• வணக்கம் ! சித்ரா ஹரிதாஸ் நாவல்கள் உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்... நம் மனதில் எழுத்தின் மணம் நறுமணமாகப் பரவட்டும்!
  • ⚠️ இந்தக் கதை மற்றும் இதன் கதைக்களம் எனது சொந்த உருவாக்கம். எனது அனுமதி இல்லாமல் இதை நகல் எடுக்கவும், மீண்டும் வெளியிடவும், PDF ஆகப் பதிவேற்றவும் கூடாது. இது பதிப்புரிமை சட்டத்துக்கு எதிரானது. தயவுசெய்து ஆசிரியரின் உழைப்பை மதிக்கவும்.

மாறா 3

இரவில் மருத்துவமனையிலிருந்து அலுப்புடன் வந்த சம்ருதியை தான் பார்த்தார் வைத்தி.

முப்பது வயதாகிறது அவளுக்கு. மஞ்சள்காமாலை வந்து மனைவி இறந்து விட , இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தனியாளாக நின்று வளர்த்தார் வைத்தியநாதன்.

மூத்தவன் சாத்விக், இளையவள் சம்ருதி. சாத்விக் இயந்திர பொறியியல் படித்து வேலைக்கு சென்றவன் வைத்தியை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு ஒட்டும் உறவும் இல்லாமல் போய்விட்டான்.

அதன்பின் இடிந்து போய் விட்டார்..

பின், சம்ருதி தந்தையுடன் அண்ணனை சேர்த்து வைக்க எவ்வளவு போராடியும் அவர்களை இணைக்க முடியவில்லை. கோபத்தில் இருந்தவரை மனமிறங்க வைத்து ஒன்று சேர்க்க இருந்த வேளையில் அவன் விபத்தில் சிக்கி இறந்து போனான்.

மகன் இறந்த சோகத்தில் இருந்தவரை மீட்டுக் கொண்டு வந்தாள் சம்ருதி. அண்ணன் செய்த தவறை ஒரு போதும் செய்யக் கூடாது, தந்தை பார்க்கும் மாப்பிள்ளையை தான் கட்டிக்கொள்ளும் முடிவில் இருக்கும் மகளை எப்போதும் மெச்சிக்கொள்வார் வைத்தி.

அவளது பதினைந்து வருட உழைப்பு இன்று, சென்னையில் மிகப் பெரிய மருத்துவமனையில் பொதுநல மற்றும் இருதய நிபுணராக பணியாற்றி வருகிறாள். கை நிறைய சம்பாதிக்கவும் செய்கிறாள்.

மருத்துவம் படிக்கும் காலத்திலே ஒரு வேலையும் செய்ய விடாதவர் வேலைக்கு சென்று சோர்வாக வரும் மகளிடம் வேலை சொல்ல மனம் வரவில்லை அவருக்கும்.

இருக்கும் வரைக்கும் பார்ப்போம் அதன்பின் அவள் தான் வாழ வேண்டும் என்று அவளை அப்படியே வேலை சொல்லாமல் வளர்த்து விட்டார். இன்று மதி பேசியதை வைத்து இப்போது உள்ளுக்குள் பயந்து புலம்பி தவிக்கிறார்.

குளித்து முடித்து இரவு உணவை உண்ண வந்த மகளுடன் சேர்ந்து அமர்ந்தவர் தனக்கும் சேர்ந்து பரிமாறிக் கொண்டு சாப்பிட்டார்.

"அப்புறம் வைத்தி எப்படி இருந்தது உன்னுடைய டே?"

"வழக்கம் போல.." என்று சலிப்பாக சொன்னவர், இன்று நடந்ததை சொல்ல, அவளுக்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"அதென்ன வைத்தி வீட்டு வேலை செய்ய தெரியாத ஒரு பையனுக்கு நல்ல பொறுப்பான பொண்ணா கட்டி வைக்கிறாங்க? ஆனா, ஒரு வேலையும் செய்ய தெரியாத பொண்ணுக்கு பொறுப்பான பையனை கட்டித்தர மாட்டாங்களாமா?

இதென்ன கொடுமையா இருக்கு? பொண்ணுங்க வேலை பார்க்கவே பெத்துப் போட்டு இருக்காங்களா என்ன?" எனக் கேட்க, வைத்திக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"என்ன அமைதியா இருக்க வைத்தி பதில் சொல்லு?"

"எண்ணத்தை சொல்ல சொல்ற? அந்த காலத்துல சொல்லி வச்சிட்டாங்க பொண்ணுங்க வீட்டு வேலை பார்க்கணும் பசங்க வெளி வேலை பார்க்கணும். அதை நாம பாலோவ் பண்றோம்.

இப்போ காலம் மாறிடுச்சி அதுக்கேத்தபடி மாறினவங்களும் இருக்காங்க. சிலர் பழைய காலப்படியும் இருக்காங்க.அந்த அம்மாவை போல.." என பெருமூச்சை விட்டார்.

"நீ எந்த காலப்படி இருக்க?"

"எனக்கு தெரியல சம்மு பாப்பா.. ஆனா, நம்மல பார்த்துக்கிறதுக்காகவாது சில பேசிக் திங்க்ஸ் தெரிஞ்சு வச்சக்கணும் இல்லையா? யாரையும் சார்ந்து இருக்காம நமக்கு தேவையானதை நாமலே செஞ்சிக்க சில வேலைகளை தெரிஞ்சிக்கிறது நல்லது தானே பாப்பா?" என்றார்.

"அப்போ.. பேசிக் திங்க்ஸ் தெரிஞ்சவனையே என்னை சார்ந்து இருக்காம அவனை அவனே பார்த்துக்க கூடிய ஒரு மாப்பிள்ளையா பார்த்து எனக்கு கட்டி வை! நான் என் வேலை பார்க்கிறேன் அவன், அவனோட வேலைய பார்த்துக்கட்டும் என்ன ஓகேவா?"

"அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லே இருக்கலாமே?" என அவளுக்கு கேட்கவே முணுமுணுத்தார்.

"யோவ் வைத்தி யாரை நீ பருத்தி மூட்டைனு சொல்ற?" என எகிறய மகளை கண்டு பயந்தபடி, "ஐயோ! பாப்பா.. உன்னை இல்ல.. பொதுவா காமெடி சொல்லுவாங்கள அதை சொன்னேன். ரெண்டு பேரும் அவங்கவங்க வேலையை பார்த்துக்கிறதுக்கு கல்யாணம் எதுக்கு பாப்பா?"

"சரிஇஇஇ ! இப்ப நீ என்ன தான் சொல்ல வர?"

"இல்ல பாப்பா! நான் என்ன சொல்ல வர்றேனா?" என்று இழுத்தவருக்கு பயப்பருந்து உள்ளே உருல, எச்சில் கூட்டி விழுங்கினார்.

"நீ கொஞ்சம் கொஞ்சமா இப்போ இருந்தே வேலைப் பார்க்க கத்துக்கணும்னு சொல்ல வர்றேன் பாப்பா! கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்பட்டாம இருப்பேல.." என்று சொல்லி முடிக்கலையிலே வியர்த்து விட்டது அவருக்கு.

அவளோ யோசனையோடு தந்தையைப் பார்த்தவள், "ஏன் திமிங்கிலம்? வேலை எல்லாம் தெரிஞ்சு வச்சிட்டு போனா மட்டும் நான் கஷ்டப்பட மாட்டேனா?" என நக்கலோடு கேட்க, அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"என்ன வைத்தி பதிலை காணோம்?"

"கல்யாணத்துக்கு அப்புறம் நீ கஷ்டப்பட மாட்ட பாப்பா.."

"அப்படியா? எப்படி சொல்ற?"

"இத்தனை வருஷம் அனுபவம் பாப்பா.." என்றவர் சாப்பிட்டத் தட்டை எடுத்துக்கொண்டு நழுவிட அவளுக்கு அவரது கூற்று மட்டுப்படவில்லை.

வெளியே வந்தவரைப் பிடித்துக்கொண்ட சம்ருதி, "வைத்தி! எனக்கு புரியல நீ என்ன சொல்ல வர்ற?" என்றாள் கேள்வியாய்.

"அது பாப்பா.. உன்னை வச்சிட்டு நான் எவ்வளவு கஷ்டப்படுறேன் எனக்கு தெரியும். அது போல உன்னை கட்டிக்க போறவன் தான் கஷ்டப்பட போறான் நீ இல்ல.. சொ... ல்...ல வா... ர்..றேன்" என்று அவள் எதையோ தேடுவதை கண்டு ஒருவொரு எழுத்தாக உச்சரித்தவர், அவள் கட்டையை தூக்கியதும் 'விடு ஜூட்' என ஓட ஆரம்பித்தார்.

"யோவ் கிழவா.. ஒழுங்கா நில்லு! என்னை வளர்க்கிறது கஷ்டமா இருக்குன்னு சொன்னதும் இல்லாம வர்ற போறவனுக்காக பீல் பண்றியா? இதுல உனக்கு அனுபவமா? ஓடாம நில்லு யா.." என்று இவள் துரத்திக்கொண்டு பின் சென்றாள்.


"உண்மை தான் சொல்லுறேன் பாப்பா உன்னை கட்டிக்கிட்டு அந்த ஜீவன் தான் கஷ்டப்படுனும் நீ இல்ல!" என நக்கல் செய்தவாறு வாசலுக்கு ஓட அவளோ கட்டையோடு துரத்திக்கொண்டு வந்தாள்.

"யோவ் வைத்தி.. என்ன தைரியம் உனக்கு? ஓடாம நில்லு யா.." என அவள் துரத்து வருவதற்குள் 'ஓடிட்டேன்ல' என்று வீட்டை தாண்டி ஓடி விட்டார்.

"நீ வீட்டுக்கு தான் வரனும் அப்ப இருக்குயா உனக்கு.." என சாலையில் ஓடியவரிடம் கத்திச் சொன்னவள் கட்டையை கீழே போட்டபடி உள்ளுக்குள் சென்று விட்டாள்.


தந்தை மகள் நடந்தும் கூத்தை கண்டு வாயில் கை வைத்து திகைத்தார் கோமதி! பக்கத்தில் அமர்ந்திருந்த வளர்மதிக்கு இது பழக்கப்பட்டது போல அசட்டையாக இருந்தார்.

"என்ன வளரு அப்பாவ அடிக்க கட்டைய தூக்கிட்டு துரத்ததிட்டு வர்றா என்ன பொண்ணு இவ?" சாதாரண விஷயத்தைக்கூட ' இது போல நடக்குமா?' என்று பெரிதாக பார்த்தார் கோமதி.

" அட அவ அப்படி தான் கா! இந்த கூத்தை தினமும் பார்த்திட்டு தான இருக்கோம்.." என்றார் சலிப்பாக.

"வாயா போயானு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்கும்.."

"அவ அப்பாக்கு மட்டுமில்ல யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டா. இங்க இருக்க வயசானவங்க எல்லார் கிட்டயும் வாயா போயான்னு தான் பேசுவா. பெரியவங்களும் இவ சின்ன பிள்ளைனு சகச்சிட்டு போறாங்க..

குழந்தைங்க கூட சேர்ந்து பண்ற கூத்து இருக்கே.. இதெல்லாம் பொண்ணு தானா தோணும்.." என்று அவள் மீதுள்ள பொறாமையில் கோமதியிடம் அவளை பற்றி தவறாக சொன்னார்.

இயல்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நட்பாக பேசுவதை கூட அவர் தவறாக தான் பார்த்தார். அவரது மகனும் மருத்துவன் தான். ஆனாலும், அங்கிருக்கும் மக்கள் அவளையே தேடிப் போக, இவருக்கு அவள் மீது பொறாமை.

சம்ருதி, தன் வீட்டை சுற்றியிருக்கும் தெருக்களில் உள்ள மக்களுக்கு முடிந்தளவுக்கு இலவசமாக தான் மருத்துவம் பார்ப்பாள். பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டாள்.

ஆனால் ஒரு நாள் அவள் இல்லாத நேரத்தில் வளர்மதியின் மகன் மருத்துவர் என்று தெரிந்தும் அவசரமாக ஒருத்தர் அவனிடம் செல்ல, அவனும் அவரை பரிசோதித்து சென்று மாத்திரைகளை எழுதிக்கொடுத்தான்.

வந்தவர் பணம் எதுவும் எடுத்து வரவில்லை சம்ருதி போல எண்ணி. ஆனால், வளர்மதியோ அந்த நேரத்திலும் பணம் வசூலிப்பதில் குறியாக இருக்க, அன்றிலிருந்து யாரும் அவள் வீட்டிற்கு மருத்துவம் பார்க்க செல்வதே இல்லை.

எல்லாரும் சம்ருதியை தேடிச் செல்ல, இவருக்கு பொறாமையும் வன்மம் கூடிப் போனது.

அன்றிலிருந்து அவளை பற்றி யாரிடமாவது தவறாக சொல்லிக்கொண்டே இருப்பார். அவள் எது செய்தாலும் குத்தமாக தெரிந்தது. அவள் சேவை செய்தால் எரிந்தது.

அவருக்கு அவளை ஏதாவது சொன்னாதான் வாய் முணுமுணுப்பு அடங்கும் போல..

அதற்காகவே ஆள் கிடைத்தது போல கோமதியிடம் இல்லாததும் பொல்லாததுமாக அவளை பற்றிச் சொல்லி, கோமதியையும் அவரது கண்ணோட்டத்தில் பார்க்க வைத்ததும் இல்லாமல் சம்ருதியை பற்றி தவறாக சித்திரித்து விட்டார்.

இருவரும் அவளைப் பற்றி புரணி பேசிக் கொண்டிருக்க வெளியே சென்ற மாறன் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். வண்டியை நிறுத்தியவனுக்கு அவர்களது புரணி பேச்சி காதில் விழுந்தது.

சலிப்பாக அவர்களை பார்த்தவனுக்கு ஏகப்பட்ட கடுப்பு.

நன்றாக இருக்கும் தாயை கெடுப்பது இந்தச் சித்தி! முன்பு இருந்த வீட்டில் எல்லாருமே நன்றாக பழகக்கூடியவர்கள். ஆனால், அவர்களையே நொட்டம் சொல்லுவார் வளர்மதி. அதை அப்படியே நம்பும் கோமதி.

அது தான் அவனுக்கு பிடிக்காத ஒன்று..

அதற்காக இத்தனை வருடமாக சித்தி வீட்டிற்கு அருகே வீடு பார்க்காமல் கொஞ்சம் தூரமாக தனியாக இருந்தார்கள். ஆனால், சித்தியும் அம்மாவும் ஒரே முடிவாக நின்று சித்தி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியேற வைத்து விட்டனர்.

அவர்கள் இருவரும் ஒன்று சேருவது இவனுக்கு பெரிய தலைவலி. வேறு வழியில்லாமல் தாயின் உடல் நிலை கருதி அவர்கள் முடிவுக்கு ஒத்துக்கொண்டு வீடு மாற்றி வந்து விட்டான்.

விபத்தில் தந்தை இழந்து உடல் நிலை மோசமாக இருந்த தாயை தேற்றி, உடல்நலத்தை முன்னேற்றிக்கொண்டு வர மிகுந்த சிரமம் கொண்டான் மாறன்.

வீட்டில் சமையல் வேலையிலிருந்து அனைத்தும் பார்க்க ஆரம்பித்து விட்டான். இப்போது உடல் தேறி நன்றாக இருந்ததாலும் கோமதியை வேலை செய்ய விட மாட்டான்.

அவனே அத்தனையும் பார்த்து விடுவான். அதற்காக கல்யாணத்திற்கு பின் மகனையும் என்னையும் வீட்டையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பான மருமகளை தான் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார் கோமதி.

ஆனால், அவரது எண்ணத்தை நினைத்து விதி கேலிக் கொட்டிச் சிரித்தது.


விசையுந்தில் செல்லும் போது தான் விபத்து நடந்த காரணத்தினாலே அன்று அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தினாலே மகன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாலே இவருக்கு பயம் சூழ்ந்து கொள்ளும்.

ஆயிரம் முறை பத்திரம் சொல்லி வழியனுப்பி வைப்பவர் அவன் கடைக்கு சென்று அலைபேசி வழியே, 'வந்துவிட்டேன்' என்று சொன்ன பிறகு தான் இவருக்கு உயிரே வரும் அது வரைக்கு உள்ளுக்குள் பல கற்பனைகள் பண்ணி துடித்து கிடப்பார்.

அப்படி பட்டவரிடம் 'பைக் ரேசில ' கலந்து கொள்ளும் தனது பேராசையை சொல்லாமல் அவருக்கு தெரியாமல் நிறைவேத்த வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறான்.

அவர் மருந்து வீரியத்தில் நன்றாக உறங்கி போன பிறகு விஷாலை வரவழைத்து, சம்பவ இடத்தில் நின்று சாகசம் செய்வான்.

அவனுக்கு என்று தனியாக கே.டி.எம் விசையுந்து வைத்திருப்பது கூட கோமதிக்கு தெரியாது. அவன் இரவில் இவ்வாறு சென்று சாகசம் செய்வது தெரிந்தால் அவர் உயிரை விட்டு விடுவார். அவருக்கு தெரியாமல் நடக்கிறது இந்தக் கூத்து.


காலையில் கோமதி பேச்சை கேட்கும் நல்ல பையனாக இருக்கும் வெற்றி, இரவில் அவனுக்கு பிடித்தது போல மாறனாக இருக்கிறான்.

மகனை விட்டுக் கொடுக்காத கோமதி தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் தன் மகனை புகழ்ந்து தள்ளி விடுவார். மகன் நெஞ்சில் இடியை இறக்கப் போகிறான் என்று அறியாமலே எப்போது அவனது புகழாரத்தை தான் பாடிக்கொண்டிருப்பார்.

மகன் வரும் வரை வளர்மதியின் பேச்சை தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தவர், மகனை கண்டதும் அவரது கவனம் அவன் மீது சென்றது. இது வழக்கம் தான் என்று சலிப்பாக அக்காவை பார்த்தார் வளர்மதி.

"வளரு நாளைக்கு பேசுவோம் என் புள்ள வந்துட்டான்.."

"அது வழக்கம் தானே!"

கோமதி சிரிக்க வளர்மதி கண்டு கொள்ளாது சென்று விட்டார்.

"மதி, உனக்கு நல்லா பொழுது போகுமே!" என்றவனை கண்டு அவருக்கு வாயெல்லாம் பல்லாக இருக்க, சலிப்புடன் உள்ளே சென்றான்.


காலையில் வைத்த சாம்பார் மீதம் இருக்க, இருவருக்கும் தோசை ஊற்றினான் மாறன்.

இரவு உணவை முடித்து விட்டு கோமதி போட வேண்டிய மாத்திரைகளை கையில் கொடுக்க, வாங்கி போட்டவர் கொஞ்ச நேரத்திலே கண்ணயர்ந்தார்.

அவர் நன்றாக உறங்கிய பின் வெளியே வந்து அந்த தெருவை நோட்டம் விட்டான். முக்கியமாக அங்கிருக்கும் நாய்களுக்கு ரொட்டி வாங்கி போட சாப்பிட ஆரம்பித்தது.

கைகள் ரொட்டியை தூக்கி தூக்கி போட்டாலும் பார்வை என்னவோ தெருக்களில் தான் இருந்தது.

தோழியிடம் அலைபேசியில் பேசிக்கொண்டே வெளியே வந்த சம்ருதி, மாறனின் செய்யலை நோட்டம் விட்டாள்.

அவனது பார்வை போகும் திசையை அவளும் பார்த்தாள்.

சிலர் வீட்டில் கேமிரா இருப்பதும் சிலர் வீட்டிலும் இல்லாமல் இருப்பதை நோட்டம் செய்தான். ஒவ்வொரு தெருக்குள்ளையும் நுழைந்து மீண்டும் அதே இடம் வந்தான். நாய்களுக்கு ரொட்டி போட்டான்.

அவனது செய்கை எல்லாம் சந்தேகப் படும் படியாக இருந்தது!

'என்ன பண்றான் இவன்? இவன் பார்வை
, இவன் பண்றது எதுவும் புரியல? ஒருவேல திருடனா இருப்பானோ? என்னானு தெரியலையே..' என சந்தேகத்துடன் வீட்டுக்குள் சென்று விட அவனும் கொஞ்ச நேரத்தில் உள்ளே சென்று விட்டான்.
 
மறைத்தும் மறைந்தும்
மாறன் பேராசையை
மங்கை நோட்டம் விட.....

தலைவியே
திருடன் தான் உன் மனதை
திருட வந்த தலைவன்.....
 
Thank you so much akka
மறைத்தும் மறைந்தும்
மாறன் பேராசையை
மங்கை நோட்டம் விட.....

தலைவியே
திருடன் தான் உன் மனதை
திருட வந்த தலைவன்.....
 

Forum statistics

Threads
86
Messages
149
Members
49
Latest member
Deebika
Back
Top