவன் ராஜா, என் வாரிசு, இந்த ருத்ரனோட வாரிசு டீ ... அரண்மனையில் இருக்க வேண்டியவன் ஜெயில இருக்கணுமா?  நாளைக்கே ஜாமீன்ல எடுக்கிறேன் டீ. அவனை என்கூட வச்சிப்பேன். எந்தக் கோர்ட் எந்த போலீஸ் வருது நானும் பார்க்கிறேன் டீ...!" என்று சவால் விட,

 

"நீங்க என்ன வேணாம் பண்ணிக்கோங்க... ஆனால் என் புள்ள

 வாழ்க்கைய நாசமாக்க நான் என்னைக்கும் விடமாட்டேன்" என்றார் தீர்க்கமாக, ' அதையும் தான் பார்ப்போம் டீ..' என்ற ரீதியில் இந்திராவை முறைத்து விட்டு, வெளியே சென்று விட்டார். அவர் சென்றதும் பெருமூச்சை வெளியே விட்டார்.

 

 

"இவர் திருந்தவே மாட்டார்ப்பா. இவர் 

கெட்டதும் இல்லாம என் புள்ளையையும் சேர்த்து கெடுக்கிறார். இவர் வாசம் என் புள்ள மேல படக் கூடாதுனு தானே என் பசங்களை கூட்டிட்டு தனியா வந்தேன் ...!அப்பையும் இவர் விடுற மாதிரி தெரியல ப்பா. என்ன மனுசன் ஜென்மமோ இவர்" என்று இந்திரா புலம்பினார்.

 

 

தன் வக்கீலை அழைத்துக் கொண்டு மேலூர் காவல் நிலையத்திற்கு செல்ல,  அர்ஜுனோ பெஞ்சில் அமர்ந்திருந்தான்.

 

வக்கீலோடு வந்த ருத்ரன், தன் மகனை கண்டதும் அருகே சென்றார். "அர்ஜுன்" என்று அவனை ஆராய , அவன் மேல் ஒரு கீறல் இல்லை. ஆனால் முகத்தில் மரண பயம் தெரிந்தது.

 

 

அவன் கண் முன்னே கற்பழித்தவர்களை

நாறுநாறாக கிழித்தை பார்த்து அடங்கி ஒடுங்கி அமர்ந்திருந்தான். அவனது வயதை கருத்தில் கொண்டு அவனை தொடவில்லை... ஆனால் நன்றாக பயம் காட்டினார்கள்.

 

 

"சார், எப் . ஐ. ஆர் போட்டாச்சு... இனி இந்தக் கேஸ கோர்ட்ல பார்த்துக்கங்க. நாளைக்கு கேஸ் கோர்ட்ல வரும், அப்போ நீங்க,  ஜாமீன் அப்ளை பண்ணி அவனை வெளியெடுங்க, இப்ப அந்தப் பையனை வெளிய அனுப்ப முடியாது சார்" என்றார் இன்ஸ்பெக்டர்..

 

வக்கீலும் ருத்ரனிடம் வந்து அனைத்தையும்  கூறி கையை விரிக்க, தன் கோபத்தை அடக்கியவர், அர்ஜுனிடம் வந்து, " நீ கவல படாத,  நாளைக்கு அப்பா உன்னை ஜாமீன் ல எடுத்திடுவேன்... அதுக்கு அப்றம் நீ உன் அப்பா கூட தான் இருப்ப, உன்னை உங்க அம்மாகூட அனுப்ப மாட்டேன். இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்கோ கண்ணு...!" என்றவர் அவன் பதில் வேண்டி நிற்க, அவனோ அமைதியாக சென்று அமர்ந்துகொண்டான்.

 

இதற்கெல்லாம் காரணம் இந்திரா தானென்று எண்ணி அவர் மேலும் கோபத்தை வளர்த்தார்.

 

மறுநாள் விடியவே, அர்ஜுனின் கேஸ் கோர்ட்டிற்கு வந்தது... சிறுமியை கற்பழித்தவர்கள் குற்றத்தை  ஒப்புக்கொள்ள, மேலும் அவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஏழு  ஆண்டு சிறைதண்டனை வழங்கிய பின், குற்றம் நடக்க காரணமாக இருந்த அர்ஜுனின் வயதை பொருட்படுத்தி, அவனை ஆறுமாதம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  வைத்திருக்குமாறு காவல் துறையினருக்கு உத்ரவிட்டார் நீதிபதி.

 

அவனைக் சிறுவர் சீர்திருத்த பள்ளியில்  கொண்டு செல்ல, அவனை அழைத்து வந்தனர். வெளிய வாசலில் தாத்தாவையும் அன்னையையும் பார்த்து தலை குனிந்தான்.

 

"இதெல்லாம் உன்னை திருத்த தானே தவிர, உன்னை ஜெயில் அடைக்கனும் எண்ணம் உன் அம்மாக்கு இல்லை புருஞ்சுக்கோ அர்ஜுன்.இனியாவது உன் தப்பை திருத்திக்கோ தம்பி!" என்க, அமைதியாக காவல் அதிகாரி பின் சென்றான்.

 

அவனை மதுரையிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் விட்டனர். அவனும் உள்ளே இருக்கும் சிறுவர்களைப் பார்த்த வண்ணமே வந்தான். அச்சிறுவர்கள் அவனிடம் கேள்வி கேட்டு நச்சிரிக்க, கண்ணீர் வடிய அவர்கள் முன் நின்றான்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0