பழைய வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும், டெம்போவில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டான் வெற்றிமாறன். அவன் பொருட்களையெல்லாம் தனியாளாக உள்ளே வைப்பதை கண்டு அவனுக்கு உதவி செய்ய வைத்தியநாதனும் அங்கு வந்தார்.
வீட்டில் வேலையெல்லாம் முடித்து விட்டு காற்றாட வெளியே அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது தான் வண்டி வந்து நின்றதை கவனித்தார்.
டிரைவரும், வெற்றி மட்டுமே பொருட்களை உள்ளே வைத்துக் கொண்டிருப்பதை கண்டு அவர்களுக்கு உதவிடச் சென்றார்.
" கொடுப்பா! நானும் கொஞ்சத்த எடுத்துட்டு போய் உள்ளே வைக்கிறேன்."
"வேணாம் பாட்னர் உங்களுக்கு எதுக்கு சிரமம்?" என்றான் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி.
"சும்மா வெட்டியா தான்பா படிச்ச பேப்பரை படிச்சிட்டு இருக்கேன். அதுனால எனக்கு சிரமம் இல்ல கொடு.." என அவன் கையிலிருந்த பொருட்களை வாங்கிக்கொண்டார்.
அவனும் அதிக எடையில்லாத பொருட்களை எல்லாம் அவரிடம் கொடுக்க, வாங்கி வாங்கி உள்ளே வைத்தார். கனமான பொருட்களையெல்லாம் டிரைவரும் அவனுமாக தூக்கிக்கொண்டு தாயிடம் கேட்டு அதனதன் இடத்தில் வைத்தனர்.
ஒருவழியாக ஜாமான்களை உள்ளே வைத்து விட்டு டிரைவர் கிளம்ப, அவரிடம் பேசிய பணத்தை கொடுத்துவிட்டு அனுப்பி வைத்தவன் வைத்தியை உள்ளே அழைத்து சென்றான்.
"அம்மா! பாட்னருக்கு ஒரு ஜூஸ் வித்தவுட் சுகர்.." என்று கூடத்திலிருந்து கத்திச் சொல்ல, "ஏம்பா.. நீயும்?" என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்.
"என்ன பண்ண பாட்னர்?உங்களுக்கு இனிப்பு கொடுத்தாலே உங்க பொண்ணு தான் ஊசியோட கண் முன்னாடி வந்து நிக்கிறாங்க! வாட் டூ டூ?" என்றான் கேலியாக..
அவரோ சலிப்பாகத் தலையாட்டியவர், "தம்பி இங்க வாயேன்.." என தன் பக்கம் அழைத்தார்.
"என்ன பாட்னர்?" என அவனும் ரகசியம் கேட்பது போல அருகே சென்றான்.
"காலையில கொண்டு வந்த சக்கரை பொங்கல் இருக்கா?" என ஹஸ்கி குரலில் கேட்டவரை செல்லமாக முறைத்தவன்"ஆனாலும் பாட்னர், உங்க பொண்ணு அவ்வளவு மிரட்டியும் உங்க வாயடங்கலையே!" என்றான் அளந்தப்பார்வையோடு.
"என்னப்பா பண்ண! இனிப்பு சாப்பிட்டு பழகின நாக்கு சட்டுனு மாத்திக்க முடியல! கண்ட்ரோல் பண்ண தான் நினைக்கிறேன் முடியலையே.." என்று உதட்டை பிதுக்க, புன்னகையுடன் இருப்பக்கமும் தலையசைத்தான்.
"கண்ட்ரோல் வேணும் பாட்னர்.. உங்க பொண்ணுக்கு நீங்க மட்டும் தான் இருக்கீங்கனு நினைச்சாலே ஆட்டோமேட்டிக்கா கண்ட்ரோல் ஆகிடும் பாட்னர்.." என அறிவுரை கூறினான்.
அவரோ, "நீங்க வேற தம்பி என் பொண்ணை நினைச்சாலே போதும் இனிப்ப பார்த்து ஊறின எச்சில் கூட வத்திப்போய்டும்.." என்றார் சிரித்தபடி, அவனும் கலகலவென சிரித்தான்.
"இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருந்துமே நீங்க பொண்ணுக்கிட்ட டிமிக்கி கொடுக்கிறீங்க!"
"அது அப்பப்ப.." என வழிந்தபடி சொல்ல, இருவரும் சிரித்தனர்.
உள்ளிருநது வந்த மதி, இருவருக்கும் ஜுஸ் எடுத்து வந்து கொடுத்தார். அவருக்கு 'நன்றி' உரைத்து விட்டுப் பருக ஆரம்பித்தார்.
"வீட்ல எல்லாம் நீங்க தான் தம்பி சொன்னான். உங்களுக்கு கஷ்டமா இல்லையா அண்ணா?"
" பழகிடுச்சி மா! என் மனைவி இறக்கும் போது என் பொண்ணு சின்ன வயசு. அப்ப எடுத்துக்கிட்ட வீட்டு பொறுப்பு இப்ப வரைக்கும் தொடருது. என்ன முதல்ல வேலைக்குப் போயிட்டு வீட்டு வேலையும் பார்க்கும் போது சிரமமா இருந்தது.
ஆனா, இப்ப இல்ல.. பாப்பாவ அனுப்பி வச்சிட்டாலே எனக்கு வேலை இல்ல. ரொம்பவே ப்ரீ தான். அவ வந்ததும் கொஞ்ச வேலை இருக்கும் சேர்ந்து கதை பேசியே வேலைய முடிச்சிடுவோம். அப்படியே நாட்கள் போயிடுச்சி மா..
இனி பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் இருக்க வாழ்க்கைய நினைச்சா தான்.." என்று குரல் கமற பேசினார்.
அவரது தோளை அழுத்தியவன், "வீட்டோட மாப்பிள்ளையா பாருங்க! பொண்ணு உங்களோடவே இருப்பாங்க" என்றான் ஆறுதலாய்.
"ஏம்பா என் பொண்ணை வச்சே சமாளிக்க முடியல இதுல மாப்பிள்ளை வேறயா? என் பொண்ண ஒரு அப்பாவி கையில புடிச்சி கொடுத்துட்டு, மலேசியா, தாய்லாந்து பேங்காங்னு ஊர் சுத்தலாம் நினைக்கிறேன் பா.."
"பொதுவா வயசான காசி, ராமேஸ்வரம் தானே போவாங்க?"
"அதெல்லாம் வயசானவங்க ஆன்மீக வழியில போறவங்க பா! எனக்கு என்ன வயசாக்கிடுச்சி? சுகர் இருக்கனாலே கொஞ்சம் ஓல்டு மேன் போல தெரியிறேன். மத்தப்படி நானும் யங்பா.."
அவரை ஏற இறங்க பார்த்தவன், "சரி தான் யங் மேன்! நல்ல பிளான் தான். ஆனா, நீங்க மட்டும் போறதா பிளானா? இல்ல..." என அவரை வம்பிழுக்க..
"தம்பி" என அவனை மதி அடக்கினார்.
வைத்தியோ, "போங்க தம்பி" என இவர் வெட்கப்பட்டார்.
"இருந்தாலும் நீங்க உங்க பொண்ணுக்கு எல்லா வேலையும் சொல்லி தர்றனும் அண்ணா! போற வீட்ல பார்க்கணும் இல்லையா? பையனா எல்லாம் செய்வான், பொண்ணு தானே பொறுப்பா பார்க்கணும்.."
"பார்க்கணும் தான் மா! ஆனா டாக்டருக்கு படிக்கிறாளேனு எந்த வேலையும் செய்ய விடல, இப்போ வேலைக்கு போறானு செய்ய விடல, வரும் போதே என் பொண்ணு டயர்டா வர்றா! அவளை வேலை செய்ய சொல்ல எனக்கு மனசு இல்ல!
அப்படியே நாட்கள் ஓட்டிட்டோம். தம்பி போல வீட்டை பொறுப்பா பார்த்துக்கிற மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைச்சா எனக்கு சந்தோசம் தான் மா" என அவர் விளையாட்டுக்கு சொல்ல, மதிக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது.
"அதெப்படி அண்ணா? பொண்ணுக்கு ஒரு வேலையும் சொல்லிக் கொடுக்காம பொறுப்பான பையன் கிடைக்கணும் சொல்றீங்க! உங்களை போலவே உங்க பொண்ணுக்கு சேவகம் பண்ண இன்னொரு பையனை தேடுறீங்களா? இது என்ன நியாயம்?
பையன் வீட்டு பொறுப்பை பார்த்துக்கணுமா? உங்க பொண்ணு ஆம்பிள பிள்ளை போல வேலைக்கு போவாளா? வீட்டை பார்த்துக்க மாட்டாளா?" எனக் கொதிக்க, வைத்தி திகைத்து போனார்.
"அம்மா! பாட்னர் விளையாட்டுக்கு தான் சொன்னார். நீ ஏன் மா சீரியஸ் எடுத்துக்கிற?" என கேட்டு பல்லைக் கடித்தான்.
"அப்படி இல்ல தம்பி. பொண்ணுன்னா
பொறுப்பா இருக்கணும் வீட்ல எல்லா வேலையும் பார்க்க தெரிஞ்சு இருக்கணும். அப்ப தான் போற வீட்ல அவ நல்லா வாழ்வா, இல்லைன்னா கஷ்டப்படுவா!
அண்ணா நீங்க உங்க பொண்ணுக்கு ஒவ்வொரு வேலையா கத்துக்கொடுங்க. அப்போ தான் அவ நீங்க நினைக்கிறது போல கஷ்டப்படாம வாழ்வா. இல்ல ஒவ்வொரு நாளும் அவ மாமியார் வாயில விழுவா.."
பையன வச்சிருக்க நானே சொல்றேன். என் புள்ள ரொம்ப நல்லவன். சொக்கத்தங்கம், பொறுப்பானாவன் தான், வீட்டு வேலை எல்லாம் பார்ப்பான். அதுக்காக உங்க பொண்ணு போல எதுவும் தெரியாத பொண்ணை எடுக்க முடியுமா? என்னால முடியாதனால தான் என் பையன பார்க்க விடறேன்.
இல்ல அவனை ஒரு வேலையும் செய்ய விட மாட்டேன் . கல்யாணத்துக்கு முன்னே பொறுப்பா பார்த்துக்கிறவன், கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நிம்மதியா இருக்கணும்.
வரப்போற பொண்ணு பொறுப்பா வீட்டைப் பார்த்துக்கணும். அப்படி ஒரு பொண்ணை தான் நான் பார்ப்பேன்.." என்று அவர் நகைச்சுவையாக சொன்னதுக்கு இவர் நேரடியாக பதிலடி கொடுக்க, வைத்தியின் முகம் வாடிவிட்டது.
"ம்ம்மா.. அமைதியா இரு.." என கண்ணைக்காட்ட, அதெல்லாம் பற்றிக் கவலை இல்லை என்பது போல, "சொல்றது சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம் அண்ணா.." என்றார் அசட்டையாக.
வேகமாக அங்கிருந்து கிளம்ப எழுந்தவர், "பரவாயில்லாப்பா.. தங்கச்சி சொல்றதும் சரி தானே.." என சங்கட்டமாக சொல்ல, மாறனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
" நான் வர்றேன் மா.. வர்றேன் தம்பி வீட்ல போட்டது போட்ட படி இருக்கு.." என்று கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்து விட்டு சொன்னவர் வெளியே செல்ல, அவரை தொடர்ந்து வந்தவன், "சாரி பாட்னர் எங்க அம்மா அப்படி தான். பொண்ணு, பையன் பிரிச்சி பார்க்குற ஆள்! அதான் அப்படி பேசிட்டாங்க தப்பா எடுத்துக்காதீங்க.." என்று கெஞ்சுதலாக கேட்டான்.
"ஐயோ எதுக்கு தம்பி சாரிலாம்.. உங்க அம்மா உண்மைய தானே சொன்னாங்க! வீட்டுக்கு மருமகளா போற பொண்ணு பொறுப்பா இருக்கணும் இல்லையா? அதை தான் அவங்க சொன்னாங்க! என்ன என் ஒரே பொண்ணு தாயில்லாத பொண்ணுன்னு செல்லமா வேலை சொல்லாம வளர்த்துட்டேன். என்ன பண்ண போறேன் தெரியல?
மாமியார் இடத்துல இருக்க யாரும் எதிர்பார்க்க தானே செய்வாங்க. அதெல்லாம் தப்பு சொல்ல முடியாது. ம்ம்.. என் பொண்ணோட வாழ்க்கை எப்படி அமைய போவுதோ பயம் எனக்குள்ள இருக்குப்பா. நான் இன்னும் என்னலாம் அனுபவிக்க இருக்கேனோ.."
"சில் அங்கிள்! நீங்க எதிர்பார்க்கிற மாதிரி தான் மாப்பிள்ளை வருவார். உங்கப் பொண்ணை நல்லா பார்த்துப்பார். கல்யாணத்துக்கு அப்புறம் பீல் பண்ணுவீங்க! இப்படிபட்ட மாப்பிள்ளை அமைவார் தெரியாம புலம்பிட்டு இருந்தோமே!" என்று சிரிக்க, அவரும் புன்னகையுடன்
விடைபெற்றார்.
உள்ளே வந்தவன் தாயை கடிந்து கொள்ள, அவரோ அசட்டை செய்து விட்டு உள்ளே சென்றார்.