வீடு மாறி வந்து ஒரு வார காலம் சடுதியில் ஓடி விட, கோமதியும் மாறனும் அத்தெரு மக்களுடன் நன்றாக பழக ஆரம்பித்து விட்டார்கள்.
அதுவும் வீட்டு வேலை, சமையல், கோலம் போடும் மாறனை அங்கிருக்கும் பெண்களுக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
சமையலில் அவனுக்கு தெரிந்த புதுமையான விஷயங்களை அவர்களுக்கு கூறுவான். சத்தான உணவுகள் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று சொல்லுவான்.
வீட்டிலிருக்கும் நேரம் எல்லாம் தாய்மார்கள் கூடி பேசும் வேளையில் அவன் சொல்ல கேட்டுக் கொள்வார்கள்.
வயது வித்தியாசம் பார்க்காமல் வைத்தியுடன் கொஞ்சம் நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறான். அவரும் அவனிடம் மனசு விட்டு பேச ஆரம்பித்தார். அவர்களது நட்பை கண்டு ஆச்சரியப் பட்டாள் சம்ருதி!
மகன் இல்லாத ஏக்கம் உள்ளுக்குள் அழுத்தி அவரை முடக்கி வைத்திருந்த நாட்களில் இருந்து சம்ருதி தான் அவரை வெளியே கொண்டு வந்தாள்.
மகன் இல்லை என்ற விஷயத்திலிருந்து அவர் கடந்து வந்தாலும் 'இருந்திருக்கலாம்' என்ற ஏக்கம் தான் மிச்சம் சொச்சமாக அவருக்குள் இருக்கிறது.
அதை மகளிடம் மறைக்க சமாளிப்பாக நகைச்சுவையாக பேசுவது ஒருவரை ஒருவர் கலாய்த்து வாரிக்கொள்வது என தன் நாட்களை மகளுக்காகவே ஓட்டுகிறார்.
மிச்ச சொச்ச ஏக்கத்தை போக்க வந்தவனாக மாறன் வைத்தி உறவு நட்பு ரீதியாக நாளுக்கு நாள் அவர்களது நெருக்கம் கூடிக்கொண்டே போனது
கோலத்தில் ஆரம்பித்து இரவு சமையல் வரை கலந்து பேசும் அளவிற்கு அவர்கள் முன்னேறிருக்க, தந்தையின் மாற்றத்தை கண்டு அவளுக்குள் திருப்தி தான்.
ஆனாலும் தந்தையிடம் நெருக்கமாக பழகுவது அவளுக்குள் கொஞ்சம் பொறாமையை தூண்டு விடுகிறது. அதை மறைமுகமாக வைத்தியிடம் காட்ட அவரும் மகளை எண்ணி சிரிப்பார்.
தினமும் வைத்தி மாறனின் புகழைப் பாட, இவளுக்கு அவன் மீது சலிப்பும் கோபமும் தான் வந்தது. இது போல கோமதி வேறு மகனின் திருப்புகழ் வேறு ஒருபக்கம் பாட, காதில் புகை வராத குறையாக கொலைவெறியானாள் சம்ருதி.
அவள் மட்டுமல்ல அந்த தெருவில் வசிக்கும் இளசுகள் அனைவருக்கும் மாறன் மீது கோபமாக இருந்தனர். காரணம் அவர்களது தாய்மார்கள் அவனை எடுத்துக்காட்ட சொல்லி இவர்களை திட்டுவதால் வரக் கோபம் தான்.
அவனை ஒப்பிட்டு சொல்லி அவர்களை வேலைவாங்க கொதித்து போய் விட்டனர், அச்சிறுவர்கள்.
மாலை ஆறு மணி அளவில் சனிக்கிழமையில் சம்ருதியோடு அரட்டை அடிக்க அத்தெருவில் வசிக்கும் வாண்டுகளும், இளசுகளும் ஒன்று கூடுவார்கள் இன்றும் அவ்வாறு கூடி இருப்பதோடு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்த்திருப்பதை பார்த்த சம்ருதி, அவர்கள் பக்கத்தில் அமர்ந்தாள்.
அவள் வந்து அமர்ந்தது கூட தெரியாது சோகமாக இருக்க, தன் அருகே இருந்த ஒருவனை சுரண்டி, "என்னடா ஹாப்பியா இருக்கலாம் வந்தா.. எல்லாரும் அன்ஹாப்பியா இருக்கீங்க? வாட் ஹாப்பெண்ட்?"
"ப்ராப்ளம் ஹாப்பெண்ட்!"
"என்ன ப்ராப்ளம்? யாரு பண்ணா? என்ன டா பண்ணி வச்சீங்க?"
"நாங்க எந்த ப்ராப்ளமும் கிரியேட் பண்ணல எங்களுக்கு தான் ப்ராப்ளம் கிரியேட் ஆகியிருக்கு?" என இன்னொரு வாண்டு சொல்ல..
"அப்படி என்ன ப்ராப்ளம்?"என ஆர்வமாக கேட்டாள்.
"இதுவரைக்கும் வேலையே சொல்லாத மம்மி வேலை பார்க்க சொல்றாங்க. ஒழுங்கா வேலை பார்க்கலேன்னு கம்பேர் பண்ணி திட்டுறாங்க!" என பின்னே இருந்த வாண்டு சோக குரலில் சொன்னாள்.
"அப்படியா யாரோட கம்பேர் பண்ணி திட்டுறாங்க?"
"உன் வைத்தியோட புது பிரண்ட் இருக்கானே அவனோட தான் கம்பேர் பண்றாங்க.." என்று அருகே இருந்த இளசு ஒன்று சொல்ல..
"உன்னை, எல்லாரையும் அவனை வச்சா திட்றாங்க?"
"ஆமா.." என அனைவரும் தலையாட்ட, வாயில் கை வைத்து அதிர்ந்தாள்.
"ஏய் சின்ன குட்டி உன்னையுமா?"
"ஆமா... நா கடைக்கு போய் ஏதாவது மறந்துட்டு வந்தா, அவனை சொல்லி என்னை திட்டுது மம்மி!" என்று உதட்டை பிதுக்க, இவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
"இதுவரைக்கும் நீ ஒழுங்கா படிச்சா மட்டும் போது சொன்னாங்க சம்மு. இப்போ என்னடானா.. உன் துணிய துவை, வீட்டை கூட்டு கடைக்கு போயிட்டு வா.. தோசை ஊத்து ஒவ்வொரு வேலையா நாளுக்கு நாள் சொல்லிட்டே இருக்காங்க..
செய்ய முடியாதுன்னா, மாறன் தம்பிய பாரு.. அவங்க அம்மாக்கு உடம்பு முடியலன்னு வீட்டு வேலை எல்லாம் செய்யுது.. நீ நான் முடியாம கிடந்தாலும் செய்ய மாட்டா நானே தான் செய்யணும் இங்கனு கத்துது சம்மு!" என்றான் அகரன். பொறியியல் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறான்.
"ஆம்பிள்ளையே எல்லா வேலையும் செய்யும் போது உனக்கு என்ன டி சொல்லி திட்டிட்டு எல்லா வேலையும் என் கிட்டையே சொல்றாங்க அக்கா!" என சோககீதம் வாசித்தாள் பிரின்சி பத்தாம் வகுப்பு படிக்கிறாள்.
அவரவர் வீட்டில் வாங்கும் திட்டிட்டுகளை எல்லாம் சம்ருதியிடம் முறையிட்டனர்.
"ஓகே விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான். என்ன பண்ணலாம் யோசிக்கணும்?"
"சம்மு! அந்தாள் ரொம்ப நல்லவனாம் நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவானாம்.. சொல்லி என்னையும் நேரத்துக்கு வீட்டுக்கு வா! வெளிய ஊர் சுத்தாத, அந்த தம்பிய பார்த்து கத்துக்கனு பேச்சு! வேற பேச்சே எடுக்க மாற்றாங்க, வீட்ல இருக்கவே பிடிக்கல.." என்றான் குரல் கமற.
"அகரா, பீல் பண்ணாத! இதுக்கு ஒரு சொலுயுசன் கண்டு பிடிப்போம். நிச்சயம் இவ்வளவு பண்றவன் கிட்ட ஏதாவது ஒரு சீக்ரட்டோ இல்ல தப்போ இருக்கும். அதை கண்டு பிடிச்சாலே போதும் அவனை முன்னுதாரணம் காட்ற உங்க அம்மாங்க கிட்ட சொல்லி அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைச்சிடலாம். ஆனா அதை எப்படி கண்டுபிடிக்கிறது தான் தெரியல !"
"ஒரு வேள அவன் கிட்ட அப்படி எதுவும் இல்லைன்னா என்ன பண்றது?" என பிரின்சி சந்தேகமாக கேட்டாள்.
"இல்லைன்னா இருக்கிறது போல உருவாக்குவோம்!" என்று சொல்லி சம்ருதி கண்ணடிக்க, அங்கிருந்த அனைவரின் முகமும் பிரகாசமானது.
"ஆமா கண்டிப்பா சொல்றேன் அவன் கிட்ட ஏதோ ஒரு தப்பு இருக்கு. அதை கண்டுபிடிக்கணும்.."
"ஓகே தான். ஆனா கண்டுபிடிக்கிற வரைக்கும் ஒரு சொலுஷன் சொல்லு தினமும் என்னால வீட்ல திட்டு வாங்க முடியல!" என வாண்டு பொங்கிட..
"சொலுஷன்" என்று இவள் யோசித்து கொண்டிருக்க, மாறன் தன் வீட்டின் முன்னே பைக்கை நிறுத்தினான்.
எல்லோரும் அவனை தான் கொலைவெறியோடு பார்த்திருந்தனர். சிட்டிகை செய்த செய்தபடி வண்டியிலிருந்து இறங்கியவன், அவர்கள் அமர்ந்திருப்பதை கண்டு அவர்கள் அருகே வந்தான்.
"ஹாய் குட்டீஸ்! இன்னைக்கி தான் உங்க எல்லாரையும் பார்க்கிறேன். எப்பவும் இங்க தான் மிட்டீங்கா? உங்க மீட்டிங்கல நானும் ஜாயின் பண்ணிக்கவா?" என அழகான சிரிப்புடன் கேட்டான்.
அதற்குள் ஒரு வாண்டு வேகமாக "நோ!" என்றது.
"நோவா? ஏன்?"
"ஏன்னா உன்னால தான் நாங்க வீட்டில திட்டு வாங்குறோம். சோ உன்னை எங்களோட சேர்த்துக்க மாட்டோம்.." என குட்டியாக இருந்த அந்த வாண்டு கோபமாக சொல்லி முகத்தை திருப்பிட, இவனுக்கு சிரிப்பு தான் வந்தது, அடக்கிக் கொண்டு,
"உங்க பேர் சார்?"
"சதீஷ்!" என்று முகத்தை வெட்டினான்.
"மிஸ்டர் சதீஷ் என்னால நீங்க எதுக்கு திட்டு வாங்குறீங்க? புரியலையே!"
"வீட்ல கார்டூன் சேனல் பார்க்க வேண்டிய என்னை கடைக்கு அனுப்புறாங்க என் மம்மி! அவங்க சொன்னதுல ஒன்னு மிஸ் பண்ணாலும், உன்னை கம்பேர் பண்ணி என்னை திட்டுறாங்க!
என்னை மட்டுமில்ல இங்க இருக்க எல்லாரையும் உன்னை சொல்லி தான் திட்டுறாங்க. உங்க மேலே நாங்க கோபமா இருக்கோம்.." என மழலை மொழியில் படபடவென பட்டாசை பொரிந்து விட்டு மூச்சு வாங்கினான்.
"கூல் படி கூல்.." என அருகே இருந்த சின்ன குட்டி அவனது நெஞ்சை நீவி விட்டது.
"ஓ..." என்றவன் நாடியை தேய்த்தபடி தன்னை முறைக்கும் அனைவரையும் நோக்கினான்.
"சோ சேட்! ஆனா, நான் என்ன பண்ணேன்? எதுக்கு என்னை உங்களோட கம்பேர் பண்ணனும்?"
"நீ ஏன் மென் வீட்டு வேலை எல்லாம் பார்க்குற?"
"ஏன் பார்க்க கூடாதா?" என நக்கலாக கேட்டான்.
"நீ பார்க்குறதால தான் எங்களையும் பார்க்க சொல்றாங்க..."
"அதுக்கு?"
"நீ பார்க்காத!"
"முடியாது நான் பார்ப்பேன்" என்றான்.
"நீ ஏன் வீட்டு வேலை பார்க்கிற? அம்மா தானே வீட்டு வேலை பார்க்கணும்? பாய்ஸ் வீட்டு வேலை பார்க்க மாட்டாங்க!"
"ஓ... ஆமால! அம்மா தானே வீட்டுல எல்லா வேலையும் பார்க்கணும். பாய்ஸ் வீட்டு வேலை பார்க்க கூடாதுல!" என்று யோசிப்பது போல பாவனை செய்தான்.
"ஓகே... என் கேள்விக்கு பதில் சொல்லுங்க! உங்க வீட்ல உங்க அம்மாக்கு முடியலைன்னா? யாரு வீட்டு வேலை எல்லாம் பார்ப்பா ?"
"அப்பா!"என ஒரு வாண்டு சொல்ல..
"கரெக்ட் அம்மாக்கு முடியலைன்னா அப்பா தானே பார்க்கிறார். அப்பா பாயா இருந்தாலும் பார்க்கிறார்ல. எங்க அம்மாக்கு முடியல. எனக்கு அப்பா இல்ல சோ நான் பார்க்கிறேன் இதுல என்ன இருக்கு?"
"இதுல உனக்கு என்ன இருக்கு? எங்களுக்கு தானே இருக்கு. எதுக்கு எடுத்தாலும் உங்களை கம்பேர் பண்ணில எங்களை தானே திட்டுறாங்க!" என அகரன் சலித்து கொண்டு சொன்னான்.
"அதுக்கு நான் என்ன பண்ண?"
"கம்பேர் பண்ணாதீங்க நீங்க அவங்க அம்மாங்க கிட்ட சொல்லணும்.." என்று சம்ருதி வாயை திறந்தாள்.
"ஓ.. டாக்டர் மேடம் நீங்களும் இங்க தான் இருக்கீங்க போல!" என கேலி செய்ய, அவனை முறைத்தாள்.
"உங்க எல்லாரோட வீட்டுக்கு போய் உங்க அம்மாங்க கிட்ட, என்னை வச்சி கம்பேர் பண்ணாதீங்க சொல்லனுமாக்கும்? அதற்கெல்லாம் சான்சே இல்ல! வேணும்னா வேற ஐடியா ஒன்னு சொல்லவா?"
"என்ன அது?"
"உங்க அம்மா சொல்ற வேலையை எல்லாம் சரியா பாருங்க. உங்க அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க. நிச்சயம் உங்கள கம்பேர் பண்ண மாட்டாங்க, என்ன எப்படி என் ஐடியா?" என புருவம் உயர்த்தி கேட்க, அவனை வெட்டவா குத்தவா ரீதியில் பார்த்தனர்.
"என்ன பதிலை காணோம்?" என நமட்டுச் சிரிப்புடன் கேட்டான்.
"வேலை பார்க்குற வயசா மேன் எனக்கு?" என்று கதிரையின் மீது ஏறி நின்று கேட்க, அவனது கால் அளவுக்கு கூட இல்லாத அந்த குட்டி புருவம் சுருங்கி அவனை நோக்கி கை நீட்டிக் கொண்டு கேட்பதில் இவனுக்கு சிரிப்பு பொதுக் கொண்டு வந்தது.
"எதுக்கு சிரிக்கிற எங்களை பார்த்தால் காமெடி பண்றது போலவா தெரியுது உனக்கு?"
"ஓகே ஓகே சிரிக்கல சிரிக்கல" என்று சிரிப்பை அடக்க முயன்றான்.
"ம்ம்.. இப்போ நான் என்ன பண்ணனும்?"
"எங்க அம்மாங்க உங்களை வச்சி எங்களை கம்பேர் பண்ண கூடாது! அதுக்கு நீங்க ஏதாவது பண்ணனும்?"
"அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. நீங்க தான் உங்க அம்மாங்க கிட்ட கம்பேர் பண்ணாதீங்க சொல்லணும்! இல்ல உங்க அம்மா சொல்ற வேலைய சொல்லணும். இரண்டாவது சொன்னது தான் பெட்டர்னு தோணுது.
இல்ல முதலாவது சொன்னது பெட்டர்னு நினைச்சால் கடவுள் தான் காப்பாத்தனும் உங்களை.. என்னை திட்டக்கூடாது!" என்று நக்கலாக மொழிந்து விட்டு மீண்டும் சிட்டிகை செய்தபடி வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
"சம்மு! இதுக்கு மேலே என்னால பொறுக்க முடியாது! இவனை ஏதாவது செய்யணும்!" என பொங்க..
"பொறுமையா இரு சதீஷ்! இவன் வசமா சிக்க போற நாள் வந்தே தீரும்.. அப்ப வச்சுக்கலாம் இவனை!" என வில்லி போல பேசினாள் சம்ருதி.
*****