புது வீட்டிற்கு வந்த ஒரு வாரமும் கடை, வீடு என இருந்தாலும் மாறனுக்கோ இரவில் தனது பைக்கை எடுத்துக்கொண்டு தன்னை உற்சாகம் செய்யும் ரசிகர்களை காண, யூடியூப்பிலும் இன்ஸ்டாகிராமிலும் வீடியோ பகிர என இல்லாமல் வெறுமையை தனக்குள் உணர்ந்தான்.
அதற்கு மேல் அவனது ரசிகர்கள் அவனை காணாத ஏக்கத்தில் இருப்பதோடு புலனத்தில் குறுஞ்செய்தி அனுப்பி விஷாலை ஒருவழி ஆக்கி விட்டனர்.
விஷால் மாறனிடம் தன் நிலமையை சொல்லவும். யோசித்தவன், ரசிகர்களை காண ஒரு நாளை தேர்வு செய்து சந்திக்க வேண்டிய இடம், நேரம் என அனைத்தையும் விஷாலிடம் சொன்னான். அவனும் குரூப்பில் பதிவு செய்து விட ரசிகர்கள் உற்சாகமானார்கள்.
அந்த நாளும் வந்து விட, வழமையான நாட்களை போல தனது வேலையை முடித்து விட்டு சீக்கிரமாக இல்லம் வந்திருந்தான்.
இரவு உணவு தயாரித்து இருவரும் உண்டு முடித்திருந்தனர் கோமதிக்கு தேவையான மாத்திரைகளை எல்லாம் கொடுக்க, வாங்கி போட்டவர் உறங்கச் சென்றார். அவனும் அவனது அறைக்குள் சென்று உறங்குவது போல நடித்தான்.
கோமதி, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதுமே எழுந்தவன் முன்பக்க கதவை திறந்து வெளியே வந்து வீட்டை பூட்டினான். அவனை தெரு நாய்கள் சுற்ற, அதற்கெல்லாம் தீனியை போட்டு விட்டு மெல்ல நடந்தான்.
மொட்டை மாடியில், தனது வெளிநாட்டில் வசிக்கும் தோழியிடம் பேசிக் கொண்டிருந்த சம்ருதி, மாறன் வெளியே செல்வதை கண்டு அதிர்ந்தாள், தன் தோழியிடம் பேசுவதை நிறுத்தி விட்டு அவனை நோட்டம் விட்டவள், அழைப்பை துண்டித்து விட்டு அகரனுக்கு அழைத்தாள்.
அவனும் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக சொல்ல தெருமுக்கத்தில், அவனை நிற்க சொல்லி விட்டு இவளும் கிளம்பி வெளியே வந்தாள்.
இருவரும் மாறனை பின் தொடர்ந்தனர். விஷாலுடன் பயணித்தவன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த, அவனை தொடர்ந்து வந்தவர்களும் மறைவாய் நின்றுக் கொண்டு அவன் செய்வதை எல்லாம் வீடியோவாக பதிவு செய்தனர்.
தலைகவசம், கருப்பு ஜாக்கெட் மட்டும் கை உறை போட்டவன் வண்டியின் முன் அமர, விஷாலும் அவனோடு பின்னே அமர்ந்தான். விஷாலும் தலைக்கவசம் போட்டு முகத்தை தான் மறைத்திருந்தான்.
இருவரும் தங்கள் முகத்தை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. வண்டியை எடுக்க, இவர்களும் பின் தொடர்ந்தனர். கூட்டமும் கூச்சலுமான இடத்தில் மாறனின் வண்டி ஸ்டைலாக வந்து நின்றது. ஆரவாரத்தோடு அவனை வரவேற்றனர்.
நீண்ட சாலையில் இரண்டு பக்கமும் கூச்சலிட்டபடி இளைஞர்கள் நின்று கொண்டிருக்க, அதீத எடையுள்ள வண்டியில் ஜம்பமாய் அமர்ந்து ஓட்டி வந்தவன் தன்னிரு கால்களை உயர்த்தி கணைக்கும் குதிரை போல, முன் சக்கரத்தை உயர்த்திப் பிடித்து நிறுத்தினான்.
அதை கண்ட சம்ருதியும், அகரனும் வாயை பிளந்து பார்த்தனர்.
முன் சக்கரத்தை ஊண்டி, பின் சக்கரத்தை உயர்த்தி அப்படியே சுழற்றினான். அவனது அழுத்திற்கு இசைந்து கொடுப்பது போல அவ்வண்டியும் சுழன்று கொண்டிருந்தது!
இளைஞர்களின் உற்சாக கூச்சல்கள் அவனுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்க, தன்னால் முயன்ற வரையில் வண்டியில் விதவிதமான சாகசங்களை செய்து காண்பித்து அசத்தியிருந்தான் மாறன்.
மறைவாக நின்றிருந்த இருவரும் அதை விழியகற்றாமல் கண்டனர். அகரன், மாறன் காட்டும் சாகசத்தை சம்ருதியின் அலைபேசியில் சேமித்து வைத்தான்.
"பெரிய சர்க்கஸ்காரனா இருப்பான் போலையேடா!"
"சர்க்கஸ்காரனா! ஏ சம்மு? இவரு பெரிய பைக் ரைடர்! நைட் ஹீரோனா எத்தனை பேரோட ஃபேவரைட் ஹீரோ தெரியுமா? இன்ஸ்டால இவருக்கு எத்தனை ஃபேன் பேஜ் இருக்கு தெரியுமா? அதுல கேர்ல்ஸ் அதிகம்.
இவருக்கு தனியா வாட்ஸ்அப் சேனல் இருக்கு. இவங்க சொல்ற டைமிங்ல தான் எல்லாரும் ஒன்னு கூடுவாங்க. லேடீஸ் வரக்கூடாது ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். என் பிரண்ட் கூட இங்க தான் இருப்பான். என்னையும் கூப்பிட்டான். நான் தான் வீட்டுக்கு பயந்துட்டு வரலனு சொல்லிட்டேன்."
"ம்..." என புருவம் உயர்த்தி அவனை முறைத்தவள், "ரொம்ப தான் பெருமை இந்த எருமைக்கு. இவனால எத்தனை குடும்பங்களும் எத்தனை அம்மாக்களும் எத்தனை பசங்களும் பாதிக்கப்படுறாங்க தெரியுமா உனக்கு? இவன் பண்றதே பைத்தியகாரத்தனம் இவனுக்கு ஃபேனுன்ற பைத்தியங்கள் வேற.
லைஃப பார்க்காம இப்படி ஹீரோ ஒர்ஷிப் அவசியமா டா? இதுல எத்தனை பேர் படிக்கிற பசங்க இருப்பாங்க? எத்தனை பேர் படிச்சி முடிச்சிட்டு வேலை இல்லாம சுத்திட்டு இருப்பானுங்க? இவனுங்க பின்னாடி இருக்க குடும்பத்தை இவன் நினைச்சு பார்ப்பானா? இவனை கொண்டாடிட்டு இருக்கானுங்க இவனுங்க குடும்பம் என்ன கதியில இருக்கோ?" என ஆவேசமாக பேசிட, அமைதியாக இருந்தான் அகரன்.
"ச்சே! வாடா போலாம் எனக்கு இதெல்லாம் பாக்க பாக்க வெறியாவுது இவனுங்க எல்லாரையும் விஷ ஊசி போட்டு கொல்லனும் தோணுது! முக்கியமா இவனை.." என்று மாறனை கை காண்பித்து சொன்னாள்.
"இவனை தான் முதல்ல கொல்லணும்! பகல்ல ஒரு வேஷம் ராத்திரில ஒரு வேஷம்னு சுத்திட்டு இருக்கான். இதுல இவன் அம்மா வேற தினமும் சுப்ரபாதம் மாதிரி என் புள்ள நல்லவன் வல்லவன்னுட்டு இருக்கு.
இந்த அயோக்கியத்தனத்தை அத்தாம்மாக்கு குறும்படமா போட்டு காட்டி அதோட வாயையும் சேர்த்து அடைக்கணும் டா!" என ஆவேசமாக அவளும் கத்திப்பேச, அகரனோ அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அவளது வாயை பொத்தினான்.
"முதல்ல நாம இங்க இருக்கிறது ஷேஃப் இல்ல, வா வீட்டுக்கு போகலாம்.." என்றவன் சம்ருதியை அங்கிருந்து இழுத்துச்சென்றான்.
இதுவரை தன்னை பற்றி மறைத்து வைத்த ரகசியம் கசிந்தது கூட தெரியாமல், தன் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருந்தான் மாறன்!
சம்ருதியும் அகரனும் இல்லம் வந்தனர். அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டவன், வண்டியை எடுக்காமல் அவளிடம் சந்தேகமாய், "நாளைக்கு நம்ம எடுத்த வீடியோவை அவங்க அம்மா கிட்ட போட்டு காட்டிவீயா சம்மு?" என்றான்.
"அப்படி தான் நானும் நினைச்சேன். ஆனா வர வழியில எல்லாம் யோசிச்சேன். அவங்க அம்மா கிட்ட பேசறத விட மாறன் கிட்ட இதைப்பத்தி முதல்ல பேசணும். இது இன்னொருத்தரோட பெர்சனல் நாம தலையிட்டு அது அவனுக்கு மிகப்பெரிய பாதிப்பு எதுவும் வந்திடக்கூடாது.
குறிப்பாக அவங்க அம்மாக்கு! அவங்களுக்கு ஹெல்த் இஸுஸ் இருக்கு இதை அவங்க கிட்ட சொல்லி அதனால எதுவும் ப்ராப்ளம் வந்தா? சோ, இதை பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும் நான் பார்த்துக்கிறேன்.." என்றதுமே அவன் முகத்திலும் சம்ருதியை நினைத்து சிறு கர்வம் தோன்றியது.
"ஆங்.. அப்புறம்.. நாம பார்த்த விஷயத்தை உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கெத்து காட்டுறேன்னு சொல்லிட்டு இருக்காத! நாம பார்த்தத பத்தி வெளிய நீ மூச்சு விடக் கூடாது புரிஞ்சதா?"என மிரட்டினாள்.
"அதைப்பத்தி யோசிக்க கூட மாட்டேன் போதுமா?"
"இந்த விஷயம் லீக் ஆச்சி.. அதுவும் உன்னாலனு தெரிஞ்சது.. மவனே உன் விஷயமெல்லாம் பிரேக்கிங் நியூஸ்ல வந்திடும் ஜாக்கிரதை!" என மிரட்ட, பெரிய கும்பிடு ஒன்றை போட்டு அங்கிருந்துச் சென்றான்.
இவளும் மெதுவாக கதவை திறந்து உள்ளே நுழைய, கூடத்தில் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தார் வைத்தியநாதன். அவர் அருகே சென்று படுத்துக் கொண்டாள்.
பகலவன் சிறப்பாக தன் பணியை செவ்வனே தொடங்கி வைக்க, மக்களும் அவன் வழியை பின்பற்றி அக்காலைப்பொழுதில் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
பாதி இரவில் தூங்கி அதிகாலையில் எழுந்து கோலத்தில் ஆரம்பித்து, சமையலறையில் சமையல் வேலை என அனைத்தையும் முடித்திருந்தான் மாறன்.
வேலை செய்யும் மகனின் முகத்தில் சோர்வை கண்ட கோமதி அவன் அருகே வந்து, "என்ன தம்பி இன்னும் உனக்கு இந்த வீடு பழகலையா?" என பணிவாக கேட்டார்.
"ஏன் மதி அப்படி கேக்குற?"
"கண்ணுலாம் சிவந்திருக்கேப்பா அதான் கேட்டேன்.." எனவும் முழித்தவன் சமாளிப்பாக சிரித்துக்கொண்டே, "ஆமா மதி இன்னும் இந்த வீடு எனக்கு புதுசா தான் இருக்கு தூக்கம் வர கொஞ்சம் லேட்டாகுது. போக போக பழகிடும்!" என்றான்.
"அதுவரைக்கும் நான் எழுந்து சமைக்கட்டுமா தம்பி?"
"வேணாம் மதி! அதெல்லாம் சீக்கிரமா சரியாகிடும் எனக்கு ஒன்னுமில்ல. கடையில வேலை இல்லைன்னா, கொஞ்சநேரம் தூங்கினா சரியாகிடும். இதுக்காக நீ சீக்கிரமா எந்திருக்கணும் இல்லை நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். என்னைப்பத்தி கவலைபடாம இரு.." என்று அவரை சமாதானம் செய்து, அவர் வார்த்த கோதுமை தோசையை சாம்பாருடன் ருசித்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்ல வெளியே வந்தான்.
அவரும் பத்திரம் வாசிக்க அவன் பின்னே வந்தார். வண்டி வாசலுக்கு கொண்டு வந்து உதைத்து அதை உயிர்ப்பித்தவன் தாயிடம் சொல்லிக்கொண்டு திரும்பிட, அங்கே பெட்ரோல் இல்லாமல் சம்ருதியின் வண்டி நகர மாட்டேன் என்று அடம்பிடித்தது!
"என்ன பாப்பா வண்டியில பெட்ரோல் இருக்கா? இல்லையா? பார்க்கிறது இல்லையா? நேரமாச்சி வேற சொல்லிட்டு இருக்க எப்படி போவ?" என வைத்தி அக்கறையாக கேட்டார்.
"மறந்துட்டேன்ப்பா.. இன்னைக்கி சீஃப் டாக்டர் வேற வர்றார் சீக்கிரம் போகலைன்னா திட்டுவாரு.. இப்போ என்ன பண்றது?" என நேரம் பார்த்து காலை வாரின வண்டிக்கு பல அர்ச்சனைகளை தந்ததும் இல்லாமல் ஒரு எத்து வேறு விட்டாள்.
சம்ருதியும் வைத்தியும் வண்டியை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்ட மாறன், "என்ன பாட்னர் வண்டிக்கு என்னாச்சி?" என்றான்.
"பெட்ரோல் இல்லப்பா! பாப்பா வேற சீக்கிரமா போகணும் சொல்லிட்டு இருக்கா என்ன பண்றது தெரியாம நிக்கிறோம்.."
"ஓ.." என்றவன் தாயை பார்த்து விட்டு, "நான் வேணும்னா உங்க பொண்ண ட்ராப் பண்ணவா பாட்னர்?"
அவரோ தயங்கி விட்டு கோமதியை தான் பார்த்தார். மகனும் இப்படி கேட்பான் என்று எதிர்பாராதவர் வேறு வழியின்றி, "பரவயில்லைண்ணே தம்பியே உங்க பொன்னை கூட்டிட்டு போகட்டும்.." என்றார் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்தபடி.
அவரும் சம்ருதியை பார்த்தார்
"சரிப்பா நான் அவர் கூடவே போறேன். நீ பார்த்து இருந்துக்க நேரத்துக்கு சாப்பிடு நான் வர்றேன்.." என்று அவன் பின்னே ஒருபக்கமாக ஏறிக்கொண்டவள் கம்பியை தான் பிடித்தாள்.
கோமதியும் அதை தான் எதிர்பார்த்தார்.
"வேகமாக போகணும் வேகத்தை கூட்டி போகாத தம்பி!" என உள்ளுக்குள் பதைக்கும் மனதை மறைத்தபடி சொன்னார்.
அதற்கு சம்ருதியோ அவர் பக்கம் திரும்பியவள், "உங்க புள்ளை நைட்ல தான் வேகத்தை கூட்டுவார் பகல்ல இல்ல ஆன்டி.." என்றதும் சட்டென அவளை திரும்பி ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்த்தான் மாறன்!
அவளோ இதழை சுழற்றி நக்கலாக சிரித்தாள்.
"நீ என்ன சொல்ல வர்ற?" என புரியாமல் மதி கேட்டிட, "ஆங்.. அது.. நைட்டானாலும் பரவாயில்லை மெதுவாக போங்க சொல்றேன்!" என இளித்து வைக்க அவரோ முறைத்து வைத்தார்.
இரு பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி இருந்தார்கள் சிறியவர்கள். வரும் வழியெல்லாம் அவன் குழப்பத்துடன் வர, அவளோ வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.
இடையில் சிக்னலில் நின்றிருக்க, எதிர்திசையில் கே.டி.எம் பைக்கை வைத்து ஒருவன் ஏவுகணை போல் சர்ரென்று மகிழ்ந்து, பேருந்து என்று பாராமல் உள்ளே நுழைந்து போவதை கண்டு பக்கத்தில் தலையில் அடித்துக்கொண்டார் பெரியவர் ஒருவர்.
"எப்படி போறான் பாருங்களேன்! அவசரமா போய் என்னத்தை கிழிக்கப்போறான்? இந்த காலத்து பெத்தவங்களும் சரியில்லை பசங்களுக்கும் சரியில்ல! கொஞ்சம் மிஸ்ஸானாலும் வீல்ல மாட்டி செத்திருப்பான்.
ஆபாத்துனு தெரிஞ்சும் ஓட்டிட்டு போறவனுக்கு உயிரோட மதிப்பு எங்க தெரிய போகுது? இந்த மாதிரி வண்டி வச்சிருக்கவனுங்க லைசன்ஸ், வண்டியையும் பிடுங்குனா தான் திருந்துவானுங்க.." என்று திட்டினார்.
மாறனுக்கோ புரையேறியது, சம்ருதி அவனது தலைக்கவசத்தின் மீது கையை வைத்து தட்டினாள். திரும்பி அவளை தான் பார்த்தான்.
"உன்னை திட்டனது போல இருக்கா என்ன? புரையேறுது!"
அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. சிக்னல் விழுந்ததும் வண்டியை கிளிப்பியவன் நேராக சென்று அவளது மருத்துவமனையில் தான் நிறுத்தினான்.
அவளும், "தேங்க்ஸ்" என்று உள்ளே செல்ல, "சம்ருதி!" என அவளை முதல்முறையாக பெயரை சொல்லி அழைத்திருந்தான்.
திரும்பியவள், "என்ன?" என்று கைகளை கட்டிக்கொண்டு கேட்டாள்.
"வண்டியில ஏறுனதுல இருந்தே பொடிவச்சி பேசுறது போல் இருக்கு! என்ன பிரச்சனை உனக்கு?"
"ஓ.. பொடி வச்சி பேசுறதால உங்களுக்கு புரியலையா மாறன்? நான் வேணும்னா டைரக்டா பேசட்டுமா? இல்ல வேணாம் வீடியோ காட்டட்டுமா?" என நக்கலாக பேசிக்கொண்டே தனது அலைபேசியில் எடுத்த வீடியோவை காட்டினாள்.
அதை கண்டதும் அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை அவனுக்கு!
"இ..து" என இழுக்க..
"இ..இது வேற ஒன்னுமில்ல நீங்க செஞ்ச சாகசம் தான்!" என்றதுமே அவனுக்கு நெஞ்சில் நீர் வற்றிப்போனது.
"என்ன ஹீரோ அதிர்ச்சியில் பேச்சு வரலையோ?" என கன்னத்தில் கைவைத்து கேட்டிட, எச்சில் விழுங்க நின்றான்!
"நீ.. நீ.. ப்ச்.. உனக்கு எப்படி இந்த வீடியோ கிடைச்சது?"
"சூட் பண்ணதே நான் தானே!"
"அப்படினா?"
"அப்படினா நேத்து நீங்க பண்ண சாகசத்தை கண் குளிர பார்த்து படம் பிடித்தது நான் தான் சொல்றேன் புரிஞ்சதா?"
"அப்போ என்னை நீ வேவ் பார்த்திருக்க? வெட்கமா இல்லை உனக்கு? நான் என்ன பண்ணா உனக்கு என்ன? எதுக்கு இப்படி சீப்பா பிஹேவ் பண்ற?"
"ஹே மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! யாரு இங்க சீப்பா பிகேவ் பண்றா நானா?"
"பின்ன நீ இல்லாம வேற யாரு? அடுத்தவங்க பெர்சனல்ல வீடியோவா எடுக்கிற உன் கேரக்டர சீப் மெண்டலிட்டினு சொல்லாம வேற என்ன சொல்ல?"
"ஓ.. பகல்ல நல்லவன் வேஷம் போட்டு ஊரை ஏமாத்திட்டு, நைட் இப்படியொரு வேலை பார்க்கிற நீ என்னைய சொல்றியா?"
"நான் என்ன பண்ணா உனக்கு என்ன?"
"நீ பிராடு வேலை பார்ப்ப, உங்க அம்மா நல்லவனு புகழ்வாங்க அத கேட்டு நான் சும்மா இருக்கணுமா?"
"பிராடா! அப்படி என்ன பிராடு வேலை பார்த்தேன் நான்? நைட் வெளிய போய் தப்பான தொழில் பண்ணேனா? திருடினேனா? பப்புக்கு போய் குடிச்சி கூத்தடிச்சேனா? இல்லையே எனக்கு பிடிச்சதை பண்றேன் அதுல என்ன தப்பு இருக்கு?"
"அப்போ எதுக்கு இந்த நல்லவன் வேஷம் எல்லாம்?"
"லுக்! நான் ஒன்னும் நல்லவன் வேஷம் போடல! நான் எப்பவும் போல தான் இருக்கேன்.."
"ஓ.. அப்போ மிட்நைட் சாகசம் பண்றது உங்களுக்கு கேஸ்வல் ஒர்க்ல?" என நக்கலாக கேட்டாள்.
"ஹே லிஸன்! என் பெர்சனல்ல நீ எதுக்கு தலையிடுற? நான் என்ன பண்ணா உனக்கு என்ன?"
"உன்னை முன்னுதாரணம் காட்டில அந்த சின்ன பசங்களை அவங்க அம்மாங்க திட்றாங்க! இதை அவங்க அம்மாங்க கிட்ட காட்டினா உன்னை கம்பேர் பண்ணி திட்ட மாட்டாங்கல.." என்றதுமே அவனுக்கு ஒருநொடி இதயம் நின்று துடித்தது.
"எனக்கு இது தேவை இல்லாதது தான். ஆனா, உங்க அம்மா வார்த்தைக்கு வார்த்தை என் புள்ள நல்லவன் வல்லவன் தினமும் எல்லார் கிட்டயும் திருப்புகழ் பாடுறாங்க பாரேன் அது தான் இரிட்டேடிங்கா இருக்கு.
அதான் அவங்க வாயடைக்க
உங்க புள்ளையோட திறமை என்னன்னு பாருங்க காட்ட தான் எடுத்தேன்!" என சொல்லவும் அவனுக்கு சர்வமும் அடங்கிப்போக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்!