காதல் நாயகனே - 7

நாயகன் - 7
சூடான எண்ணெயில் பொன்னிறமாக உப்பென்று ஊதிய படி பூரியை போட்டு எடுத்தான் இளன். பக்கத்தில் உருளை கிழங்கு கூட்டு கொதித்து கொண்டிருந்தது.
நேற்றிரவு எதுவும் தனக்கு நடவாதது போலவே இன்று தனது சமையல் வேலையை வழக்கம் போலவே செய்ய ஆரம்பித்தான்.
அவனுக்கும் கிட்ட தட்ட இல்லத்தரசிகளின் நிலை தான். தனக்கென என்ன நேர்ந்தாலும் வேளா வேளைக்கு உணவு தயாரிப்பதையும் வீட்டு வேலைகளை செய்வதையும் விட்டு கொடுக்காத பெண்களை போல தான் அவனும்...
'சமைக்க மாட்டேன்' என்று பிடிவாதம் பிடிப்பதோ இல்லை உள்ளிருப்பு போராட்டமோ அவன் செய்யவில்லை.. சம்பளத்திற்கு வேலை செய்வதை தாண்டியும் பழிவாங்க, உணவை ஆயுதமாக எடுத்துக் கொண்டு அடுத்தவரின் வயிற்றில் அடிப்பதா? என்கிற எண்ணம்.
முதியவரும், படிக்கும் பிள்ளைக்கும் கொடுக்க கூடாதென்ற பிடிவாதம் தனக்கெதுக்கு என்ற எண்ணத்தில் தான் காலையிலே தன் சமையல் வேலையை தொடங்கி இருந்தான்.
இன்று விடுமுறை நாள் என்பதால் பூரிக்கிழங்கு செய்திருந்தான். சக்கரத்தை காலில் கட்டி கொண்டது போல சுழன்றவனுக்கு கவனம் முழுதாய் சமையலில் சென்று விட, நேற்றைய நிகழ்வின் நினைவு ஓரமாய் சென்றுவிட்டது.
சமைத்து முடித்ததும், அவர்கள் சாப்பிட ஏதுவாய் உணவு மேசையில் எடுத்து வைத்தவனுக்கு அழையா விருந்தாளியாக நேற்றைய நினைவு வந்துவிட, உள்ளுக்குள் சோர்ந்து போனான். கண்களில் முனுக்கென கண்ணீர் வந்தது. தனது மேலாடையில் துடைத்து விட்டு உள்ளே சென்றான்.
மித்ராவும் வசந்தியும் தாமதமாக அறையிலிருந்து வந்தவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் உணவை எடுத்து வைத்து சாப்பிட்டனர். மித்ரா , வசந்தியிடம் சொல்லி விட்டு வெளியே செல்ல இவரும் அறைக்குள் சென்று முடங்கி விட்டார்.
' எனக்கு வேண்டாம் ' என்று மறத்தவனிடம் கெஞ்சி கூத்தாடி, இரண்டு பூரியை தின்ன வைத்தார் பஞ்சு.
அவனது எண்ணமெல்லாம் வெங்கட்ராமனிடம் ' எப்படி விஷயத்தை சொல்வது அவர் எப்படி எடுத்துக் கொள்வார்? தன்னை என்ன நினைப்பார் ' என்று தயக்கம் நிறையவே இருந்தது.
' அவரை அழைப்பதா ? வேணாமா?' என்று அலைபேசியை தட்டுவதும் பின் கீழே வைப்பதுமாக, குழப்பத்தில் அமைந்திருந்தவனை கேமிரா வழியாக பார்த்துக் கொண்டிருந்தார் வெங்கட்ராமன்.
மகள், மற்றும் தாயின் அறைகளை தவிர, மற்ற எல்லா இடங்களிலும் கேமரா இருந்தது.
அதை அவர் அடிக்கடி கவனிப்பது வழக்கம், நேற்றும் நடந்ததை கூட கவனித்திருந்தார்.
அவனது கண்ணீரையும் அதை புறங்கையால் துடைப்பதையும் பஞ்சுபாட்டி கெஞ்சி ஊட்டி விடுவதையும் கவனித்தவர், நேற்று அவன் அழுததும், அழுது கொண்டே யாரிடமோ அலைபேசியில் பேசியது என அனைத்தையும் பார்த்தார்.
அவன் தன்னிடம் பேச தான் அழைக்கிறான் என்று அவன் தவறாக விட்ட ஒரு மிஸ்ட் காலில் தெரிந்து கொண்டவர், அவனுக்கு அழைத்தார்.
அவரது அழைப்பை கண்டதும் கடவுளை நேரில் பார்ப்பது போல பரவசம் , பயம் என எல்லாம் அவன் முகத்தில் தாண்டவம் ஆடியது. அதையும் கவனித்தார்.
"இளா ! எப்படி இருக்க? "
"நல்லா இருக்கேன் சார். நீங்க?"என கனிவாக பேசினான்.
"ம்... இருக்கேன். பாப்பாவ , அம்மாவா, உன்னையும் உன் சமையலை ரொம்ப மிஸ் பண்றேன் டா" என்றார் ஏக்கமாக. அவர் அப்படி சொன்னதும் இவன் முகத்தில் வந்த புன்னகை கீற்றையும் கவனித்தார்.
"பேசாம இங்க வந்துடுங்க சார். குடும்பத்தை விட்டுட்டு ஊர் , தேசத்துல வேலை பார்க்கிறதுலாம் உயிர விட்டு உடல் மட்டும் தனிச்சி வாழற மாதிரி சார்.
யாருக்காக நீங்க உழைக்கிறீங்களோ அவங்களுக்கு தேவையான பணத்தை மட்டும் சம்பாதிச்சா போதுமா? தேவையான பாசம், அன்பு , அரவணைப்பு கொடுக்க வேணாமா சார்...? நீங்க கூட இருக்கிறது போல வருமா சார் உங்க பொண்ணுக்கு ? எனக்கு குடும்பம் இருந்தால் கிடைக்கறத வச்சி அவங்க கூடவே இருந்திடுவேன் சார்" என்று ஜனனியை மனதில் நினைத்து படி சொன்னான்.
அதன் பின் உணர்ந்தவனா, "ஐயோ !! சாரி சார் என்னையும் மீறி பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க சார்.மன்னிச்சிடுங்க" என்று கெஞ்ச, அவர் பெரிதாய் எதுவும் நினைக்காமல் சாதரணமாக தான் பேசினார்.
"நீ சொன்னது எல்லாம் உண்மை தான் இளா ! குடும்பத்துக்காகனு சம்பாதிக்க தான் ஓடி அதுலே மூழ்கி போறோமே தவிர, அந்த குடும்பத்துக்காக கொஞ்ச நேரத்தை கூட ஒத்துக்கணும் நினைப்பே இல்லாம ஓடுறோம்"என உள்ளார்ந்து சொன்னவர், "சரி ! நீ எப்போ உனக்கு ஒரு குடும்பத்தை உருவாக்க போற இளா?என்று அவர் கேட்டதுமே அவனுக்கு வெட்கம் வந்தது.
"சார் ! உங்க கிட்ட சொல்லணும் தான் இருந்தேன். கொஞ்சம் பயம்"என்று இழுத்தான். "என்ன பயம்? உன் அப்பா கிட்ட பேசறது போல பேசு"என்றதும் சட்டென இவனுக்கு கண்ணீர் வந்து விட்டது. புறங்கையால் கண்ணீர் துடைப்பதை பார்த்தார்.
"இளா?"
"சார்"
"சொல்லு பா!"
"சார், நா... நான் ஒரு பொண்ணை விரும்புறேன் .அ... அவ இந்தியால இருக்கா சார். இப்போ வரைக்கும் ஆன்லைன்ல தான் பேசிட்டு இருக்கோம்... அவளை தேடி இந்தியா போகணும் சார்" என்றான் தயக்கமாக.
"இதை சொல்லவா உனக்கு தயக்கம்? எப்போ அந்த பொண்ணை பார்க்க போற?."
"சார்..."என்று இழுக்க,"விஷயம் என்னன்னு சொல்லு "என்றார் கணித்த படி.
"காண்ட்ராக்ட் முடிச்சிக்கலாம் சார். நான் இந்தியாக்கு போறேன். அங்கே செட்டில் ஆகலாம் இருக்கேன் சார்" என மனதில் உள்ளத்தை சொல்லி விட்டு லேசாக இருந்தான்.
"இந்தியா போக மாட்டேன் சொல்லுவ ! இப்போ இந்தியா போறேங்கற. ம்ம்...,"என்றதும் இவன் வெட்கப்பட்டான்.
"பொண்ணு பேரு என்ன?"
"ஜனனி சார்"என்றான் வாயெல்லாம் பல்லாக,
"சரி ! அடுத்த ஒரு மாசம் மட்டும் இரு ! நான் வந்ததும் நீ இந்தியா கிளம்பிடு"என்றார் மனசார.
"சார் உண்மையாவா சொல்றீங்க"என சிறுபிள்ளை போல கேட்டதை திரையில் பார்த்த இவருக்கு இங்கே சிரிப்பு தான் வந்தது.
"நிஜமா தான் டா சொல்றேன்..நீ என் பையன் போல உனக்கு ஒரு வாழ்க்கை இருக்குல சமையல் கட்டிலே உன் வாழ்க்கைய முடிஞ்சுக்காம போய் வாழப் பாரு !"என்றார்
இவனுக்குள் அப்படி ஒரு சந்தோசம்... குதித்து கத்தனும் போல இருந்தது. "ரொம்ப நன்றி சார்" என்றான் உற்சாகத்துடன்.
"அந்த பொண்ண துபாய்க்கு கூட்டிட்டு வா "என்றார் .."சரி சார்"என்றவனுக்கு ' இன்னும் இவன் அவ கிட்ட காதலையே சொல்லையே ' என்று மனம் கேலி செய்ய, அதை அடக்கினான்.
"அப்புறம் இளா ! உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்"என்று பீடிகை போட"என்ன விஷயம் சார்?!"என்று கேட்டான் புருவங்கள் சுருங்க,
"உனக்கும் மித்ராவிற்கும் என்ன பிரச்சனை? நேத்து டைனிங் டேப்பில் ஃப்ரெண்ட்ஸ் கூப்பிட்டு உன்னை இன்சல்ட் பண்ணி இருக்கா ! என்ன நடக்குது அங்க ?"என குரலை உயர்த்தி கேட்க, இவனோ சொல்ல தடுமாறினான்.
"நேத்து நான் சமைச்ச சாப்பாட்டு நல்லா இல்ல சார். அதான் திட்டினாங்க " என்று சமாளித்தான்.
"பொய் சொல்லாத உனக்கும் அவளுக்கும் பிரச்சனை போயிட்டு இருக்கு ! என்ன விஷயம் சொல்லு?"என்று கேட்டு, பதில் வேண்டி அதே பிடியில் நின்றார்.
"சார் ! நீங்க என்னை நம்பினாலும் நம்பலைனாலும் இது தான் உண்மை " என்று அனைத்தையும் சொல்லி முடித்தான். அவன் சொல்லும் போது அவன் முகத்தை தான் பார்த்தார். கசங்கிய முகத்தோடு சொல்லி முடித்திருந்தான். அவர் பக்கம் பதில் இல்லை அமைதியாக இருந்தார்.
"சார் ! உண்மையாவே உங்க பொண்ணு மேலே எனக்கு எந்த பீலிங்ஸ் இல்ல சார். அவன் எனக்கு தங்கை சார். அவளை அந்த மாதிரி பார்க்கல என்னை நம்புங்க சார்"என்று அவரது அமைதி அடி வயிற்றில் கிலி பிடிக்க, பயந்து போனான்.
"நான் உன்னை நம்புறேன் இளா ! உன்னை நம்பி தான் என் பொண்ணையும் அம்மாவையும் விட்டுட்டு போனேன். எனக்கு உன்னை பத்தி தெரியும். கூடிய சீக்கிரம் வேலை முடிஞ்சு நான் வந்துட்றேன்... நாளைக்கு மித்ராவ பார்த்துக்க ஒரு அம்மா வருவாங்க... அவங்க எல்லாதைத்தையும் பார்த்துப்பாங்க, நீ போனதும் அவங்க இங்க இருந்து பார்த்துப்பாங்க... நீ அவங்களுக்கு உதவி செய்" என்றார்.
இவனும் ' சரி ' என்றான். நெஞ்சில் பாராங்கல்லையாய் சுமையேறிய விஷத்தை அவரிடம் பகிர்ந்து இறக்கி வைத்த மகிழ்ச்சி ! மேற்கொண்டு காண்ட்ராக்ட் முடிய இரண்டு மாதங்கள் இருந்ததை ஒரு மாதமாக மாறியதிலும் அவனுக்கு பேரானந்தம். உடனே அவனது அன்னமாவிடம் பகிர எண்ணி அவளுக்கு அழைத்தான்.
ஹலோ "என்று சந்தோஷ துள்ளலில் விளிக்க, ஆண் குரலை கேட்டதும் விபு என்றெண்ணி "சொல்லு விபு"என சோர்வுடன் கேட்டவள் அவனது மகிழ்ச்சி சட்டென வடிக்கட்டி விட்டாள்.
மக்களே
இளா எந்த பிரச்சனையும் இல்லாம இந்தியா வருவானா?
உங்க எண்ணத்தை கருத்தை கமென்ட் பண்ணுங்க
உங்களுக்கு பிடித்த இமோஜிகிளிக் பண்ணுங்க
What's Your Reaction?






